1757ல் நிகழ்ந்த பிளாசிப் போரை அடுத்து
ஆங்கிலேயே ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது.
அன்று முதலே அதை எதிர்த்த போராட்டங்கள்
பகுதியளவில் சுதேசி மன்னர்களால்
மேற்கொள்ளப் பட்டன.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட காலத்தில்
(1757 முதல் 1947 வரை) அம்பேத்காரும்
ஈ வெ ராமசாமியும் முற்ற முழுக்க
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தீவிர
விசுவாசிகளாக இருந்தார்கள். ஏகாதிபத்தியத்தை
எதிர்த்தனுப்பி போராடிய மக்களின் தரப்பில்
நிற்காமல், கொடிய வெறிபிடித்த ஏகாதிபத்தியத்தின்
தரப்பில் நின்று பிரிட்டிசாரின் தாசானுதாசர்களாக
இருந்தார்கள்.
ஆக அரசியல் ரீதியாக, மக்களுக்கு எதிராகவும்
ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகவும் நின்றவர்கள்
அம்பேத்காரும் ஈ வெ ராமசாமியும். அவர்கள்
முழுநிறைவான முதலாளித்துவ
சீர்திருத்தங்களுக்காக நின்றவர்களும் அல்ல.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப்
போராட்டத்தில் வைத்தியநாத ஐயருக்கு
உறுதுணையாக இருந்தவர் முத்துராமலிங்கத்
தேவர். அப்போராட்டத்தில் ஈ வெ ராமசாமியின்
பங்கு என்ன?
1965ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தை வெறித்தனமாகவும் மூர்க்கத்
தனமாகவும் எதிர்த்தாரே ஈ வே ராமசாமி!
அவரை எப்படி முதலாளித்துவ சீர்த்திருத்தவாதி
என்று வரையறுக்கிறீர்கள்?
அம்பேத்காரும் ஈ வெ ராமசாமியும் pro imperialistஆக
இருந்தவர்கள். Pro imperialist எவரும் முதலாளித்துவ
சீர்திருத்தங்களுக்காக நிற்க முடியாது. ஏனெனில்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது
நிலப்பிரபுத்துவ எதிர்ப்புச் செயல்பாடுகளை
தீவிரமாக மேற்கொள்ளவில்லை. அப்படி
மேற்கொள்ள வேண்டிய தேவையும் பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்துக்கு இல்லை. எனவே பிரிட்டிஷின்
வேலைத்திட்டத்துக்கு உட்பட்டுத்தான் அம்பேத்காரும்
ஈ வெ ராமசாமியும் செயல்பட்டார்கள். இதையெல்லாம்
மறைத்து விட்டு, அம்பேத்காரும் ஈ வெ ராமசாமியும்
முழுநிறைவான முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள்
என்று வெள்ளையடிக்க முயல்வது சரியான மதிப்பீடு அல்ல.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக