வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

 கோவை குண்டுவெடிப்பை நிகழ்த்திய 

பயங்கரவாதிகளை முன்கூட்டியே 

விடுதலை செய்ய முடியாது!

அவர்களுக்கு ஜாமீனும் வழங்கக் கூடாது!

முதல்வர் ஸ்டாலின் உறுதி!

-------------------------------------------------------- 

பல ஆண்டுகளுக்கு முன்பு, 1998ல்

பெப்ரவரி 14ஆம் நாளில், 

கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு 

வைத்து அப்பாவிகளைக் கொன்றது 

அல் உம்மா என்னும் இஸ்லாமிய 

பயங்கரவாத அமைப்பு. 


கோவையில் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 

13 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான 

அல் உம்மா. குண்டு வெடிப்பில் 46 பேர் 

இறந்து போயினர். 2000 பேர் காயமுற்றனர்.


ஆண் பெண் குழந்தைகள் என்று 46 பேரைக் 

கொலை செய்த அல் உம்மா பயங்கரவாத

அமைப்பை அன்றைய தமிழக முதல்வர் 

(1996-2001) கலைஞர் அவர்கள் உடனடியாகத் 

தடை செய்தார்.


கலைஞரின் தலைமையில் இயங்கிய காவல்துறை 

முழுவீச்சில் செயல்பட்டு, குண்டு வைத்த 

பயங்கரவாதிகளின் தலைவன் எஸ் ஏ பாட்சா

உள்ளிட்ட 72 பேரைக் கைது செய்தது.


கொடிய இந்தக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் 

ஆயுள் தண்டனை விதித்தது. அதைத்தான் 

இக்கொலைகாரர்கள் இன்று வரை அனுபவித்துக் 

கொண்டு இருக்கிறார்கள்.

 

கலைஞர் என்றுமே சிறுபான்மையினரின் 

காவலராக இருந்து வந்தார். ஆனால் கலைஞரின் 

ஆடசியைக் கலைக்கும் அளவுக்கு, இஸ்லாமிய 

பயங்கரவாதிகள், பொது மக்களைக் 

குண்டு வைத்துக் கொலை செய்தால் அதைப் 

பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு 

கலைஞர் முட்டாள் அல்ல. கலைஞரின் காவல்துறை 

வெகு சிறப்பாகச் செயல்பட்டு, கொடிய 

பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி 

தண்டனை வாங்கிக் கொடுத்தது.


இஸ்லாமிய சிறைவாசிகளை முன்கூட்டியே 

விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு 

இயக்கத்தைத் தமிழ்நாட்டில் இஸ்லாமிய 

அடிப்படைவாதிகள் நடத்தி வருகின்றனர்.

கோவை குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 

72 பேரையும் முன்கூட்டியே விடுதலை 

செய்வதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம்.


இது பல நூறு கோடி ரூபாய் ப்ராஜக்ட்.

தமிழ்நாட்டில் போலி முற்போக்குகள் மற்றும் 

வேஷதாரிகள் நிறைய உண்டு. அவர்களில் 

பலர் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை 

செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி 

செமத்தியாக காசு பார்த்து விட்டனர். 


கைதிகளுக்கு சிறைத் தண்டனையில் தளர்வு,

சலுகை, தள்ளுபடி ஆகியவற்றை வழங்க 

தமிழக அரசுக்கு சட்டப்படி உரிமை உண்டு. 

ஆனால் குண்டு வைத்து அப்பாவிப் பொதுமக்களைக் 

கொன்ற பயங்கரவாதிகளுக்கு இந்தச் சட்டம் 

பொருந்தாது.


இதை அன்றைய முதல்வர் கலைஞரும் 

இன்றைய முதல்வர் ஸ்டாலினும் நன்கு 

அறிவார்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகளை 

முன்கூட்டியே விடுதலை செய்ய எந்தச்

சட்டமும் இடம் தரவில்லை.


தற்போது கொடிய பயங்கரவாதியான 

அல் உம்மா பாட்சா உச்ச நீதிமன்றத்தில் 

ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு 

விசாரணைக்கு வர உள்ளது. அதில் தமிழக 

அரசு தனது தரப்பை முன்வைத்து, இக்கொடிய 

பயங்கரவாதிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது 

என்று தெரிவித்து உள்ளது.


மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 

சட்டப்படிதான் நடந்து கொள்கிறார். அவரை 

இங்குள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் 

மிரட்ட முடியாது.


இங்குள்ள போலி முற்போக்குகள், போலி 

இடதுசாரிகள், போலி மாவோயிஸ்டுகள், 

போலி நக்சல்பாரிகள் ஆகியோர் இஸ்லாமிய 

அடிப்படைவாதிகளிடம் காசு வாங்கிக் கொண்டு 

புரட்சி வேஷம் போடுவார்கள். அவர்களை 

அம்பலப் படுத்துங்கள். அவர்களிடம் ஏமாந்து 

போய் விடாதீர்கள்.       

 ******************************************************       

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக