இதற்கு மாறானது டிஜிட்டல் எனப்படும் ஈரிலக்க முறையிலான
கடிகாரம். இக்கடிகாரத்தில் நேரமானது எண்களின் மூலமாகக்
காட்டப்படும். மேலே குறிப்பிட்ட 10 மணி 10 நிமிடம் என்பது
டிஜிட்டல் கடிகாரத்தில் 10:10 என்று எண்களின் மூலமாகக்
காட்டப்படும். இதுவே டிஜிட்டல் முறையாகும்.
மேலும் இம்முறையில் ஒரு செய்தியானது ஈரிலக்க எண்களாக
மாற்றப்பட்டு அனுப்பப் படும். அதாவது "அம்மா நலமாக
வந்து சேர்ந்தாள்" என்ற செய்தியானது 0,1, 0,1,,1, 0, 1,1,0, 0,1 என்பது
போன்று ஈரிலக்க வடிவில் மாற்றப்படும். பழைய அனலாக்
முறையில் செய்திகள் இவ்வாறு மாற்றம் அடைவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக