திங்கள், 14 பிப்ரவரி, 2022

 டி சிட்டர் மற்றும் மின்கோவ்ஸ்கி!

----------------------------------------------------

இரு விஞ்ஞானிகளின் மிகவும் பிரபலமான 

படங்களையே இங்கு கொடுத்துள்ளேன்.


முதல் படத்தில் இருப்பவர் (வலப்பக்கம்)

வில்லம் டி சிட்டர் (Willem de Sitter 1872-1934) 

இவர் டச்சு கணித நிபுணர் மற்றும் 

இயற்பியலாளர்.


இவர் டி சிட்டர் வெளியை (de Sitter space) 

உருவாக்கியவர். முப்பரிமாண வெளி

என்பது நியூட்டன் காலத்தோடு போய் 

விட்டது. பிரபஞ்சத்தைச் சரியாகப் 

புரிந்து கொள்ள வேண்டுமெனில்,

மூன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களைப் 

புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு டி சிட்டர் 

வெளி பயன்படும்.


இரண்டாம் படத்தில் (இடப் பக்கம்) இருப்பவர் 

மின்கோவ்ஸ்கி (Hermaan Minkowski 1964-1909).

இவர் ரஷ்யாவில் பிறந்தவர். இவர் ஐன்ஸ்டினின் 

ஆசிரியர். இவர் காலத்தை ஒரு பரிமாணமாகக் 

கொண்ட ஒரு வெளியை உண்டாக்கினார். அது 

இவர் பெயராலேயே மின்கோவ்ஸ்கி வெளி என்று 

அழைக்கப் படுகிறது.      

  

ஐன்ஸ்டினின் ரிலேட்டிவிட்டி தியரியைப் புரிந்து 

கொள்ள மேற்கூறிய இரண்டு விஞ்ஞானிகளும் 

உருவாக்கிய இரண்டு வெளிகளும் பயன்படும்.


மறவாதீர்!

டி சிட்டர் வெளி, மின்கோவ்ஸ்கி வெளி.


மறவாதீர்!

டி சிட்டர், மின்கோவ்ஸ்கி.


இந்தப் பெயர்கள் உங்களுக்கு நன்கு பரிச்சயமாகி 

விட வேண்டும். இவர்களின் வெளி (space) குறித்து 

மேலும் தேடிப் படியுங்கள்.


நீங்கள் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தேடினாலும்,

நான் எழுதியதைத் தவிர்த்து உங்களுக்கு 

எதுவும் தமிழில் கிடைக்காது.

******************************************************   




 



 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக