போலிக்கம்யூனிஸ்டுகளின் போர்க்குணமற்ற
பொருள்முதல்வாதத்தை
ஆர் எஸ் எஸ்சின் கருத்துமுதல்வாதம் வீழ்த்தி விட்டது!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
லெனின் மிக அழகாகச் சொன்னார்:
போர்க்குணமற்ற பொருள்முதல்வாதத்தை மிக
எளிதில் கருத்துமுதல்வாதம் வென்று விடும் என்று.
(போர்க்குணமற்ற பொருள்முதல்வாதம்)
போராடி வாகை சூடும் ஒன்றாக இல்லாமல்
போராடி வீழ்த்தப்படும் ஒன்றாக இருக்கும்
என்றார் லெனின்.
தமிழகத்தின் பிரபலமான போலிக் கம்யூனிஸ்ட்
கட்சிகளான CPI, CPM கட்சிகள் மெலிதானதும்
மிகவும் மேம்போக்கானதுமான பொருள்முதல்
வாதத்தையே கைக்கொண்டிருந்தன.
இவ்வளவு வலுவிழந்த பொருள்முதல்வாதத்தை
ஆர் எஸ் எஸ்சின் வலிமையான கருத்துமுதல்வாதம்
எளிதில் வீழ்த்தி விட்டது.
கோடானுகோடி மக்கள் கடவுளை வணங்குகிறார்கள்.
தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை கடவுளிடம்,
மதங்களிடம், பொளிச் சாமியார்களிடம்
தேடுகிறார்கள். இது அவர்களின் பின்தங்கிய
உணர்வுநிலையைக் காட்டும்.
பரந்துபட்ட மக்களின் உணர்வுநிலையை
மேம்படுத்தவும் அதை முற்போக்கானதாக
ஆக்கவும் பாடுபட வேண்டியது மார்க்சிஸ்டுகளின்
கடமை. இதற்கு மாறாக, மார்க்சிஸ்ட் கட்சியானது
மக்களின் பின்தங்கிய உணர்வுநிலைக்கு வால்
பிடிப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
ஆன்மிகத்தில் தீர்வு இல்லை என்றும்
மார்க்சியத்தில் மட்டுமே தீர்வு உள்ளது என்றும்
மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய மார்க்சிஸ்டுகள்
தாங்களே ஆன்மிகத்தில் தீர்வை நாடி நிற்பது
எவ்வளவு கேலிக்கூத்து!
--------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக