திங்கள், 7 மார்ச், 2022

 ரஷ்யா உக்ரைன் போர்!

ஒரு முன்கதைச் சுருக்கம்!

பிரஷ்னேவ் ஒரு உக்ரேனியரே!

-------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------- 

1917ல் ரஷ்யாவில் சோசலிஷப் புரட்சி லெனின் 

தலைமையில் நடைபெற்றது. அப்புரட்சி வெற்றி

பெற்றது. பாட்டாளிவர்க்கம் அரசு அதிகாரத்தைக் 

கைப்பற்றியது. அரசின் தலைவரான லெனின் 

சோஷலிசத்தைக் கட்டி எழுப்ப முயன்றார்.


இதுதான் சோஷலிசம் என்று எந்த விதமான 

ஒரு blueprintம் இல்லாத நிலையில், trial and error

என்ற முறையில் ரஷ்யாவில் சோஷலிசத்தைக் 

கட்ட முயன்றார் லெனின்.


1917ல் ரஷ்யப் புரட்சி. அதாவது ரஷ்யாவில் 

மட்டும் புரட்சி. அப்போது 1917ல் சோவியத் 

ஒன்றியம் உருவாகவில்லை. ஐந்து ஆண்டுகள் 

கழித்து, 1922 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் 

உருவாக்கப் பட்டது.


மனித குல வரலாற்றிலேயே இல்லாத அளவில் 

முதல் முறையாக பிரிந்து செல்லும் உரிமையையும் 

சோவியத் ஒன்றியத்தில் இணைந்த அத்தனை 

குடியரசுகளுக்கும் வழங்கினார் லெனின்.


1924ல் மரணம் அடைந்து விட்டார் லெனின்.

மரணத்துக்கு முன்னரான ஆண்டுகளில் 

பக்கவாதத்தால் பெரிதும் நோயுற்றிருந்தார் 

லெனின். எனவே சோஷலிஸக் கட்டுமானத்தை 

லெனின் மேற்கொள்ளவில்லை என்று எவர் 

ஒருவரும் அவர் மீது குறை காண இயலாது.

சுவிட்ச்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது 

போன்றதல்ல சோசலிஷக் கட்டுமானம்.


லெனினின் மறைவுக்குப் பின்னர் 1924ல் 

சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார் ஸ்டாலின்.

1924 முதல் 1954 வரை 30 ஆண்டுகள், தமது 

மரணம் வரை சோவியத்தை  ஆண்டார் ஸ்டாலின்.

எதையெல்லாம் சோசலிசம் என்று ஸ்டாலின் 

கருதினாரோ அதையெல்லாம் அடைவதற்கான 

உருப்படியான முயற்சிகளை ஸ்டாலின் 

மேற்கொண்டார்.


ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் குருச்சேவ், 

தொடர்ந்து பிரஷ்னேவ், இறுதியில் கோர்ப்பச்சேவ் 

என்று 1992 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் 

கலைக்கப் பட்டது. அதில் இருந்த குடியரசுகள் 

தனித்தனி நாடுகள் ஆயின.


1922 டிசம்பர் முதல் 1992 டிசம்பர் வரையிலான 

70 ஆண்டுகள் வாழ்ந்திருந்த சோவியத் ஒன்றியத்தில்

மெய்யான அக்கறையுடனும் உறுதியுடனும் 

சோஷலிசத்தைக் கட்டியமைக்க முயற்சிகள் 

தீவிரமாகவே மேற்கொள்ளப் பட்டன. என்றாலும் 

நிகர விளைவு சோசலிசம் கட்டப்படவில்லை 

என்பதே.


போரிஸ் எல்ட்சினும் அடுத்து விளாதிமிர் புடினும்

ரஷ்யாவை முழுமையான முதலாளித்துவப் 

பொருளாதாரம் செயல்படும் நாடாக மாற்றினார்கள். 

ஒரு கட்சி ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு பல கட்சி 

ஆட்சி முறை ரஷ்யாவில் கொண்டு வரப்பட்டது.


நவம்பர் 1991ல் அன்றைய ரஷ்ய அதிபர் போரிஸ் 

யெல்ட்சின் CPSU என்னும் கம்யூனிஸ்ட் கட்சியை

லெனினும் ஸ்டாலினும் உறுப்பினர்களாக இருந்த

கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தார்.

(CPSU = Communist Party of Soviet Union) 

         


பின்னர் 1993ல் ரஷ்யாவில் மார்க்சிய லெனினிய 

தத்துவ அடிப்படையில் அமைந்த கம்யூனிஸ்ட் 

கட்சி உருவாக்கப் பட்டது.இது CPSU கட்சியின்

தொடர்ச்சி என்று கூறப்பட்டது. இக்கட்சியின் பெயர்

CPRF ஆகும்.

(CPRF = Communist Party of Russian Federation)


CPRF எனப்படும் இக்கட்சி ரஷ்யாவில் இன்றளவும் 

இருக்கிறது; செயல்பட்டு வருகிறது. ரஷ்ய

நாடாளுமன்றமான அரசு டூமாவில் (State Duma)  

இக்கட்சி சிறிது இடங்களைப் பெற்றுள்ளது.


ரஷ்யா குறித்த ஒரு கால அட்டவணையைப் 

(TimeLine) பார்ப்போம்.

1917க்கு முன் ஜாரின் ரஷ்யா 

1917ல் போல்ஷ்விக் ரஷ்யா 

1922ல் சோவியத் ஒன்றியம் 


1924ல் லெனின் மரணமும் ஸ்டாலின் அதிபர் ஆதலும்.

1924-1954 சோஷலிசத்தைக் கட்டுவதற்கான 

ஸ்டாலினின் முயற்சிகள்.

1954ல் குருச்சேவ் பதவியேற்பு.

1964ல் பிரஷ்னேவ் CPSU பொதுச்செயலாளர் ஆதல்.

(பிரஷ்னேவ் ஒரு உக்ரேனியர் என்று வாசகர்கள் 

அறிந்து கொள்ள வேண்டும்). 

        

1968 ஆகஸ்டில் செக்கஸ்லோவேகியா மீது 

சோவியத் ஒன்றியம் படையெடுப்பு.

(செக் நாட்டின் திருத்தல்வாத அலெக்சாண்டர் டூப்செக் 

அரசைத் தூக்கி எறிந்து விட்டு, புரட்சிகர அரசை

நிறுவும் பொருட்டு இப் படையெடுப்பு என்று 

சொன்னது CPSU. (எப்பேர்ப்பட்ட கயமை பாருங்கள்!)


அலெக்சாண்டர் டூப்செக் என்ற பெயர் 

வாசகர்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் 

இருக்கிறது?


வார்சா ஒப்பந்த அடிப்படையில்தான் இந்தப் 

படையெடுப்பு என்பதையும் வாசகர்களுக்குச் 

சொல்லுகிறேன். அமெரிக்கக் கயமைக்குப் பெயர் 

நேட்டோ (NATO) என்றால் சோவியத் கயமைக்குப் 

பெயர் வார்சா ஒப்பந்தம் (Warsa pact). இரண்டுமே 

ராணுவ ஒப்பந்தங்கள்தான். இரண்டுமே அந்தந்த 

ஏகாதிபத்தியத்துக்குச் சாதகமாக மற்ற நாடுகளின் 

மீது படையெடுத்து ஒடுக்குவதற்காகத்தான்.

வார்சா = போலந்து நாட்டின் தலைநகர்.       


1978ல் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ஒன்றியத்தின் 

படையெடுப்பு.


2022ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு.

இது வரையிலான கால அட்டவணை போதும்.


இன்று அமெரிக்க ரஷ்யா ஆகிய இரண்டுமே 

ஏகாதிபத்திய நாடுகள்தான்! இரண்டுமே 

தங்களின் சுயலாபத்துக்காக மற்ற நாடுகளின் 

மீது படையெடுத்த வரலாறு கொண்டவைதான்.



மேற்கூறிய எல்லா விஷயங்களையும் நன்றாக 

மனதில் பதித்துக் கொள்ளுங்கள். அடுத்து 

எழுதப்பட இருக்கும் உக்ரைன் மீதான 

ரஷ்யாவின் போர் குறித்து எழுதப்படும் 

கட்டுரையைப் புரிந்து கொள்ள மேற்கூறிய 

விஷயங்கள் பயன்படும்.

****************************************************

    

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக