பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும்
அது தரும் படிப்பினையும்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
1) பஞ்சாப்பில் மொத்தம் 117 இடங்கள். தமிழ்நாட்டில் 234.
அதில் பாதி பஞ்சாப் என்று நினைவு கூருங்கள்.
2) 117ல் 92 இடங்களைப் பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி.
(காங்கிரஸ் = 18; பாஜக = 2; அகாலி தளம் = 3;
பகுஜன், சுயேச்சை தலா 1).
3) வாக்கு சதவீத விவரம்:
ஆம் ஆத்மி = 42.01
காங்கிரஸ் = 22.98
அகாலி தளம் = 18.38
பாஜக = 6.60.
4) மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் வெற்றி
என்பது 77 சதவீத இடங்கள் ஆகும்.
5) திமுக பிரசாந்த் கிஷோர் என்னும் பார்ப்பனரை
தேர்தல் வியூக நிபுணராக அமர்த்தி, அவருக்கு
ரூ 375 கோடி சம்பளம் கொடுத்து 2021 தேர்தலில் வெற்றி
பெற்றது. ஆனால் கேஜ்ரிவால் அப்படி எந்த நிபுணரையும்
அமர்த்தவில்லை. அவர்களுக்கு ஊதியம் வழங்க
ரூ 375 கோடியும் அவரிடம் கிடையாது. பணபலத்தின்
அடிப்படையில் திமுக பெற்ற வெற்றியைப் போன்று
இழிந்த வெற்றி அல்ல கேஜ்ரிவாலின் வெற்றி!
6) பஞ்சாப் நிலப்பிரபுத்துவக் கூறுகள் நிறைந்த ஒரு
மாநிலம் (feudal state). இங்கு சீக்கியர்கள் அதிகமாக
வாழ்கிறார்கள். சீக்கியர்கள் மதஅடிப்படைவாதிகள்.
அவர்களின் கட்சியான சிரோமணி அகாலிதளம்
வெறித்தனமான feudal கட்சி. பஞ்சாப் மாநில காங்கிரசும்
feudal கூறுகளால் நிரம்பிய கட்சியே.
7) மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து
பஞ்சாப்பில் உள்ள நிலப்பிரபுத்துவ சக்திகள்
வெறித்தனமான போராட்டத்தை நடத்தின. இந்தியாவிலேயே
மற்ற எந்த மாநிலத்தையும் விட, மிக அதிகமான
நிலப்பிரபுத்துவக் கூறுகள் கொண்ட மாநிலம் பஞ்சாப்.
எனவே இந்தியாவின் ஆகப் பிற்போக்கான மாநிலம் பஞ்சாப்.
8) பஞ்சாப்பில் பாஜவுக்குச் செல்வாக்கு கிடையாது.
பாஜகவின் வாக்கு அங்கு 2 சதவீதம்தான். பஞ்சாப்பில்
பெரிய கட்சிகள் இரண்டுதான். 1. காங்கிரஸ் 2. அகாலிதளம்.
9) இந்த இரண்டும் இழிந்த FEUDAL கட்சிகள். இந்த இரண்டு
கட்சிகளையும் தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி
பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஒரு ANTI FEUDAL கட்சி
ஆகும்.
10) இந்திய அரசியலில் முன்பு போல feudal கட்சிகளுக்கு
மக்கள் ஆதரவளிப்பதில்லை. anti feudal கட்சிகளையே
மக்கள் இன்று நாடுகிறார்கள்.
11) மூன்று வேளாண் சட்டங்களை மூர்க்கத் தனமாக
எதிர்த்ததில் பஞ்சாப்பின் நிலப்பிரபுத்துவப் பிற்போக்குச்
சக்திகளின் பங்கு அதிகம். எனவே இங்கு நியாயமாக
நிலப்பிரபுத்துவக் கட்சிகளான காங்கிரஸோ அல்லது
அகாலி தளமோ வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
12) ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நிலப்பிரபுத்துவ
எதிர்ப்புக் கடசியான ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.
அதுவும் சாதாரண வெற்றி அல்ல. காங்கிரசுக்கும்
அகாலி தளத்துக்கும் மரண அடி கொடுத்துள்ளார்
கேஜ்ரிவால்.
13) எனவே பஞ்சாப் தேர்தலின் படிப்பினை இதுதான்.
இனி இந்தியாவில் feudal கட்சிகளுக்கு எவ்வித
எதிர்காலமும் கிடையாது.
14) முற்போக்கு என்றால் என்ன? feudal கட்சிகளை
எதிர்ப்பதும், anti feudal கடசிகளை ஆதரிப்பதும்
முற்போக்கு ஆகும்.
15) இதற்கு உதாரணம் வேண்டுமா?
Feudal கட்சியான திமுகவை ஆதரிப்பது பிற்போக்கு!
Anti feudal கட்சியான கமலின் மநீமவை ஆதரித்தால்
அது முற்போக்கு.
*******************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக