உங்கள் கவனத்துக்கு சில உண்மைத் தகவல்கள்!
21-5-1991 அன்று ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரும்புதூரில் சதிகாரர்களால் கொல்லப்பட்டார். அதற்கு சரியாக, “ஒரே மாதம் கழித்து”, அதாவது 21-6-1991 அன்று, “ராஜீவ் காந்தி பவுண்டேஷன் ( Rajiv Gandhi Foundation) ” என்று ஒரு “என் ஜி ஓ ( NGO)” அறக்கட்டளை டில்லியில் ஆரம்பிக்கப் படுகிறது! சோனியா தான் அதற்குப் பொறுப்பு!
1993-ல், ராஜீவ் காந்தி ஃபௌண்டேஷனுக்கு, ஒரு கிளை ( Branch) இங்கிலாந்தில் ஆரம்பிக்கப் படுகிறது. சோனியா காந்தி முன்னிலையில் இதற்கான “பிரேரணையை ( Motion) ", பிரிட்ட்ஷ் அரசு நிறைவேற்றுகிறது!
அதே ஆண்டு, சோனியா, அமெரிக்கா சென்று, அங்கும் “ராஜீவ் காந்தி ஃபௌண்டேஷன் கிளை ஒன்றைத் துவக்க ஏற்பாடுகளை செய்கிறார்.
இதே 1993-ல், “ ஜார்ஜ் சோரோஸ் ( George Zoros) ” என்னும் அமெரிக்கக் கோடீஸ்வரரும், அமெரிக்காவின் நியூயார்க்கில், “ஓப்பன் சொஸைட்டீஸ் ஃபௌண்டேஷன் (Open Societies Foundation ) ” என்னும் பெயரில் ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கிறார்! ( இவர் தான் இப்போது மோடிஜிக்கு எதிராகவும், பா ஜ க ஆட்சிக்கு எதிராகவும், இந்தியாவில் பல குழப்பங்களை விளைவிக்க, ஏராளமான நிதி உதவியை செய்து வருவதாக சொல்லுகிறார்கள்! விவசாய தரகர் போராட்டத்தை நடத்தப் பணம்கொடுத்ததும் இவரே! காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் நிதி போவதாக சொல்லுகிறார்கள்)
1994, டிசம்பரில், “ஏஷியா பஸிபிக்கின் ஜனநாயகத் தலைவர்களின் மன்றம் (Asia Pacific Democratic Leaders Forum ) ” என்னும் ஒரு “ அரசு சாரா அமைப்பு ( NGO ) ” ஆரம்பிக்கப் படுகிறது. இதன் குறிக்கோள், “சுதந்திர காஷ்மீர்” என்பதாகும். ராஜீவ் காந்தி பவுண்டேஷனின் தலைவி என்ற முறையில், சோனியா, இந்த அமைப்பின் இணைத் தலைவி ஆகிறார். (ஆம்! காஷ்மீரைத் தனி நாடாக்க முயலும் ஓர் அமைப்பில் சோனியா உறுப்பினர்!)இதில் உள்ள மற்ற உறுப்பினர் அனைவரும் “அமெரிக்க தாஸர்கள்”. இதற்கு பெரும் நிதி அளித்துள்ளது, நான் முன்னால் குறிப்பிட்டுள்ள “ஓப்பன் சொஸைட்டீஸ் ஃபௌண்டேஷன் “ தலைவர் ஜார்ஜ் சோரோஸ், தான் என்பது குறிப்பிடத் தக்கது!
1999-ல் 'காந்தஹார்' விமானக் கடத்தல் நடக்கிறது. அந்த விமானம் காந்தஹாரில் இறங்குவதற்கு முன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில், எரிபொருள் நிரப்ப தரை இறக்கப் படுகிறது. எமிரேட்ஸ் அதிகாரிகள், அமெரிக்க தூதரை, விமான நிலையத்துக்குள் அனுமதிக்கிறார்கள்; ஆனால் இந்திய தூதரை அனுமதிக்க வில்லை.
அந்த சமயத்தில் ஆப்கானிஸ்தானத்தைத் தாலிபான் ஆட்சி செய்கிறார்கள். அப்போது அமெரிக்கா , ரஷ்யாவுக்கு எதிராக தாலிபானை ஆதரிக்கிறது. முதலில் கடத்தல்காரர்கள் 36 பயங்கரவாதிகளை விடுவிக்கக் கோருகிறார்கள். பின்னர், மசூத் அஸார், உள்பட மூன்று பேரை விடுவிக்கக் கோருகிறார்கள். அந்தப் பெயர்களில் ஒன்று, “லத்தீஃப்”. ஆனால் அவர் விடுவிக்கப் பட வில்லை.இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவின் “ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI ) , மசூத் அஸாரை, இந்திய சிறைகளில், 1995-1998 கால கட்டத்தில் பல முறை பேட்டி (!) கண்டுள்ளது. அதற்கு அனுமதி அளிக்கப் படுகிறது. விடுதலைக்குப் பிறகு மசூத் அஸார், பாகிஸ்தான் சென்று, “ஜெய்ஷ் ஈ முஹமது” என்னும் பயங்கரவாத அமைப்பைத் துவக்குகிறார். இதன் குறிக்கோளும், காஷ்மீரை விடுவிப்பதே!
2001, ஜூன் மாதம், சோனியா அமெரிக்கா சென்று 5 நாட்கள் தங்கினார்.ஆனால் அதற்கு முன் இங்கிலாந்துக்கும், ஐஸ்லாந்துக்கும் சென்றிருந்தார். அமெரிக்காவில், சோனியா, “ கவுன்ஸில் ஆஃப் ஃபாரின் ரிலேஷன்ஸ் ( Council of Foreign Relations ) ” உடன் ரகசியக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதன் பின் 13-12-2001 ல், நம் பாராளுமன்றத்தைத் தாக்கினார்கள். அதற்கு கொஞ்ச நேரம் முன்பாக,சோனியா பாராளுமன்றத்தை விட்டுக் கிளம்பிப்போய் விட்டார்!
2004-ல் சோனியா, தேர்தலில் ஜெயித்த பிறகு, அரசு அமைக்க முயற்சித்ததற்கு துணை நின்றவர்கள் ஹர்ஷ் மண்டர், அருந்தது ராய் ஆகியோரே. அவர்கள் இருவரும் ஜார்ஜ் சோரோஸின் இந்திய ஜால்ராக்கள்.
அர்பன் நக்ஸல் ( Urban Naxals ) களுக்காக மனித உரிமை சட்ட “நெட் ஒர்க்” வேலை செய்கிறது. காஷ்மீர் பிரிவினை வாதிகள், ராஜீவ்காந்தி ஃபௌண்டேஷனுக்கு பங்காளிகள். இந்த அமைப்புக்கு ஜார்ஜ் சோரோஸிடம் இருந்து நிதி கிடைக்கிறது.
2008-ல் சோனியா, ராஹுலுடன், சைனாவுக்குப், போய், அங்கு, சைனா கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டு விட்டு திரும்புகிறார்.
28-5-2010ல், இந்திய அரசு 25 பாகிஸ்தானி தீவிரவாதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்தது. இவர்களில் ஒருவர், நான் முன்பு ஞாபகம் வைத்துக் கொள்ளச் சொன்ன “லத்தீஃப்”
2004 முதல் 2014 வரையிலும் ஆன காலத்துக்கு சோனியா வெளிநாடுகள் போன தகவல்கள் அரசிடம் இல்லை என்று சொல்லுகிறார்கள். 2011-க்குப் பிறகு, மருத்துவ சிகிச்சை என்று சொல்லி, பல தடவைகள் சோனியா அமெரிக்கா போய் இருக்கிறார். 30-11-2015 ல் கூட 3 நாட்களுக்கு மருத்துவ சோதனைக்காக அவர் அமெரிக்கா போய் வந்துள்ளார்.
2-1-2016 அன்று பதான்கோட்டில் ஒர் பயங்கரவாத சம்பவம் நிகழ்ந்ததே அதனை நடத்தியதும் " தன் விடுதலைக்கு நன்றி தெரிவித்த" இதே ”லத்தீஃப்” தான்.
சோனியாவின் பயணங்களின் ரகசியம் நட்வர்சிங்குக்கு நன்றாகத் தெரியும்.
இவை எல்லாம் நமக்கு வெளிப்படையாகக் கிடைக்கும் தகவல்கள்.இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்துப் பாருங்கள். தேசத் துரோகி யார் என்பது நன்கு தெரிந்து விடும். சிலரது ஆலோசனைப்படி, அப்படிப் பட்டவர்களோடு நெருக்கமாக இருக்கும் நம்மவர்களின் முட்டாள்தனமும் நன்கு புரிந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக