வெள்ளி, 25 மார்ச், 2022

நவீன ராணுவப் போர்த்தந்திரம்!
------------------------------------------------
என்னுடைய கட்டுரையில் கூறப்பட்டுள்ள 
அனைத்தும் நிரூபிக்கப்பட்ட 
உண்மைகளாகும். பைனாமியல்  தேற்றம் 
எவ்வாறு நிரூபிக்கப்பட்ட ஒன்றோ,
டி மோவிர் தேற்றம் (De Moivre's theorem) 
எவ்வாறு நிரூபிக்கப்பட்ட ஒன்றோ, 
அவ்வாறே உலகப்போர் வராது என்பது 
இக்கட்டுரையில் கணித ரீதியாக 
நிரூபிக்கப் பட்டுள்ள ஒன்றாகும்.

இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள 
வேண்டுமெனில், Modern Military Strategy பற்றிய 
தெளிந்த அறிவு வேண்டும். முதலாம் உலகப் 
போர் 1919ல் முடிவடைந்தது. இன்று 
நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. எனவே நூறு 
ஆண்டுக்கு  முந்தி முதலாளித்துவம் எப்படி 
நடந்து கொண்டதோ, அதே போலத்தான் 
இப்போதும் நடந்து கொள்ளும்  என்று 
குட்டி முதலாளித்துவம் கருதுகிறது.

இந்த நூறு ஆண்டுகளின் மாற்றத்தை குட்டி 
முதலாளித்துவம் கணக்கில் எடுக்கவில்லை; 
ஆனால் உலக முதலாளித்துவம் கணக்கில் 
எடுக்கிறது.

எனவே இன்று இந்த 2022ல் உலக 
முதலாளித்துவமோ அல்லது 
ஏகாதிபத்தியங்களோ எப்படி எப்படி காய் 
நகர்த்துகிறார் என்று துல்லியமாகத் தெரிய 
வேண்டும். அதற்குத்தான் Modern Military Strategy 
பற்றி சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். 
அதைத்  தெரிந்து கொள்ளாமல் இந்தக் 
கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது..

உலகெங்கும் உள்ள ராணுவப் பயிற்சிக் 
கல்லூரிகளின் curriculum மற்றும் syllabusல் 
Modern Military Strategy இடம் பெற்று உள்ளது. 
இந்தியாவின் ராணுவப் பயிற்சிக் கல்லூரியான 
IMA எனப்படும் Indian Military Academy
டேராடூனில் உள்ளது. அங்கு ராணுவ 
அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் கல்வியிலும் 
பயிற்சியிலும் 
அ) Modern Military Strategy 
ஆ) Nash equilibrium
இ) Game theory
ஈ) MAD doctrine ஆகியவையெல்லாம் உள்ளன.

அவற்றில் ஒரு முழுமையான அறிவு இருந்தால் 
மட்டுமே உலக முதலாளித்துவம் இன்று 
என்ன செய்யும், அதன் போர்த்தந்திரம் என்ன 
என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.

எனவே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ 
என்ற ரீதியில் எதையேனும் கூறுவது நகைப்புக்கு 
இடமாகும். உரிய பதில் சொல்ல இயலாமல், 
திருத்தல்வாதம் என்று கூறுவது சொற்காமுகம் 
(phrase mongering) ஆகும். அது கேலிக்கிடமாகும்.
     
எனவே இன்றைய சூழலில் உலக முதலாளித்துவ 
முகாமில் உள்ள எந்த ஒரு state actorம் அதாவது 
எந்த ஒரு நாடும் நாஷ் சமநிலையை மீற இயலாது.

இன்று உலகில் ஒரே ஒரு முகாம்தான் 
உள்ளது. லெனின், ஸ்டாலின் காலத்திலும் 
மாவோ காலத்திலும் உலகில் இரண்டு 
முகாம்கள் இருந்தன. முதலாளித்துவ 
முகாம், சோஷலிச முகாம் என்று இரண்டு 
முகாம்கள். ஒன்றுக்கொன்று பகையான 
இரண்டு முகாம்கள். இன்று ஒரே ஒரு 
முகாம்தான்.  எனவே நாஷ் சமநிலையை 
மீறுவதற்கான probability குறைவு.

இதற்கு முன்பு வடகொரியா அணுவெடிப்புச் 
சோதனையை நடத்தியபோது, 2017ல் 
நாஷ் சமநிலை மீறப்படாது என்று அறிவியல் ஒளி 
ஏட்டில் நீண்டதொரு கட்டுரை எழுதினேன். நான் 
சொன்னது உண்மை ஆனது. 
நான் சொன்னதை மீறி எதுவும் நடக்கவில்லை.

எனவே நாஷ் சமநிலையை எவரும் மீறப் 
போவதில்லை. எனவே உலகப்போர் 
வரப்போவதில்லை.
இதை நிரூபித்துள்ளேன்.
(புள்ளியியல் ரீதியாகவும்  கணித ரீதியாகவும்)

உங்களில் யார் வேண்டுமானாலும் இதை 
disprove செய்யலாம். உலகப்போர் வருமா 
என்று கேட்டால் இது ஒரு science subject. உலக 
முதலாளித்துவம் எப்படிக் காய் நகர்த்தும் 
என்பது பற்றிய அறிவுடைமை இல்லாமல் 
இதற்குப் பதிலளிக்க இயலாது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக