மாயாவதியின் படுதோல்வி எப்படி நிகழ்ந்தது?
யார் காரணம்? ஓர் பகுப்பாய்வு!
------------------------------------------------------------------
உபியில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற இடங்களில்
ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி
வெற்றி பெற்றுள்ளது. 12.88 சதவீதம் வாக்குகளைப்
பெற்றிருந்தும் பகுஜன் கட்சி ஒரே ஒரு சட்ட மன்ற
இடத்தை மட்டுமே பெற முடிந்திருக்கிறது.
அதே நேரத்தில் வெறும் 2.33 சதவீதம் வாக்குகளை
மட்டுமே பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில்
வெற்றி பெற்றுள்ளது.
12.88 சதவீத வாக்குகள் இருந்தும் ஒரே ஒரு இடம்தான்
பகுஜன் கட்சிக்குக் கிடைத்தது என்றால், அது ஏன்?
எப்படி?
மாயாவதியின் வாக்கு வங்கி ஒரு காலத்தில் உபியின்
மொத்த தலித்துகளையும் கொண்டிருந்தது.உபியின்
தலித்துகள் பிரதானமாக நாலைந்து சாதிகளைச்
சேர்ந்தவர்கள். இதில் ஜாதவ் என்னும் சாதியைச்
சேர்ந்தவர் மாயாவதி.
உபியில் அமித்ஷா தலையிட்டு social engineering மேற்கொண்டு
ஜாதவ் அல்லாத ஏனைய தலித் சாதிகளை பாஜகவின்
ஆதரவு வட்டத்துக்குள் கொண்டு வந்தார். இதன் பிறகு
மாயாவதியின் வாக்கு வங்கி ஜாதவ் சாதியை மட்டும்
கொண்டதாகச் சுருங்கியது.
மாயாவதியின் வாக்கு வங்கியில் அடுத்த முக்கியமான
பிரிவு இஸ்லாமியர்கள். மாநிலத்தில் மொத்தம் உள்ள
இரண்டரைக் கோடி முஸ்லிம்களில் கணிசமான பகுதியினர்
மாயாவதியின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் மாயாவதியின் வாக்கு வங்கியில் உள்ள
இஸ்லாமியர்கள் மாயாவதியின் பகுஜன் சமாஜ்
வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை. அதற்கு மாறாக,
மிகவும் தெளிவாக ஒரு முடிவு எடுத்து, சமாஜ்வாதி
கடசியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.
பாஜகவை எதிர்த்து மாயாவதியின் வேட்பாளர்களால்
வெற்றி பெற முடியாது என்றும் அகிலேஷ் யாதவ்வின்
வேட்பாளர்களால்தான் வெற்றி பெற முடியும் என்று
உபியின் இஸ்லாமிய சமூகம் கணித்தது. எனவே
மாயாவதியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால்
அது பாஜகவின் வெற்றிக்கு வழி வகுத்து விடும் என்று
முடிவெடுத்த உபி இஸ்லாமியர்கள் தேர்தலின்போது
சிந்தாமல் சிதறாமல் தங்களின் வாக்குகளை
சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களுக்குச் செலுத்தினர்.
இதன் விளைவாக சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில்
வெல்ல முடிந்தது.
இஸ்லாமியர்களின் இந்த முடிவே பகுஜன் கட்சியின்
வரலாறு காணாத படுதோல்விக்குக் காரணமாக
அமைந்தது.
உபி தேர்தலில் இஸ்லாமிய சமூகம் முற்றிலும் மதரீதியாக
முடிவெடுத்து, ஒரு religious polarisationஐ ஏற்படுத்தியது.
இதனால் அதிக ஆதாயம் அடைந்தவர் அகிலேஷ் யாதவ்.
என்றாலும் இதனால் பாஜகவின் மகத்தான வெற்றியை
மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை இஸ்லாமியர்களோ
அகிலேஷ் யாதவோ தடுத்து விட முடியவில்லை. ஆனால்
மாயாவதியின் கட்சி பலிகிடா ஆகி விட்டது.
*************************************************8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக