திங்கள், 14 மார்ச், 2022

மணிப்பூரில் பாஜக ஆட்சியைப் பிடித்தது எப்படி?
கூட்டம் கூட்டமாக கிறிஸ்துவர்கள் பாஜகவுக்கு 
வாக்களித்தது எப்படி?
--------------------------------------------------------------------------- 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று 
மணிப்பூர். மிகுதியும் கிறிஸ்துவர்கள் வாழும் 
மாநிலம் இது. இங்கு 42 சதவீதம் கிறிஸ்துவர்களும் 
8 சதவீதம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். அதுபோல 
இந்துக்கள் 42 சதவீதம் வாழ்கிறார்கள்.

இந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மணிப்பூரில்
ஒரு அதிசயம் நடந்தது. ஜனவரி 6ஆம் தேதி முதன் 
முதலாக ஒரு பயணிகள் ரயில் மணிப்பூருக்கு 
வந்தது. அசாமில் சில்ச்சாரில் இருந்து புறப்பட்டு 
மணிப்பூரில் வங்கைச்சங்போ என்ற ஊரில் 
அந்த ரயில் வந்து நின்றது.

மணிப்பூரில் வரலாற்றிலேயே முதன் முதலாக 
ஒரு ரயில் அங்கு வந்து நிற்பது இதுதான் 
முதல் முறை. மக்கள் அனைவரும் மூக்கில் 
விரல் வைத்தனர்.

அடுத்து, கொஞ்ச நாள் கழித்து, அதே ஜனவரி 
மாதம் 2ஆம் தேதி, மணிப்பூரின் ரானி கைடிநூலு
என்ற ஊருக்கு ஒரு சரக்கு ரயில் வந்து சேர்ந்தது.
இந்தியாவின் வரலாற்றிலேயே முதன் முதலாக 
மணிப்பூர் மாநிலமானது இந்தியாவின் ரயில்வே 
வரைபடத்தில் இடம் பெற்றது. இது ஒட்டு மொத்த 
மணிப்பூர் மக்களுக்கும் மனநிறைவைத் தந்தது.

தேவாலயங்களில் கர்த்தருக்கு ஆராதனை நடந்தது.
கோவில்களில் அர்ச்சனை நடந்தது. மசூதிகளில் 
தொழுகை நடந்தது.

சட்டமன்றத் தேர்தல் மணிப்பூரில் நடந்தபோது 
மணிப்பூர் மக்கள் கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் 
இந்துக்களும் சேர்ந்து பாஜக கட்சிக்கு வாக்களித்து 
அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர்.

காங்கிரஸ் ஏன் அங்கு தோற்றது? சுதந்திரம் அடைந்த 
காலத்தில் இருந்து இந்தியாவை ஆண்ட கட்சி 
காங்கிரஸ். ஆனால் அக்கட்சியால் மணிப்பூருக்கு
ரயிலைக் கொண்டு வர முடியவில்லை. ஆனால் 
பாஜக கொண்டு வந்தது. எனவே மணிப்பூர் 
மக்கள் பாஜகவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை 
அளித்தனர்.

இல்லையேல் சிறுபான்மை மதம் எனப்படும் கிறிஸ்துவ 
மக்கள் நிரம்பிய ஒரு மாநிலத்தில் இந்துத்துவக் கட்சியான
பாஜக ஆட்சிக்கு வர முடியுமா?

சதா சர்வ காலமும் போலியான பொய்யான 
மதச்சார்பின்மையைப் பேசிக்கொண்டு, அடையாள 
அரசியலைக் கட்டி அழுது கொண்டு, இத்தனை 
ஆண்டு காலம் ஆடசியில் இருந்தும் ஒரு ரயில் கூட 
அந்த மாநிலத்திற்கு விடாமல், வளர்ச்சிப் பணிகளில் 
கோட்டை விட்ட காங்கிரசுக்கு மணிப்பூர் மக்கள்
தேர்தலில் மரண அடி கொடுத்தனர்.

மணிப்பூர் என்றவுடனே காங்கிரஸ் அரசுகள் 
அம்மக்களை எப்படியெல்லாம் கொடுமைப் 
படுத்தின என்பதை நாம் நினைத்துப் பார்க்க 
வேண்டும். ப சிதம்பரத்தின் துணை ராணுவப்படை 
AFSPA அதிகாரத்தை வைத்துக்கொண்டு மணிப்பூரின் 
பெண்களைக் கற்பழித்துக் கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் மணிப்பூரின் பெண்கள் 
நிர்வாணமாக நின்று கொண்டு போராட்டம் 
நடத்தினர். உங்களுக்கு இரோம் ஷர்மிளா என்ற 
பெண்ணை நினைவு இருக்கிறதா? பல ஆண்டுகளாக 
உண்ணாநோன்பு இருந்த பெண் அவர்.

காங்கிரஸ் ஆட்சி என்றாலே ராணுவத்தின் கொடூர 
ஆட்ச்சிதான். எனவேதான் மக்கள் காங்கிரசுக்கு 
மணிப்பூரில் கொள்ளி வைத்துள்ளனர்.

இன்று பாஜக மணிப்பூரில் வளர்ச்சி வளர்ச்சி என்று 
(விகாஸ் விகாஸ் என்று) வளர்ச்சிப் பணிகளுக்கு 
முன்னுரிமை கொடுத்து மணிப்பூரில் முதன் 
முதலாக ரயிலைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.
பாஜக கொண்டு வந்த ரயில் அக்கட்சியை 
ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி உள்ளது.

போலி மதச்சார்பின்மையைப் பேசிக்கொண்டு 
வளர்ச்சியைக் கோட்டை விட்ட காங்கிரஸ் 
சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப் படுகிறது.
இதுதான் உண்மை.
********************************************** 

போலி மதச்சார்பின்மை பேசி மக்களை 
ஏமாற்றி, உண்மையில் மதவாதம் 
பேசிக்கொண்டு இருந்த, அசிங்கம் பிடித்த 
காங்கிரஸ் கட்சிக்கு மணிப்பூர் மக்கள் 
கொள்ளி வைத்து விட்டார்கள்.

விகாஸ் விகாஸ் விகாஸ் என்று சொல்லி 
மணிப்பூர் மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுத்து 
விட்டார்கள். 

ரயில் வந்து நிற்கும் படம் பாஜகவைக் 
குறிக்கிறது.
பெண்கள் நிர்வாணமாக நின்று கொண்டு 
போராடும் படம் கொலை பாதக காங்கிரசைக் 
குறிக்கிறது.  
 
விகாஸ் என்பது (வளர்ச்சி) ANTI FEUDAL.
காங்கிரஸ் கட்சி மதவாதமும் அடையாள 
அரசியலும் பேசுவதால் அது FEUDAL கட்சி.
FEUDAL காங்கிரசுக்கு இனி எந்த எதிர்காலமும் 
கிடையாது. ANTI FEUDAL செயல்பாடுகளை 
எந்தக் கட்சி செய்கிறதோ அந்தக் கட்சியையே
மக்கள் ஆதரிக்க வேண்டும்; ஆதரிப்பார்கள்!
இதுதான் பாஜகவின் வெற்றியின் ரகசியம்.
 

போலி முற்போக்குக் கழிசடையே,
கணிகைக்குப் பிறந்த பயலே,
பாஜக வெற்றிக்குக் காரணம் EVM மோசடிதான் 
என்று பிரச்சாரம் பண்ணலியாடா?
     

    

 


 
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக