திங்கள், 21 மார்ச், 2022

தற்குறித் தனத்தின் உச்சம் தொட்ட
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ஊழியர்!
மானமும் அறிவும் இல்லாத ஹோமியோபதி முட்டாள்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
மார்ச் 8ஆம் தேதி சென்னையில் ஒரு அரசியல் வகுப்பு
நடைபெற்றது. ஒரு மார்க்சிய லெனினியக் கட்சி
நடத்திய அரசியல் வகுப்பு அது. மொத்தம் 13 பேர்
வந்திருந்தனர்.

வகுப்பு எடுத்தவரை எனக்கு நன்றாகத் தெரியும்.
அவர் பெயர் தோளர் துலுக்காணம்! அந்த ஆள் ஒரு
ஹோமியோபதி மருத்துவர்..அப்படியானால் BHMS
மருத்துவப் பட்டப் படிப்பு படித்த மருத்துவர் என்று
கருதிவிடக் கூடாது.

நமது ஆள் துலுக்காணம் SSLC பெயிலாகப் போனவர்.
1969ல் SSLC தேர்வு எழுதியபோது கணக்கு, ஆங்கிலம்,
அறிவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் அவருக்குப்
பிடுங்கி விட்டது. செப்டம்பர் எழுதினார்; அதே
ரிசல்ட்தான். அத்தோடு படிப்புக்கு முழுக்குப் போட்டு
ஹோமியோபதி வைத்தியராகி விட்டார். அதாவது
போலி வைத்தியராகி விட்டார்.

இவர் அன்று (மார்ச் 8) நடத்திய அரசியல் வகுப்பு ஐந்து
மாநிலத் தேர்தல் முடிவுகளும் பாஜகவும் என்ற பொருள்
பற்றியது. மார்ச் 10, 2022 அன்று ஐந்து மாநிலத் தேர்தல்களின்
முடிவு வெளிவந்தது. இவரின் வகுப்பு அதற்கு முந்தியது;

அடித்துப் பேசிய முக்கியமான விஷயம்!
----------------------------------------------------------------
அரசியல் வகுப்பில் துலுக்காணம் அடித்துப் பேசினார்.
தற்குறிகளுக்கே உரிய, அறிவுக்கு ஒவ்வாத ஒரு
முரட்டுத்தனம் அவரின் பேச்சில் மேலோங்கி நின்றது.

உத்தரக் காண்டிலும் கோவாவிலும் பாஜக தோற்கும்
என்றும் காங்கிரஸ்தான் அங்கு ஆட்சிக்கு வரும் என்றும்
துலுக்காணம் கூறினார். பஞ்சாப்பில் தொங்கு சட்டமன்றம்
அமையும் என்றும் காங்கிரஸ் அதிக இடங்களைப்
பெறும் என்றும் ஆருடம் கூறினார் துலுக்காணம்.

உபியில் செத்தாண்டா சாமியாரு என்று உற்சாக
மிகுதியில் கூவினார் துலுக்காணம். பாஜக மந்திரி ஒரு
கயவாளிப்பய காரை ஏத்தி ஒரு ஆளக் கொண்ணுருக்கான்;
விவசாயிகள் சும்மா விட மாட்டான் பாரு! ஆதித்தனாரின்
குண்டி வேட்டியை உருவி விட்டுருவான் பாரு என்றார்
துலுக்காணம். யோகி ஆதித்யநாத்தின் பெயரை
ஆதித்தனார் என்றே உச்சரித்தார் துலுக்காணம்.
SSLC பெயிலாகிப்போன ஒரு தற்குறியிடம் என்ன
பெரிய உச்சரிப்புத் தெளிவை எதிர்பார்க்க முடியும்?


தொடர்ந்து வகுப்பை நடத்திய துலுக்காணம் உபியில்
7 கட்டமாகத் தேர்தல் நடைபெறுவது தேவையற்றது.
தமிழ்நாட்டில் ஒரு கட்டமாகத்தானே 2021 தேர்தல்
நடைபெற்றது. பாஜவுக்குச் சாதகமாக வேண்டுமென்றே
இப்படி 7 கட்டமாகத் தேர்தலை நடத்துகிறது தேர்தல்
கமிஷன் என்றார் துலுக்காணம். பாஜகவுக்கு ஆதாயம்
கிடைப்பதற்காகவே 7 கட்டத் தேர்தல் என்று அடித்துப்
பேசினார் துலுக்காணம்.

துலுக்காணம் சொல்வது உண்மையா? பரிசீலிப்போம்.
அடைந்த காலத் தேர்தல்களை பரிசீலிப்போம்.
2007ல் 7 கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
07.04.2007 முதல் 08.05.2007 வரை ஏழு கட்டங்களாக
தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மாயாவதி
முதல்வர் ஆனார்.

2012லும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
பெப்ரவரி 8 முதல் மார்ச் 3 வரை 7 கட்டத் தேர்தல்.
இத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் முதல்வர் ஆனார்.

2017 தேர்தல் முந்திய தேர்தல்களைப் போலவே
பெப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக
நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜகவின் யோகி
ஆதித்யநாத் முதல்வர் ஆனார்.

2022 தேர்தலும் முந்திய தேர்தல்களைப் போலவே
பெப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக
நடைபெற்றது.

உபியில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற
நான்கு சட்டமன்றத் தேர்தல்களுமே 7 கட்டங்களாகவே
நடைபெற்றுள்ளன என்று பார்த்தோம். ஆனால்
குட்டி முதலாளித்துவத் தற்குறி, என்ன கூறுகிறான்
என்று பாருங்கள்.

அறியாமையே சகல தீமைகளுக்கும் தாய் என்றார்
சாக்ரட்டீஸ். அதற்கு கண்கண்ட சாட்சி யாரென்றால்
புழுத்த தற்குறி துலுக்காணம்தான். இவனெல்லாம்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டாம்! ஈனப்பயல்கள்.
----------------------------------------------------------
பின்குறிப்பு;
மார்க்சிஸ்ட் அல்லாத ஹோமியோபதி வைத்தியர்களை
இப்பதிவு குறிப்பிடவில்லை. எனவே அவர்கள் இதில் வருந்த
ஒன்றுமில்லை. ஹோமியோபதியை ஆதரிக்கும் எந்த
மார்க்சிஸ்டும் பதிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்க மாட்டான்.
திருடனைத் தேள் கொட்டினால் அவன் கத்த முடியுமா?
மார்க்சியம் ஹோமியோபதியை ஏற்கவில்லை. எனவே
வெளிப்படையாக ஹோமியோபதியை ஆதரிக்கத்
தைரியம் இல்லாத மூடர்கள் மார்க்சிஸ்டுகள் நடுவே உண்டு.

பின்குறிப்பு-2:
2ஆம் பத்தியில் தோளர் துலுக்காணம் என்று எழுதப்
பட்டதில் எழுத்துப்பிழை எதுவும் இல்லை.
********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக