உபி தேர்தல் மிகச் சுருக்கமான வரலாறும்
தேர்தல் பற்றிய முக்கியமான புள்ளி விவரமும்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
உபி மாநிலத்தில் நடந்த நான்கு தேர்தல்களைப்
பார்ப்போம். 2007, 2012,2017,2022 ஆகிய 4 தேர்தல்களைப்
பார்ப்போமா? உபி சட்டப் பேரவையில் 403 இடங்கள்.
பெரும்பான்மைக்குத் தேவை 202 இடங்கள்.
2007 தேர்தல்:
------------------
2007ல் 7 கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
07.04.2007 முதல் 08.05.2007 வரை ஏழு கட்டங்களாக
தேர்தல் நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள்
11.3 கோடி. வாக்குப் பதிவு = 45.96 சதவீதம்.
இத்தேர்தலில் மாயாவதி முதல்வர் ஆனார்.
முலாயம் சிங்கிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
மாயாவதி 206 இடங்களை வென்றார். பெற்ற வாக்குகள்
30.43 சதவீதம்.
2012 தேர்தல்:
--------------------
2012லும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
பெப்ரவரி 8 முதல் மார்ச் 3 வரை 7 கட்டத் தேர்தல்.
59.40 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
இத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் முதல்வர் ஆனார்.
மாயாவதியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்
அகிலேஷ். 224 இடங்களை சமாஜ்வாதி கட்சி வென்றது.
பெற்ற வாக்குகள் 29.15 சதவீதம் ஆகும்.
2017 தேர்தல்:
------------------
2017 தேர்தல் முந்திய தேர்தல்களைப் போலவே
பெப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக
நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 14.05 கோடி.
வாக்குப் பதிவு 61.24 சதவீதம்.
இத்தேர்தலில் பாஜகவின் யோகி ஆதித்யநாத்
முதல்வர் ஆனார். அகிலேஷ் யாதவ்விடம் இருந்து
ஆட்சியைக் கைப்பற்றினார். பாஜக 312 இடங்களை
வென்றது. பெற்ற வாக்குகள் 39.67 சதவீதம்.
2022 தேர்தல்::
--------------------
2022 தேர்தலும் முந்திய தேர்தல்களைப் போலவே
பெப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக
நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 15 கோடி.
பதிவான வாக்குகள் 60.8 சதவீதம்.
இத்தேர்தலில் பாஜகவின் யோகி ஆதித்யநாத்
ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.
பாஜக 255 இடங்களில் வென்றது. பெற்ற வாக்குகள்
41.29 சதவீதம். இது முந்தைய 2017 தேர்தலில் பாஜக
பெற்றதை விட 1.62 சதவீதம் அதிகம்.
ஒரு எளிய ஒப்பீடு:
--------------------------
2007ல் மாயாவதி முதல்வராகும்போது அவரின் கட்சி
பெற்றது 30.43 சதவீதம் வாக்குகள்.
2012ல் அகிலேஷ் யாதவ் முதல்வராகும்போது அவரின் கட்சி
பெற்றது 29.15 சதவீதம் வாக்குகள்.
2017ல் யோகி ஆதித்யநாத் முதல்வராகும்போது அவரின்
கட்சி பெற்றது 39.67 சதவீதம் வாக்குகள்.
2022ல் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகும்போது
அவரின் கட்சி பெற்றது 41.29 சதவீதம் வாக்குகள்.
இத்தேர்தலில் கோரக்பூர் அர்பன் தொகுதியில்
போட்டியிட்டு வெற்றி பெற்ற யோகி ஆதித்யநாத்
தமக்கு அடுத்தபடியாக வந்த சமாஜ்வாதி வேட்பாளரை
ஒரு லட்சத்து மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்
தோற்கடித்தார்.
இத்தேர்தலில் அசாதுதீன் ஒவாய்ஸியின் மஜ்லிஸ் கட்சி
போட்டியிட்டது. ஒன்றிலும் வெற்றி பெறவில்லை.
மொத்த வாக்குகளில் 0.49 சதவீத வாக்குகளை மட்டுமே
இக்கடசி பெற்றது. இது பெற்ற வாக்குகள் நாலரை
லட்சம் ஆகும். மஜ்லிஸ் கடசியால் யாருடைய
வெற்றி வாய்ப்பும் பாதிப்புக்கு உள்ளாக்கவில்லை.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தமிழ்நாட்டில்
ஒரு பழமொழி வழங்குகிறது. அதன்படி உபி மக்கள்
அளித்த தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்ள
வேண்டும். உபியில் அகிலேஷும் மாயாவதியும்
மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். ஆனால்
தமிழ்நாட்டில் உள்ள மூளை வளர்ச்சி குன்றிய
திராவிடக் கசடுகள் (Dravidian scum) EVMகளில்
ஏதோ செய்து பாஜக வெற்றி பெற்று விட்டது என்று
சொல்லிக்கொண்டு இருக்கிறான். தமிழ்நாட்டுக்கு
மட்டும் நாலு மனநல மருத்துவமனைகளை
உடனடியாகக் கட்டித் தருமாறு பிரதமர் மோடி
அவர்களை வேண்டுகிறேன்.
**********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக