கக்கூஸ் கழுவும் நபரை MLA ஆக்கியது சரியா?
யோகி ஆதித்யநாத்தின் திமிருக்குப் பாடம்
கற்பிக்க வாரீர்!
---------------------------------------------------------------------
உபியில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத்
தேர்தலில் (2022 பெப்ரவரி-மார்ச்சு) உபி முதல்வர்
யோகி ஆதித்யநாத் தனது நூறு சதம் திமிரையும்
முழுசாக வெளிப்படுத்தினார்.
சண்ட் கபீர் மாவட்டத்தில் உள்ள தொகுதி தன்காட்டா
(Dhanghata). இதில் பாஜக வேட்பாளராக கணேஷ் சந்திரா
என்பவரை நிறுத்தினார் யோகி. இவர் அந்த ஏரியாவில்
துப்புரவுப் பணியாளராக, அதாவது கக்கூஸ்
கழுவுபவராக வேலை செய்து வருகிறார். இவரின்
தகப்பனாரும் அந்த ஏரியாவில் கக்கூஸ் கழுவி
வருகிறார்.
கக்கூஸ் கழுவும் இந்த கணேஷ் சந்திராவை தன்காட்டா
தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தினார் யோகி.
சமாஜ்வாதியின் கூட்டணிக் கட்சியான SB சமாஜ்
கட்சியின் கோடீஸ்வரர் அழகு பிரசாத் இத்தொகுதியில்
நிற்கிறார். இவ்வளவு பெரிய கோடீஸ்வரரான
அழகு பிரசாத்தை எதிர்த்து கக்கூஸ் கழுவும் கணேஷ்
சந்திரா ஜெயிக்க முடியுமா?
இடதுசாரி முற்போக்கு அரசியல் நோக்கர்கள் அனைவரும்
கக்கூஸ் கழுவும் கணேஷ் சந்திரா தோல்வி அடைவார்
என்றும் டெபாசிட் கிடைக்காது என்றும் ஆணவத்துடன்
பேசினர்.
ஆனால் தேர்தல் முடிவு வந்தபோது அவர்களின் மண்டை
உடைந்து போனது. கக்கூஸ் கழுவும் கணேஷ் சந்திரா
ஜெயித்து விட்டார்.
கணேஷ் சந்திரா (பாஜக) = 83,241 வாக்குகள்
அழகு பிரசாத் (SB சமாஜ் கட்சி) = 72,688 வாக்குகள்
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளில் கக்கூஸ்
கழுவும் கணேஷ் சந்திரா அகிலேஷின் வேட்பாளரைக்
காயடித்து விட்டார்.
அழகு பிரசாத்தின் தோல்வி அகிலேஷ் யாதவ்வுக்கும்
பிரியங்கா வாத்ராவுக்கும் பேரதிர்ச்சியாக ஆனது.
உயர்சாதியினர் அனைவரும் கோபம் அடைந்தனர்.
இந்த நிகழ்வு யோகியின் திமிரை வெளிக்காட்டுகிறது.
கக்கூஸ் கழுவும் ஒருவனை நிறுத்தி பாரம்பரியமான
கோடீஸ்வர வேட்பாளாரை யோகி தோற்கடித்தது
எல்லோரின் கோபத்தையும் கிளப்பி உள்ளது.
எல்லோரும் யோகியைக் கண்டித்து வருகின்றனர்.
வாருங்கள், நாமும் சேர்ந்து கொண்டு யோகியைக்
கண்டிப்போம். என்ன திமிர் இந்தக் காவி கட்டிய
சாமியாருக்கு? கக்கூஸ் கழுவுபவனை MLA ஆக்கி
பிரியங்கா முகத்தில் கரியைப் பூசுவதுதானே
யோகி ஆதித்யநாத்தின் நோக்கம்! இதை
உயர்சாதியினர் சும்மா விட்டு விடுவார்களா?
தகுந்த பாடம் கற்பிப்பார்கள்!
யோகியின் திமிரை அடக்குவோம்!
யோகியின் ஆணவத்தை அடக்குவோம்!
************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக