புதன், 16 மார்ச், 2022

ஆயிரக்கணக்கில் இந்தியர்களைக் கொன்ற 
பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஜேம்ஸ் நீல் 
என்பவனின் சிலையை அகற்றும் போராட்டத்தில் 
தலைமை ஏற்ற காமராசர்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------- 
அஹிம்சையால் ஒருபோதும் இந்தியாவுக்கு 
சுதந்திரம் கிட்டவில்லை. கிழக்கிந்தியக் 
கம்பெனி இந்தியாவை ஆண்டபோது, 1857ல் 
முதல் இந்திய சுதந்திரப்போர் நடைபெற்றது.
அதை மிகக் கொடூரமாக ஒடுக்கி, 
ஆயிரக்கணக்கான இந்தியர்களை படுகொலை 
செய்தவன் நீல் என்ற பிரிட்டிஷ் ராணுவ  அதிகாரி.

இவனின் முழுப்பெயர் ஜேம்ஸ் நீல். இவன் 
இந்தியர்களால் அலகாபாத் கசாப்புக்காரன் 
(Allahabad butcher) என்று தூற்றப்பட்டான். வாரணாசியில் 
போரிட்ட இந்தியப் படையினரையம் அவர்களுக்கு 
உதவிய அப்பாவிப் பொதுமக்களையும் சுட்டுக் 
கொன்றும், உயிரோடு தீவைத்து எரித்தும் 
அழித்தவன் இந்த நீல்.    

இவன் லக்னோ முற்றுகையின்போது இந்திய 
மன்னர்களின் படைகளால் கொல்லப்பட்டான். 
இது வரலாறு. என்றாலும் நம் வரலாற்றுப் பாடப் 
புத்தகங்களில் இல்லாத வரலாறு.

செத்துப்போன ராணுவ அதிகாரியான ஜேம்ஸ் நீலுக்கு 
பிரிட்டிஷ் அரசு சென்னையில் அன்றைய மவுண்டு 
ரோட்டில்  (அண்ணா சாலையில்) ஸ்பென்சர் அருகே 
ஒரு சிலை வைத்தது.

இந்தச் சிலையை அகற்ற வேண்டும் என்று 1927 
செப்டம்பரில் இந்தியர்கள் போராடினர். காங்கிரஸ் 
இப்போராட்டத்தை நடத்தியது. ஜேம்ஸ் நீலின் சிலையை 
அகற்றக்கோரும் போராட்டத்திற்கு மூத்த காங்கிரஸ் 
தலைவர் திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ் என் சோமயாஜுலு 
தலைமை தாங்கினார். அவர் கைதாகி சிறைப்பட்டார்.
தொடர்ந்து சாமிநாத முதலியார் தலைமையில் 
போராட்டம் தொடர்ந்தது. அவரும் சிறைப்பட்ட பின் 
காமராசர் தலைமை தாங்கினார். காமராசர் அப்போது 
இளைஞர். அவரின் வயது அப்போது 24 மட்டுமே. 

இது வரலாறு. இந்த வரலாற்றைப் பாடப் புத்தகங்களில் 
யாராவது படித்து இருக்கிறோமா, சொல்லுங்கள்.

இந்தப் போராட்டத்தைப் பற்றி ஈ வெ ரா பெரியார் 
என்ன சொன்னார் தெரியுமா? அப்போது 
குடிஅரசு இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. 
அதன் ஆசிரியர் ஈ வே ராமசாமி நாயக்கர்.
04.12.1927 குடிஅரசு இதழில் ஜேம்ஸ் நீலின் சிலையை 
அகற்றக் கோருவது பார்ப்பன சூழ்ச்சி என்று 
கண்டித்து தலையங்கம் எழுதினார் 
ஈ வே ராமசாமி நாயக்கர்.

இங்கு ஒரு முக்கிய குறிப்பை வாசகர்களுக்குச் 
சொல்ல வேண்டும். 25.12.1927 வரை பெரியாரின் 
பெயர் நாயக்கர் என்ற சாதிப் பின்னொட்டுடன்தான்
குடிஅரசு பத்திரிகையில் எழுதப் பட்டு வந்தது. 
எனவே அதை அப்படியே இங்கு தந்திருக்கிறோம்.

இந்த ஆண்டின் (2022) குடிஅரசு தின விழாக் 
கொண்டாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சில 
ஊர்திகளைத் தயாரித்து அனுப்பியது. அவ்வூர்தியில் 
ஜேம்ஸ் நீலின் சிலையை அகற்றக் கூடாது என்று 
கூறி, பிரிட்டிஷ் அரசுக்குத் தீவிர விசுவாசியாக 
இருந்த ஈ வே ராமசாமியின் சிலையும் இருந்ததால் 
அந்த ஊர்தியை நிராகரித்தது மத்திய அரசு.
சொல்லப்பட்டது அனைத்தும் வரலாறு.
*****************************************************
   
                 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக