திங்கள், 21 மார்ச், 2022

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை 
மூடத்தனமாக எதிர்க்கும் கருவின் குற்றங்களே,
கோழைகளே! உங்களின் பதில் என்னடா?
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
1) கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ்காரர். பாஜக 
எதிர்ப்பாளர். கேம்பிரிட்ஜில் படித்தவர். இவர் 
சொல்லுகிறார்: மின்னணு வாக்குப் பதிவு 
எந்திரங்கள் பாதுகாப்பானவை என்று.

2) அசதுதீன் ஒவாய்சி ஹைதரபாத்காரர்.  
மஜ்லிஸ் கடசித்த தலைவர்; பாஜகவை தீவிரமாக 
எதிர்ப்பவர். இவர் லண்டனில் சென்று பாரிஸ்டர் 
பட்டம் பெற்றவர். இவர் கூறுகிறார்: EVM எந்திரங்கள் 
பாதுகாப்பானவை. அவற்றில் யாரும் எந்த மோசடியும் 
செய்ய முடியாது என்று.

3) டாக்டர் பிரணாய் ராய் யார் தெரியுமா? மெத்தப் 
படித்தவர். இவர் NDTV என்னும் ஆங்கிலTVயின் அதிபர். 
இந்தியாவின் முதல் செபாலஜிஸ்ட். இவர் VERDICT 
என்னும் ஆங்கில நூலை எழுதியுள்ளார். அதில் அவர் 
கூறுகிறார்: இந்தியாவின் EVM எந்திரங்கள் மிகவும் 
பாதுகாப்பானவை; அவற்றில் யாரும் எந்த 
மோசடியும் செய்ய முடியாது என்று.    

4) எத்தனை பேர் எடுத்துச் சொன்னாலும் 
தமிழ்நாட்டில் உள்ள கூமுட்டைகள், படித்த முட்டாள் 
மற்றும் படிக்காத முட்டாள் என்று சகல தரப்பினரும் 
EVMகளில் மோசடி செய்ய முடியும் என்று சொல்லிக் 
கொண்டு இருக்கிறார்கள். 

5) அச்சு ஊடகம், மின்னணு ஊடகம், சமூக ஊடகம் 
ஆகிய மூன்று விதமான ஊடகங்களிலும், EVMகள் 
பாதுகாப்பானவை என்றும் அவற்றில் யார் எவரும் 
எந்த மோசடியும் செய்ய முடியாது என்றும் விளக்கி 
நிறைய வீடியோக்களை நியூட்டன் அறிவியல் 
மன்றம் வெளியிட்டு உள்ளது. அறிவியல் ஏடுகளில் 
கட்டுரை எழுதியுள்ளது. சமூக ஊடகங்களில் 
தீவிரமாக எழுதி உள்ளது.

6) EVMகள் பாதுகாப்பற்றவை என்று பிதற்றித் திரியும் 
கோழைகள் நியூட்டன் அறிவியல் மன்றம் முன்வைத்த 
எந்தவொரு அறிவியல் உண்மையையும் மறுக்கவில்லை;
மறுக்க இயலவில்லை. அவர்கள் தொடுத்த கேள்விகளின் 
முதுகெலும்பை முறிக்கும் பதில்களை நியூட்டன் அறிவியல் 
மன்றம் கொடுத்துள்ளது.
 

7) தங்களின் தரப்பில் வைக்கப்பட்ட தர்க்கம், வாதம்
உள்ளிட்ட அனைத்தும் பொய் என்று நிரூபிக்கப் 
பட்ட பின்னரும் அறிவியலை எதிர்க்கும் 
முட்டாள்களான EVM எதிர்ப்பாளர்கள் திருந்தவில்லை.
அவர்கள் கருவின் குற்றங்கள்; நேர்மையற்றவர்கள்.
தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இழிந்த கோழைகள்.

8) நியூட்டன் அறிவியல் மன்றம் முன்வைத்த 
உண்மைகளை கோழைகளும் கருவின் 
குற்றங்களுமான அஞ்ஞானப் பீடைகள் 
இன்று வரை மறுக்கவில்லை; மறுக்க இயலவில்லை.
கோழைகளே, இப்போது கூட நீங்கள் மறுக்கலாம்,
உங்களின் மூளையில் ஏதாவது கனம் இருந்தால். 
************************************************
       
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக