சனி, 12 மார்ச், 2022

 அரசியல் ஆச்சரியம்னா என்ன??

ஒவ்வொரு ஊரிலும் ஒரு வகையான மூட நம்பிக்கை இருக்கும்.. நம்மூரில் தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் போகும் அரசியல் தலைவர் அடுத்த தேர்தலில் தோற்று விடுவார் என்பது அப்படி ஒரு நம்பிக்கை தான்.. அதனாலேயே திராவிடப் பகுத்தறிவு அரசியல்வாதிகள் அங்கே போக மாட்டார்கள்.. அல்லது பின் வாசல் வழியாகவோ கோவிலுக்கு அருகிலோ மட்டும் சென்று தங்கள் "பகுத்தறிவை" நிலைநாட்டிக் கொள்வர்..
த.நா.வுக்கு எப்படி பெரிய கோவிலோ, உ.பி.க்கு அப்படி நொய்டா.. அங்கு எந்த பெரிய தலை செல்கிறதோ வரும் தேர்தலில் அந்தக் கட்சி தோற்று விடும் என்பது அவர்களின் பகுத்தறிவு.. 2018ல் மோடியும் யோகியும் அங்கு மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டார்கள்.. பலரும் வேண்டாம் என அறிவுறுத்தினார்கள் பழைய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி.. அதுவும் போக மீடியாவில் பயங்கர வெறுப்புப் பிரசாரம்.. ஆனாலும் இருவரும் சென்றனர்.. 2019ல் மோடியும் ஜெயித்தார், 2022ல் யோகியும் ஜெயித்தார்.. "எங்கள் வெற்றி எங்களின் செயல்களால் வருவது, மூடநம்பிக்கைகளால் அல்ல" என நிரூபித்தார்கள்..
பகுத்தறிவே எங்கள் மூச்சு எனப் பேசும் அரசியல்வாதிகள் தஞ்சைப் பெரிய கோவிலுக்குள் செல்லவே அஞ்சுவதும், பிற்போக்குவாதிகள் என முத்திரை குத்தப்படும் பாஜக தலைவர்கள் துணிந்து மூட நம்பிக்கைகளை உடைப்பதும் தான் அரசியல் ஆச்சரியம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக