உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்!
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
கிறிஸ்டோபர் நோலனின் டெனட் (TENET)
படம் பார்த்தீர்களா? படத்தின் opening scene
உக்ரைனின் தலைநகர் கீவ் (Kyiv) நகரில்
நடக்கிறது. கீவ்-இல் நடக்கும் ஓர் இசை
நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் மெஷின்
கன்களுடன் புகுந்து விடுவார்கள்.
செர்நோபில் அணுஉலை விபத்து பற்றிக்
கேள்விப் பட்டு இருப்பீர்கள். விபத்துக்கு
உள்ளான லெனின் அணுஉலை உக்ரைனில்
உள்ளது. செர்நோபில் அணுஉலை விபத்து
மட்டும் நிகழ்ந்திராவிட்டால், உக்ரைன்
சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து
இருக்காது என்று எழுதினார் கோர்பச்சேவ்.
சோவியத்தின் தானியக் களஞ்சியம் உக்ரைன்.
கோதுமை விளைச்சலில் முதலிடம் உக்ரைன்.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்
செயலாளராக நீண்ட காலம் இருந்தவர்
கோர்ப்பச்சேவ். 18 ஆண்டு காலம் இருந்தார்.
ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக நீண்ட காலம்
பொதுச்செயலாளராக இருந்த கோர்பச்சேவ்
ஒரு உக்ரேனியரே.
மிகயீல் ஷோலகோவ் என்ற ரஷ்ய நாவலாசிரியர்
எழுதிய "கன்னிநிலம்" என்ற நாவலைப் படியுங்கள்.
நாவலின் முக்கியமான பாத்திரம் கம்யூனிஸ்ட்
கட்சியின் மாவட்டச் செயலாளர். அவர் ஒரு
உக்ரேனியர். இன்றைய ரஷ்யாவுடன் அதிக
அளவுக்குத் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும்
நாடு உக்ரைன்.
உக்ரைன் மேப்பை பல்வேறு சந்தர்ப்பங்களில்
இங்கு முகநூலில் வெளியிட்டு உள்ளேன். அதைப்
பார்த்து மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்த எனது
நீட கட்டுரை அடுத்து வெளியாகும். அதற்கான
பீடிகையாக இக்கட்டுரை போன்ற கட்டுரைகள்
அமையும்.
********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக