திங்கள், 21 மார்ச், 2022

வெறிபிடித்த ஒரு பாஜக மந்திரி விவசாயிகளின் மீது 
கார் ஏற்றிக் கொன்ற கொடூரம் நிகழ்ந்த இடமான 
லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள 
8 தொகுதிகளிலும் பாஜக வென்றது எப்படி?
--------------------------------------------------------------------- 
உபி இந்தியாவின் ஆகப்பெரிய மாநிலம். மக்கள்தொகை 
22 கோடி. வாக்காளர்கள் 15 கோடி. 2022 சட்ட மன்றத் 
தேர்தலில் வாக்குப் பதிவு 60 சதவீதம்.

உபியில் மொத்தம் மாவட்டங்கள். அதில் ஒன்று 
லக்கிம்பூர் கெரி. அந்த மாவட்டத்தில் பின்வரும் 
8 சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன.

1) பலியா 2) நிகாஷன் 3) கோலா கோகர்நாத் 4) ஸ்ரீநகர் 
5) தௌரஹ்ரா 6) லக்கிம்பூர், 7) கஸ்தா 8) முஹம்மதி.
(Palia, Nighasan, Gola Gokarnath, Sri Nagar, Dhaurahra, 
Lakhimpur, Kasta, and Mohammadi)

இந்த 8 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
அமோகமான வெற்றி. மிக அதிகமான வாக்கு 
வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் இந்த எட்டிலும் டெபாசிட் இழந்துள்ளது.

தொகுதி: பலியா 
ஹெச் குமார் சஹ்னி (பாஜக) = 1,18,864 (50.2%)
பி எஸ் கக்கு (சமாஜ்வாதி) = 80,735 (34.1%)
ஜாஹிர் உசைன் (பகுஜன்) = 27,849 (11.76%)
ரிஷால் அஹமது (காங்) = 4514 (1.91%)
பாஜக 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

சமாஜ்வாதி, பகுஜன், காங்கிரஸ் ஆகிய மூன்று 
கட்சிகள் பெற்ற வாக்குகளைக் கூட்டினாலும்,
அப்போதும் பாஜக கட்சிதான் 5000க்கும் மேலான 
வாக்குகள் அதிகம் பெற்று நிற்கிறது.

காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்து கேவலப் பட்டு 
உள்ளது. பிரியங்கா காந்தி உபியில் 209 பேரணிகளை 
ROAD SHOWக்களை நடத்தினார். அதன் பிறகும் 
காங்கிரஸ் வெறும் 4514 வாக்குகளை மட்டுமே 
பெற்றுள்ளது.    

இன்னொரு தொகுதியைப் பார்ப்போம்.
தொகுதி: லக்கிம்பூர் 
யோகேஷ் வர்மா (பாஜக) = 1,27,663 (47.38%)
உகாஸ் வி மாதுர் (சமாஜ்) = 1,07,085 (39.74%)
மோகன் பாஜ்பாய் (பகுஜன்) = 24,014 (8.91%)
ரவிசங்கர் திருவேதி (காங்) = 2834 (1.05%)

பாஜக 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
காங்கிரஸ் வெறும் ஒரு சதவீதம் வாக்குகளை 
மட்டுமே பெற்று கேவலப்பட்டது.

மொத்த உபியிலும் காங்கிரஸ் 2.34 சதவீதம் 
வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இடங்களைப் 
பொறுத்தமட்டில் 2 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

மந்திரி கார் ஏத்தி விவசாயியைக் கொண்ணு போட்டான்!
மந்திரி மகன்தான் கார ஒட்டினானாம்!
அரெஸ்ட் பானு! ஜாமீன் கொடுக்காதே!

ஆனால் உபியில் லக்கிம்பூர் கெரியில் காங்கிரசின் 
முழக்கங்களும் போலி முற்போக்குகளின் வெறிக் 
கூச்சல்களும் எடுபடவில்லை. காரணம் அவற்றில் 
உண்மை மருந்துக்கும் இல்லை என்று விவசாயிகள் 
அறிவார்கள்.

லக்கிம்பூர் கெரியில், ஒரு விவசாயி கார் ஏற்றிக் 
கொல்லப்பட்ட இடத்தில் எப்படி அத்தனை 
இடங்களையும் பாஜக ஜெயித்துள்ளது?
இக்கேள்விக்கு மெய்யான விடையை அறியாமல் 
யாரும் அரசியல் செய்ய முடியாது.
*******************************************************         
  
    
 
  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக