அரசியல்வாதியின் திமிரை அடக்கிய நீதிமன்றம்!
-------------------------------------------------------------------------------
நம்மூரில் MMDA உள்ளது அல்லவா! அதுபோல
ஹரியானாவில் HUDA (Haryana Urban Development Authority).
2015ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த HUDA
அதிகாரிகளையும் ஊழியர்களையும் இழிந்த
அரசியல்வாதிகள் சிலர் சேர்ந்து கொண்டு
தாக்கினர். பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
எரிவாயு சிலிண்டர்களை வீசியதில் HUDA டீமுடன்
வந்த மாஜிஸ்திரேட் உட்பட பலர் காயமுற்றனர்.
இவ்வாறு அதிகாரிகள் மீது வன்முறையை ஏவியதில்
ஒருவர் நிஷா சிங் என்னும் பெண். இவர் ஆம் ஆத்மி
கட்சியின் கவுன்சிலர்.
மொத்தம் 17 பேர் தண்டிக்கப்பட்டனர். இதில் 10 பேர்
பெண்கள். நிஷா சிங் உள்ளிட்ட 10 பேருக்கு 7 ஆண்டு
கடுங்காவல் சிறை. மீதி 7 பேருக்கு 10 ஆண்டு
கடுங்காவல் சிறை. குர்கான் மாவட்ட நீதிமன்றம்
இவ்வாறு தீர்ப்பு அளித்தது.
திமிர் பிடித்து ஆடிய ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர்
இனி 7 ஆண்டு காலம் சிறையில் களி திங்க வேண்டும்.
---------------------------------------------------------
பின்குறிப்பு:
கொள்ளையடித்த காசை வைத்து இந்த நாய்கள்
ஜாமீன் வாங்கி விடும். ஏனெனில் இது இந்தியா!
**********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக