ஞாயிறு, 1 மே, 2022

 போலியான தமிழ்ப் பற்றும்

மிரரும் லென்சும்!

----------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------- 

நன்கு வயது மூத்த ஒரு தமிழ்க் குடிமகன்.

He is a septuagenarian. அவர் கண்புரை நீக்க

அறுவை சிகிச்சை மேற்கொண்டு,

கண்ணுக்குள் லென்ஸ் பொருத்தி இருக்கிறார்.

(lens implanted)    


இந்தச் செய்தியை அவர் மக்களுக்குத்  

தெரிவிக்கிறார்.பின்வருமாறு சொல்கிறார்:

"சிகிச்சை முடிந்து ஆடி பொருத்தப் பட்டுள்ளது".


படித்த எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"ஆடி பொருத்தப் பட்டுள்ளது" என்ற தொடரின் 

அபத்தம் ஒருவரின் குரல்வளையை 

நெரிக்கும் அபத்தம் ஆகும்.


என்றாலும் அவருக்கு கண்ணுக்குள்

லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது 

என்பதையும், அதைத்தான் அவர் 

ஆடி பொருத்தப் பட்டுள்ளது என்று 

கூறுகிறார் என்றும் எனக்குப் புரிந்தது.


போலியானதும் முட்டாள்தனமானதுமான 

தமிழ்ப்பற்று தமிழை அழிக்கிறது.

தமிழனை மூடன் ஆக்குகிறது.


ஆடி (mirror) வேறு; லென்ஸ் (lens) வேறு.

கண்களில் பொறுத்தப்படுவது லென்ஸ் ஆகும்.


ஆடி என்பது ஒளி பிரதிபலித்தல் (reflection)

என்னும் தத்துவத்தில் வேலை செய்யும்.

லென்ஸ் என்பது ஒளி விலகல் (refraction) 

என்னும் கோட்பாட்டில் வேலை செய்யும்.


நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள ஆடிகள்

அனைத்தும் அளவில் பெரிதாக இருக்கும்.

லென்சுகள் அளவில் சிறிதாக இருக்கும்.

கண்ணுக்குள் பொருத்தப்படும் லென்சுகள் 

எவ்வளவு சிறிதாக இருக்கும் என்று 

வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அளவில் பெரிய ஒரு ஆடியை கண்ணுக்குள் 

பொருத்த முடியுமா என்றும் பொருத்தினால் 

கண் என்ன ஆகும் என்றும் வாசகர்கள் 

சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  


ஒளி பிரதிபலித்தல் (reflection) 

ஒளி விலகல் (refraction)

என்னும் இரண்டும் வேறு வேறு கோட்பாடுகள்.


எந்த ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல்,

உரிய கல்வியைக் கற்காமல் 

தமிழுக்கு தான்தான் அத்தாரிட்டி என்று 

கற்பனையாக சுயஇன்பம் அனுபவித்துக் 

கொண்டு,

தமிழை அழிக்கிறார்கள் ஏமாற்றுக்காரர்கள்.


தமிழ்ப்புலமையற்ற தமிழ்ப்பற்று,  

அறிவியல் அறிவே இல்லாத வெற்றுத் 

தமிழ்ப்பற்று ஆகியன சமூகத் தீங்குகள்.


லென்ஸ் என்பதை தற்போது வில்லை என்று 

மொழிபெயர்க்கிறார்கள்.இந்தச் சொல் 

ஓரளவு பரவாயில்லை. வேறு நல்ல சொல்லை 

உருவாக்கும்வரை லென்ஸ் என்றே 

எழுத வேண்டும்.

********************************************

லென்சுக்கு நல்லதொரு தமிழ்ச் 

சொல்லை நாளை நியூட்டன் அறிவியல் 

மன்றம் உருவாக்கி அறிவிக்கும். 

 



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக