கருந்துளையைப் படம் பிடித்து விட்டோம்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
நமது காலக்சி பால்வீதி ஆகும். ஆங்கிலத்தில்
இது Milky way என்று அழைக்கப் படுகிறது.
நமது காலக்சியில் உள்ள ஒரு கருந்துளையை
படம் பிடித்து இருக்கிறோம். இது சகிட்டாரியஸ்
(Sagittarius) என்னும் தனுஷ் ராசி நட்சத்திரக்
கூட்டம் இருக்கும் இடத்தில் உள்ளது.
தற்போது இதன் உருவம் படம் பிடிக்கப் பட்டுள்ளது.
இந்தச் செய்தியை விஞ்ஞானிகள் மே 12, 2022ல்
உலகின் பல்வேறு இடங்களில் நடத்திய
செய்தியாளர் சந்திப்புகளில் வெளியிட்டனர்.
ஆக, கருத்துளையைப் படம் பிடித்து விட்டோம்.
சரி, படம் பிடித்தது யார்? EHT எனப்படும்
Event Horizon Telescope குழுவின் விஞ்ஞானிகள்
கருத்துளையைப் படம் பிடித்துள்ளனர். இக்குழுவில்
உலகெங்கிலும் உள்ள 300க்கும் மேற்பட்ட
ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று கருந்துளைகள்
பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
கருந்துளையைப் படம் பிடித்து விட்டோம்
என்பது கருந்துளை ஆய்வில் ஒரு முக்கியமான
மைல்கல். இது ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல்
கோட்பாட்டை உறுதிப் படுத்துகிறது.
இது மானுடத்தின் வெற்றி.
வேறுள குழுவை எல்லாம்
மானுடம் வென்ற தம்மா.
.............கம்பன்............
****************************************
பின்குறிப்பு:
விரிவான விளக்கக் கட்டுரையை
அறிவியல் ஒளி ஏட்டில் எழுதலாமா என்று
யோசித்துக் கொண்டுள்ளேன்.
-------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக