தனுஷ் ராசி மண்டலத்தில் ஒரு கருந்துளை!
அது இருக்கும் இடமே அதன் பெயரானது!
அக்கருந்துளையின் பெயர் Sagittarius A.
தமிழில் சொன்னால் தனுஷ் ஏ.
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
Celestial sphere எனப்படும் விண்கோளத்தில்
88 நட்சத்திரக் கூட்டங்கள் (constellations) உள்ளன.
இந்த 88 நட்சத்திரக் கூட்டங்களையும் IAU எனப்படும்
சர்வதேச வானியல் சங்கம் அங்கீகரித்துள்ளது.
(IAU = International Astronomical Union).
மேற்கூறிய 88 நட்சத்திரக் கூட்டங்களில்
12 நட்சத்திரக் கூட்டங்கள் ராசி மண்டலங்கள்
(zodiac region) என்று தனிப்பெயர் பெற்றுள்ளன.
ராசி என்றால் சித்திரம், உருவம் என்று பொருள்.
ஆரம்ப கால மனிதர்களுக்கு, அவர்கள் வானத்தைப்
பார்த்தபோது,நட்சத்திரக் கூட்டங்கள் என்ன உருவத்தில்
தெரிந்ததோ, அந்த உருவத்தையே அந்த
நட்சத்திரக் கூட்டத்தின் பெயராக வைத்தார்கள்.
ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக் கூட்டம் ஆடு போலத்
தெரிந்தபோது, அதற்கு ஆடு என்றே பெயரிட்டார்கள்.
அதைத்தான் நாம் மேஷம் என்கிறோம். ஆங்கிலத்தில்
Aries (அய்ரீஸ்) என்கிறார்கள். அய்ரீஸ் என்றால்
செம்மறி ஆடு என்று பொருள்.
12 ராசி மண்டலங்களையும் உள்ளடக்கிய ராசிப்
பிராந்தியம் (zodiac region) வானில் எங்கே இருக்கிறது?
வானில் ஒரு வளையம் (belt) போல ராசிப்பிராந்தியம்
தெரியும். பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையில்
இந்த ராசிப் பிராந்தியம் (zodiac region) உள்ளது.
பூமியில் இருந்து பார்க்கும்போது, ஓராண்டில்
இந்த ராசிப் பிராந்தியத்தில் உள்ள 12 ராசி மண்டலங்கள்
ஒவ்வொன்றிலும் சூரியன் நுழைந்து வெளியேறுகிற
தோற்றத்தைப் பார்க்க முடியும். அதாவது அப்படித்
தோற்றமளிக்கும்.
ஆக 88 நட்சத்திரக் கூட்டங்களும் (constellations),
அவற்றுள் அடங்கிய 12 ராசி மண்டலங்களும்
விண்கோளத்தில் உள்ளன.
12 ராசி மண்டலங்களும்
அவற்றின் ஆங்கிலப் பெயர்களும்!
-------------------------------------------------------
1.. மேஷம் --- Aries
2.. ரிஷபம்---- Taurus
3... மிதுனம் ----- Gemini
4.. கடகம்------- Cancer
5.. சிம்மம் ---Leo
6.. கன்னி ----Virgo
7.. துலாம் ---Libra
8.. விருச்சிகம்-- Scorpio
9.. தனுஷ் ----Sagittarius
10...மகரம் ---Capricorn
11.. கும்பம் ---Aquarius
12..மீனம் ----Pisces(
அண்மையில் நமது காலக்சியான பால்வீதியில்
உள்ள ஒரு கருந்துளையை விஞ்ஞானிகள் புகைப்படம்
எடுத்துள்ளனர். அந்தக் கருந்துளைக்கு Sagittarius A என்று
பெயர்.
Sagittarius A என்றால் என்ன அர்த்தம்? தனுஷ் ராசிக்கு
ஆங்கிலத்தில் Sagittarius என்று பெயர்.அந்தக்
கருந்துளையானது தனுஷ் ராசி மண்டலத்தில்
இருக்கிறது. எனவே அதன் அடிப்படையில்
அதற்கு Sagittarius A என்று பெயரிடப் பட்டுள்ளது.
சரி, சகிட்டாரியஸ் ஏ என்று பெயரிடப்பட்ட அந்தக்
கருந்துளை பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில்
இருக்கிறது? 26,673 ஒளியாண்டு தூரத்தில் அந்தக்
கருந்துளை உள்ளது.
ஒரு ஒளியாண்டு என்பது ஓராண்டில் ஒளி செல்லும்
தூரம் ஆகும். ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிமீ தூரத்தைக்
கடக்கிறது ஒளி.
எனவே ஒரு ஒளியாண்டு என்பது 9.5 டிரில்லியன் கிமீ.
1 ly = 9.5 x 10^12 km.
1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி.
---------------------------------------------------------------------
பின்குறிப்பு:
நவீன காலப் பேரெண்களான மில்லியன், பில்லியன்,
டிரில்லியன், குவாட்ரில்லியன், குவின்டில்லியன் என்று
தொடரும் எண்களை அறிந்து கொள்ள வேண்டும்.
அவற்றைப் பயன்படுத்தும் தேவை ஏற்படும்.
****************************************************8
தூரம் எவ்வளவு?
---------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
பேரழகி கிளியோபட்ரா வானில் ஒரு நட்சத்திரத்தைப்
பார்த்தாள். மிகவும் பிரகாசமான நட்சத்திரம் அது.
விஞ்ஞானிகள் அந்த நட்சத்திரம் பூமியில் இருந்து
5 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது என்று சொன்னார்கள்.
அப்படியானால் அந்த நட்சத்திரம் பூமியில் இருந்து
எவ்வளவு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்று
கூற இயலுமா? கூறுங்கள்.
***************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக