வியாழன், 19 மே, 2022

பாசிசம் என்றால் என்ன?
---------------------------------------
முதலாளித்துவம் அவ்வப்போது நெருக்கடிக்கு உள்ளாகும்.
முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆழப்பட்டு, அது மேலும் 
தீவிரம் அடையும்போது அது தவிர்க்க இயலாமல் 
மக்களின் தலை மீது விடியும். அதைப் பொறுக்க முடியாமல் 
மக்களின் போராட்டங்கள் வெடிக்கும். சமூகக் 
கொந்தளிப்பு ஏற்படும். 

இதை மட்டுப் படுத்தவும் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கவும் 
ஆளும் வர்க்கம் கையாளும் வழக்கமான முறைகளால்
முடியாதபோது, ஆளும் வர்க்கம் அடக்குமுறையை, 
ஒடுக்குமுறையை சமூகத்தில் ஏவுகிறது. எதிர்ப்புக் 
குரல்களை ஒடுக்குகிறது. கருத்து சுதந்திரத்தை 
ஜனநாயகத்தை மறுக்கிறது. இதன் உச்சக் கட்டமாக
ஆளும் வர்க்க அரசு பாசிசத்தைக் கடைப்பிடிக்கிறது.
இவ்வாறுதான் பாசிசம் ஒரு சமூகத்தில் தோன்றுகிறது.

பலம் குன்றிய ஒரு நாட்டை ஆக்கிரமிப்பின் மூலமாக 
அல்லது போர் வெற்றியின் மூலமாக இன்னொரு நாடு 
கைவசப் படுத்திக் கொள்ளும்போது, அந்த நாட்டு 
மக்களின் எதிர்ப்பை ஒடுக்கும் பொருட்டு ஆக்கிரமித்த 
நாடு பாசிசத்தைக் கையாளும்.

மேற்கூறிய சூழ்நிலைகளில் பாசிசம் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக