சனி, 21 மே, 2022


புலிகளும் சி ஐ ஏவும்! 
-------------------------------
ராஜிவ்  படுகொலையின் முழுப் 
பழியையும் விடுதலைப் புலிகள் மீது 
சுமத்துவது தவறு. 

கொலைச்சதி (plot), திட்டத்தை 
நிறைவேற்றுதல் (execution) ஆகிய 
இரு பெரும் கூறுகளைக் 
கொண்டது ராஜிவ் படுகொலை.

இதில் கொலைச்சதியை (plot) அமெரிக்க 
சி ஐ ஏ உருவாக்கியது. சதித் திட்டத்தை  
நிறைவேற்றியது விடுதலைப் 
புலிகள் ஆவர்.

CIA the plotter and LTTE the executor 
had jointly eliminated Rajiv Gandhi. 
இதுதான் உண்மை. இது மட்டுமே 
உண்மை.

கொலைச்சதியை நிறைவேற்றுவதோடு 
தங்களின் பொறுப்பு முடிந்து விட்டது 
என்று ஆரம்பத்திலேயே புலிகள் 
தெளிவாகக் கூறி விட்டனர். எனவே 
கொலைக் குற்றவாளிகளின் 
பாதுகாப்பு, வழக்குச் செலவு, அவர்களின் 
குடும்பப் பராமரிப்பு உள்ளிட்ட 
பிற செலவுகள் அனைத்தும் 
சி ஐ ஏவின் பொறுப்பு 
என்பது அப்போதே 1991ல் உடன்பாடான 
விஷயம்தான்.      

அதன்படி இன்று வரையிலும் (இனிமேலும்)
ராஜிவ் கொலைக் குற்றவாளிகளின் 
செலவுகளை அமெரிக்க ஏஜென்சிகள் 
பார்த்துக் கொள்கின்றன. ஒரு சில NGO
அமைப்புகள் மூலம் அமெரிக்க 
ஏஜெண்டுகள் பணம் பெறுகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் நூற்றுக் கணக்கில் 
மனுக்களை தாக்கல் செய்து நிவாரணம் 
பெற்றனர் ராஜிவ் கொலையாளிகள்.
இதற்கான செலவு எத்தனை எத்தனை 
கோடி?

டெல்லிக்கு விமானப் பயணத்துக்கு 
ஆகும் செலவு எவ்வளவு? சாதாரண 
ECONOMY வகுப்பில் செல்வார்களா 
வழக்கறிஞர்கள்? EXECUTIVE வகுப்பில் 
புது டில்லி ஒரு முறை போய் வர,
அங்கு விடுதியில் அரை எடுத்துத் தங்க,
உணவுச் செலவுகள், இன்ன பிற 
செலவுகள் என்று ஒரு முறை போய்விட்டு 
வந்தாலே பல லட்சம் ரூபாய் காலி 
ஆகி விடுமே. .

விடுதலையான ராஜிவ் கொலையாளி 
ஆகிரை சுவிஸ் நாட்டில் வசிக்கிறார்.
அவர் திருமணம் செய்து கொண்டார்.
கணவருடன் சுவிஸ் நாட்டில் வசிக்கிறார்.
இதற்கான செலவுகளை  
ஏற்றுக் கொண்டது யார்? 
------------------------------------------
இந்தச் செலவுகளை விடுதலைப் புலிகள் 
செய்யவில்லை. அவர்கள் செலவு 
செய்ய வேண்டும் என்று அன்றைய 
1991ல் ஒப்பந்தத்தில் இல்லை.  எனவே 
செலவுகளை மேற்கொண்டது யார்?
சி ஐ ஏ தவிர வேறு யார்?
 

பிரபாகரன் மன்னிப்புக் கேட்கவில்லை. 
இறுதி மூச்சு வரை பிரபாகரன் 
மன்னிப்புக் கேட்கவில்லை. அவர் 
சிங்கள ராணுவத்திடம் சரண் 
அடைந்தார். 

நடேசன் புலித்தேவன் ஆகியோரோடு 
சரண் அடைந்தவர்தான் பிரபாகரன். 
சிங்கள ராணுவம் பிரபாகரனை 
மண்டையில் அடித்துக் கொன்றது. 
இது போர் நெறி அல்ல. சரண் 
அடைந்தவர்களைக் கொல்லக் கூடாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக