வெள்ளி, 27 மே, 2022

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான
19 பேரின் இன்றைய நிலைமை!
சுவிட்சர்லாந்தில் வாழும் ஆதிரை!
-----------------------------------------------------------------------------
ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கும்
மரண தண்டனை விதித்தது தடா நீதிமன்றம்.
மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றமானது
இந்த 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது.
சற்றேறக்குறைய 8 ஆண்டுகள் சிறைவாசத்தின்
பின்னர் 1999இல் இவர்கள் விடுதலை ஆயினர்.
7 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது.
(முழுமையான விளக்கம் பெற எமது முந்தைய
கட்டுரைகளைப் படிக்கவும்)

விடுதலையான 19 பேரில் சுபா சுந்தரம் மக்களுக்கு
நன்கு அறிமுகமானவர். சுபா ஸ்டூடியோ அதிபர் இவர்.
இவர் தந்தை பெரியாரின் புகைப்படக்காரர்.

உச்சநீதிமன்றம் இவரை விடுதலை செய்தது.
விடுதலையானதும், நக்கீரன் கோபாலின் வேண்டுகோளின்
பேரில் தமது சிறை அனுபவம் குறித்து நக்கீரனில்
ஒரு தொடர் எழுதினார். சில ஆண்டுகள் கழித்து
இறந்து போனார்.

ஆதிரை என்ற இளம்பெண்ணை நினைவு இருக்கிறதா?
ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்
பட்டவர். உச்ச நீதி மன்றம் இவரை விடுதலை செய்தது.

விடுதலையானதுமே இயற்கை எழில் கொஞ்சும்
சுவிட்சர்லாந்து நாட்டிற்குச் சென்றார் ஆதிரை.
திருமணம் செய்து கொண்ட இவர், தம் கணவர்
விக்னேஸ்வரனுடன் தற்போது சுவிட்சர்லாந்தில்
வாழ்ந்து வருகிறார்.

இவரின் கணவர் விக்னேஸ்வரன் யார் தெரியுமா?
அவரும் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை
விதிக்கப் பட்டவர். ஆதிரையுடன் விடுதலை செய்யப்
பட்டவர்.

மற்றவர்கள் பற்றி அடுத்துக் காண்போம்.
*****************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக