திங்கள், 2 மே, 2022

சனிப்பிணம் தனியாகப் போகாது என்று சொல்லுவார்கள்.
அது போல காங்கிரஸ் பிணம் போலிக் கம்யூனிஸ்ட் 
பிணத்தையும் கூட்டிக்கொண்டு சுடுகாட்டுக்குப் 
போகிறது.

இந்தியாவின் தேர்தல் அரசியலில் காங்கிரசின் 
உச்சத்தையும் அதன் படிப்படியான சரிவையும் 
புள்ளி விவரங்களின் துணையுடன் பார்த்தோம்.
வரலாற்றிலேயே இல்லாதபடிக்கு 2014, 2019
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசானது 
மூன்று இலக்கத்தில் மக்களவையில் இடங்களைப்
பெறாமல் 44 என்றும் 52 என்றும் சுருங்கி விட்டது.

அதே நேரத்தில் பாஜகவானது 1984 முதல் 2019 வரை 
தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது.    
பாஜக போட்டியிட்ட முதல் தேர்தல் தொடங்கி 
இப்போது வரை அது பெற்றுள்ள இடங்கள்: 

1984 ... 2. (7.74 சதவீத வாக்குகள்) 
1989 .... 85 (11.36)
1991 .... 120 (20.11)
1996 .... 161 (20.29)
1998 .... 182 (25.59)
1999 .... 182 (23.75)
2004 .... 138 (22.16)
2009 .... 116 (18.80)
2014 .... 282 (31.00)
2019 .... 303 (37.36)

இந்த 10 தேர்தல்களிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் 
நிதானமாகவும் உறுதியாகவும் உயர்ந்து கொண்டே 
வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இதற்கு மாறாக இந்த 10 தேர்தல்களிலும் காங்கிரசும் 
சரி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரி (CPI, CPM) தொடர்ந்து 
சரிந்து கொண்டே வருவதை தேர்தல் புள்ளி விவரங்கள் 
உணர்த்துகின்றன.


CPI, CPM இரு கட்சிகளும் பெற்ற இடங்கள்மற்றும் 
வாக்கு சதவீதம் பற்றிப் பார்ப்போம்.
1996....  44 (CPI 12, 1.97 சதவீதம், CPM 32, 6,12 சதவீதம்)
1998 .... 41 (CPI 9, 1.75 சதவீதம், CPM 32, 5.16 சதவீதம்)
1999..... 37 (CPI 4, 1.48 சதவீதம், CPM 33, 5.40 சதவீதம்)
2004..... 53 (CPI 10, 1.41 சதவீதம், CPM 43, 5.66 சதவீதம்)            
2009 ....  20 (CPI 4, 1.43 சதவீதம், CPM 16, 5.33 சதவீதம்) 
2014 ..... 10 (CPI 1, 0.78 சதவீதம், CPM 9, 3.25 சதவீதம்) 
2019 .....  5 (CPI  2, 0.58 சதவீதம், CPM 3, 1.75 சதவீதம்)

2019 தேர்தலில் CPI, CPM இரண்டு கடசிகளும் சேர்ந்து 
பெற்ற இடங்கள் 5ல் 4 தமிழ்நாட்டில் திமுகவுடன் 
கூட்டணியில் இருந்ததால் கிடைத்தவை. திமுக 
கூட்டணியைக் கழித்து விட்டுப் பார்த்தால் 
இவ்விரு கட்சிகளும் சேர்ந்து இத்தேர்தலில் (2019)
பெற்றுள்ளது ஒரே ஒரு இடம்தான் என்றாகிறது.

1996ல் இரண்டு கட்சிகளும் சேர்ந்து 44 இடங்களைப் 
பெற்றிருந்தபோது, CPI கட்சியானது தேவகெளடா
அமைச்சரவையிலும், பின் ஐ கே குஜ்ரால் 
அமைச்சரவையிலும் பங்கு பெற்றிருந்தது.
இந்திரஜித் குப்தா, சதுரானந்த் மிஸ்ரா ஆகிய 
CPI தலைவர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.    

2004ல் இவ்விரு கட்சிகளும் சேர்ந்து 53 இடங்களைப் 
பெற்றிருந்தபோது டாக்டர் மன்மோகன்சிங்கின் 
ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தன.
CPMன் சோம்நாத் சட்டர்ஜி நாடாளுமன்ற 
சபாநாயகராக இருந்தார். 

இதன் பிறகு சரிவு, சரிவு, ஒரே சரிவுதான்.
தற்போது 2019ல் ஒற்றை இலக்கத்துக்கு
இவ்விரு கட்சிகளும் வந்து விட்டன. இவ்விரு 
கட்சிகளின் அகில இந்தியக் கட்சி என்ற
அங்கீகாரம் கிழிந்து தொங்குகிறது. தேர்தல் 
கமிஷ்னரிடம் கெஞ்சிக் கூத்தாடி காலில் விழுந்து 
கதறி தேர்தல் சின்னத்தைத் தக்க வைத்துக் 
கொண்டுள்ளன இக்கட்சிகள். சுருங்கிக் கொண்டே
வரும் இக்கட்சிகளின் செல்வாக்கு இக்கட்சிகள்
போலிக்கம்யூனிஸ்ட் கட்சிகள் என்பதை 
நிரூபிக்கின்றன.  

காங்கிரஸ் என்னும் பிணம் தன்னோடு கம்யூனிஸ்ட் 
என்னும் பிணத்தையும் சேர்த்துக் கூட்டிக் கொண்டு 
சுடுகாட்டுக்குப் போகிறது.

காங்கிரஸ் முக்தி அடைகிறது; சரி. கூடவே போலிக் 
கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏன் முக்தி அடைகின்றன?
--------------------------------------------------

 

     
 
  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக