விவசாயிகள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து
ராகேஷ் திகாயத் நீக்கப் பட்டார்!
---------------------------------------------------------------------
மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களை
இயற்றி இருந்தது. இதை எதிர்த்து விவசாயிகளின்
போராட்டம் நடந்தது. இப்போராட்டம் பஞ்சாப்,
மேற்கு உபி மாநிலங்களில் மிகவும் தீவிரமாக
நடைபெற்றது. இறுதியில் மோடி அரசு
இச்சட்டங்களை வாபஸ் வாங்கியது.
உபியைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர்
ராகேஷ் திகாயத். இவர் மகேந்திரசிங் திகாயத்
என்னும் மறைந்த விவசாய சங்கத் தலைவரின்
மகன். இவரின் சங்கம் BKU எனப்படும்
பாரதீய கிசான் சங்கம் ஆகும்.
ராகேஷ் திகாயத் FIRE BRAND LEADER ஆவார்.
இன்று இவரின் BKU சங்கத் கூட்டத்தில்
ராகேஷ் திகாயத் சங்கத்தில் இருந்து நீக்கப்
பட்டார். விவசாயிகளின் நலனைப்
புறக்கணித்து வீணாக அரசையால் செய்ததாக
அவர் மீது குற்றச்சாட்டு.
ஆக ராகேஷ் திகாயத் BKU சங்கத்தில் இருந்து
நீக்கப்பட்டு விட்டார். சங்கமும் இரண்டு துண்டுகளாக
உடைந்து விட்டது.
******************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக