ஆடி வில்லை வேறுபாடு
------------------------------------------
ஆதியிலே வந்தது முகம் பார்க்கும்
கண்ணாடி (MIRROR). ஆண்டாள் காலத்திலேயே
முகம் பார்க்கும் கண்ணாடி வந்து விட்டது.
திருப்பாவையில்,
"உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை"
என்று வருவதை ஓர்க.
(முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று)
அப்போது, ஆண்டாள் காலத்தில் "முகம் பார்க்கும் கண்ணாடி"க்கு
தட்டொளி என்று பெயர். தட்டொளி என்பது
அழகிய காரணப் பெயர்.
ஆடி என்ற சொல் MIRRORஐக் குறிக்கும்
சொல்லாக எப்போது வந்தது எனில்,
நிலவுடைமைச் சமூகம் நன்கு வளர்ச்சி
பெற்று முதிர்ந்தபோது வந்தது.
ஆடியும் லென்சும் ஒன்றை அடுத்து மற்றது
உடனடியாக வந்த போதிலும் நடைமுறைப்
பயன்பாட்டில் லென்ஸ் காலத்தால் சற்றுப்
பிந்தியே வந்தது. லென்ஸ் வந்த காலம்
முதலாளியச் சமூக காலம்.
முதலாளியச் சமூக காலத்தில் தமிழ்
உற்பத்தி மொழியாக இல்லை. எனவே
லென்சுக்கு நிகரான தமிழ்ச்சொல்
உருவாக்கப்படவே இல்லை.
அதற்காக mirrorக்கு உரிய சொல்லான
ஆடியையே லென்சுக்கும் பயன்படுத்தலாம்
என்பது தவறு மட்டுமல்ல கிரிமினல் குற்றமும்
ஆகும்.
தன் பொண்டாட்டிக்கும் தம்பி பொண்டாட்டிக்கும்
வெவ்வேறு உறவுமுறைப் பெயர் வேண்டாம்,
ஒரே பெயரே போதும் என்ற கருத்தில் எனக்கு
உடன்பாடு இல்லை. இது தமிழை அழிக்கும்.
மேலும் இது அறிவியலுக்கு எதிரானது.
spectacle என்ற சொல் ஆரம்பத்தில் மூக்குக்
கண்ணாடி என்று அழைக்கப்பட்டு பின்
மருவி தற்போது கண்ணாடி என்று
வழங்கப் படுகிறது. இது வழக்கு. இதில்
தவறில்லை. நான் வலியுறுத்துவது
lens என்ற சொல்லுக்கு ஆடி என்ற சொல்லைப்
பயன்படுத்தக் கூடாது என்பதுதான்.
lens என்ற சொல்லின் தமிழாக்கமாக தற்போது
பயன்படும் "வில்லை" என்ற சொல்லைப்
பயன்படுத்தினால் என்ன தவறு?
என் கண்ணில் வில்லை பொருத்தப் பட்டது
என்று சொன்னால் எழுதியவருக்கு குஷ்டம்
வந்து விடுமா?
ஒன்று வில்லை என்று அவர் எழுதி
இருக்க வேண்டும். அல்லது லென்ஸ் என்றே
எழுதியிருக்க வேண்டும். இரண்டையும்
தவிர்த்து விட்டு ஆடி என்று எழுதியுள்ளார்.
இது கயமை அல்லவா?
அவருக்கும் அறிவியலுக்கும் ஸ்நானப் பிராப்தி
கிடையாது. நிற்க. வில்லைகள் ஒளி விலகல்
கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கும்.
இது நான் பிறக்கும் முன்பே கண்டுபிடிக்கப்
பட்டு விட்டது. நான் 11ஆம் வகுப்பிலும் பின்னர்
பியூசியிலும் பின்னர் பட்டப்படிப்பில் optics
பிரிவிலும் இதைப் படித்தேன். இதற்கான
creditஐப்பெற எனக்கு அருகதை இல்லை.
அதே நேரத்தில் பல்வேறு வாய்ப்புகளில்
ஆடி, வில்லை வேறுபாடு பற்றியும்,
வில்லைகள் ஒளி விலகல் கோட்பாட்டின்படி
இயங்குபவை என்பதையும் விடாது சொல்லி
வருபவன் நான்தான். இதன் மூலம் இயற்பியல்
மாணவர்களைத் தாண்டி ஏனையாரிடம்
இச்செய்தியைக் கொண்டு சென்றுள்ளேன்;
கொண்டு சென்று வருகிறேன்.
ஹெச் ஜி வெல்ஸின் Invisible Man என்னும்
அறிவியல் புனைவைப் படிக்க வேண்டும்.
படிக்க வேண்டும். படிக்க வேண்டும்.
அது முழுவதும் ஒளி விலகல் கோட்பாட்டின்
அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக