வெள்ளி, 27 மே, 2022

இந்தக் கட்டுரை அடையாள அரசியல் ஆசாமிகளுக்கு!
பாரதமா இந்தியாவா?
-----------------------------------------------------------------------------------
மு க ஸ்டாலின் 26.05.2022ல் பிரதர் மோடி பங்கேற்ற 
கூட்டத்தில் பேசினார். அப்போது பிரதமரைக் 
குறிப்பிடும்போது பாரதப் பிரதமர் அவர்களே 
என்று குறிப்பிட்டார். இது கூடாது என்கின்றனர் 
பிரிட்டிஷ் விசுவாசிகள்.   

பாரதம்  என்பது புராணக் குப்பை  அல்ல.
நீராரும் கடலுடுத்த என்று தொடங்கும்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடிப்
பாருங்கள். அப்பாடலின் இரண்டாம் அடி 
"சீராரும் வதனம் எனத் திகழ் 
பரத கண்டமிதில்" என்று வரும்.
மனோன்மணீயம் சுந்தரனார் பாரதம் 
என்று கூறுவதை பாருங்கள்.

இப்பாடல்தான் தமிழ்நாடு முழுவதும் 1969
முதல் எல்லாப் பள்ளிகளிலும் பாடப்படுகிறது.
அரசு விழாக்களில் பாடப்படுகிறது. எனவே 
பாரதம் என்பது புராணக் குப்பை அல்ல.

இந்தியாவுக்கென்று ஓர் அரசமைப்புச் 
சட்டம் உள்ளது. அதன் முதல் பிரிவு 
(the first article of Indian constitution) 
"India that is Bharath shall be the..........."
என்று உள்ளது. பாரதம் எனப்படும் இந்தியா 
என்பது அதன் தமிழாக்கம்.

இந்தியா என்பது பிரிட்டிஷ்காரன் 
திணித்த பெயர். பாரதம் என்பது 
இங்குள்ள மக்களின் நாவில் புழங்கும் 
பெயர். பிரிட்டிஷ் மோகம் தமிழ்நாட்டில்தான் 
வெறித்தனமாக அதிகம். அது தீது.

பொருளாதாரத்தைப் பற்றி என்றைக்காவது 
பேசி இருக்கிறீர்களாடா அடையாள அரசியல் 
மூடர்களா? எவ்வளவு காலத்துக்கு 
முட்டாளாகவே இருக்கப் போகிறீர்கள்?
**********************************************88

*********************************************

சங்க இலக்கியங்கள் காலத்தால் 
முற்பட்டவை. குறைந்தது 2000 
ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

அக்காலத்திலும் கடல் கடந்த 
பயணங்கள் உண்டு என்றபோதிலும், 
பார்த்தலோமியா டயஸ், வாஸ்கோடகாமா, 
மெகல்லன் போன்ற யாத்திரிகர்களின்  
15,16ஆம் நூற்றாண்டுகளின் பயணத்திற்குப் 
பின்னரே இந்தியாவை அடிக்கடி 
குறிப்பிட வேண்டிய தேவை எழுந்தது. 

எனவே அவர்கள் இந்துகுஷ் மலைக்கு 
அப்பால் உள்ள இடம் என்பதை 
குறிப்பிடும் பொருட்டும் சிந்து நதி 
பாயும் பிரதேசம் என்று குறிப்பிடும் 
பொருட்டும் இந்தியா என்று 
சொல்லத்  தொடங்கினர். அது காலப்போக்கில் 
பெருவழக்காக ஆகி விட்டது.

சங்க இலக்கியங்களிலும் பாரதம் 
என்ற சொல் அபூர்வமாக உள்ளதாக 
எனக்கு நினைவு. மகாபாரதம் 
என்னும் இதிகாசத்தைக் குறிப்பிடுவதாக 
பாரதம்  என்ற சொல் பயின்று வந்ததாக 
எனக்கு நினைவு.

16ஆம் நூற்ராண்டிற்குப் பின்னர் 
வழங்கப்பட்ட பொருளில் சங்க 
இலக்கியங்களில் பாரதம் என்ற 
சொல் பயின்றுள்ளதா என்றால் 
இல்லை என்றே கருதுகிறேன்.     

சங்க இலக்கியங்களில் இல்லை என்பது 
ஒரு குறைபாடாக ஆகாது.




இந்தியா என்ற சொல் 15, 16ஆம் 
நூற்றாண்டுகளில் பார்த்தலோமியா 
டயஸ்,மெகல்லன், வாஸ்கோட காமா 
ஆகியோரின்பயணத்தின் பின்னர் 
உண்டான சொல்.

அதற்கு முன்பு இந்த நிலப்பரப்புக்கு 
பெயரே இல்லையா? பதில் 
சொல்லுங்கள். பதினாறாம் 
நூற்ராண்டுக்கு முன்னர் 
இந்த நிலப்பரப்பின் பெயர் என்ன?

காரல் மார்க்ஸ் 19ஆம் நூற்றாண்டைச் 
சேர்ந்தவர் (1818-1883). எனவே அவர் தமது 
சக ஐரோப்பியர்கள் வழங்கிய பெயரைப் 
பயன்படுத்துகிறார்.

இங்கு கேள்வி என்ன? 15ஆம் 
நூற்ராண்டுக்கு முன்னர் இந்தியா 
என்ற பெயர் வழங்கவில்லையே!
அப்போது இந்த நிலப்பரப்பின் 
பெயர் என்ன? 

-----------------------------------------



நான் பாரதம் என்பதை ஏற்கிறேன்.
ஏற்காதவர்கள்தான் அதைக் 
கொளுத்த வேண்டும். ஆனால் 
ஏற்காத எந்த ஒருவரும் அதை எரிக்கத் 
தயாராக இல்லை. பிறழ் புரிதலைத் 
தவிர்க்கவும்.     
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக