திங்கள், 9 மே, 2022

 பழைய பென்ஷன் திட்டத்தை 

திமுக ஒருபோதும் கொண்டு வராது!

கொண்டு வர வேண்டும் என்று 

விலைபோன CPI, CPM கட்சிகள் போராடாது!

------------------------------------------------------------------  

1) ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

அசோக் கெலாட் முதல்வர். ராஜஸ்தானில் 

பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் 

கொண்டு வரப்பட்டு விட்டது. புதிய பென்ஷன் 

திட்டத்தை ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு 

ஏற்க மறுத்து விட்டது.


2) ராஜஸ்தானைத் தொடர்ந்து சட்டிஸ்கர் 

மாநிலத்திலும் பழைய பென்ஷன் திட்டம் 

கொண்டு வரப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை 

சட்டிஸ்கரின் காங்கிரஸ் அரசு செய்து 

வருகிறது. காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல் 

பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு 

வருவதில் உறுதியாக இருக்கிறார்.


3) ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி

நடக்கிறது. முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்.

ராஜஸ்தானைப் பின்பற்றி இங்கும் 

பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு 

வர வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட 

எதிர்க்கட்ச்சிகள் கோரி வருகின்றன.


4) பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு 

வருவோம் என்று தேர்தல் வாக்குறுதி 

கொடுத்து வாக்குகளை பெற்று 

ஆட்சிக்கு வந்து விட்டு, வாக்குறுதியை 

நிறைவேற்ற முடியாது என்று திமுக 

சொல்கிறது.


5) பழைய பென்சனின் ஆதரவாளர்களான 

CPI, CPM கடசிகள் போராடுமா?

போராடாது. ஏற்கனவே சீதாராம் எச்சூரியிடம் 

சபரீசன் மொபைலில் பேசி மிரட்டி இருக்கிறார்.

பழைய பென்ஷனைப் பற்றிப் பேசக்கூடாது 

என்று சபரீசன் கூறியதும் பம்மிப் பதுங்கி 

பழைய பென்ஷன் பற்றிப் பேச மாட்டோம் 

என்று உறுதி கொடுத்துள்ளார் யெச்சூரி 

என்று ஆங்கில ஊடகவியலாளர்கள் கூறி 

வருகின்றனர். 


6) ரூ 25 கோடிக்கு திமுகவிடம் கட்சியை

அடகு வைத்த போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள்

திமுகவை எதிர்க்குமா? எதிர்க்க முடியுமா?

எதிர்த்தால் இவர்களின் முதுகுத் தொலியை 

திமுக உரித்து விடுமே!


7) இப்போது CPI, CPM தமிழகத் தலைவர்களின்

எண்ண ஓட்டம் இதுதான்! திமுகவிடம் ஒரு 

பெர்ம் பேசுவது; பழைய பென்ஷன் பற்றிப் 

பேசாமல் இருப்பதற்கு உரிய கூலியைக் 

கேட்பது. கணிசமான சி பெறுவது.

இதுதான் CPI, CPMன் திட்டம்.    




8) எப்படியும் சபரீசன் கணிசமான தொகை 

கொடுப்பார்' லம்பாகக் கிடைக்கும் என்று 

நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு 

போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் கிடக்கின்றன.

இவர்களை இன்னும் நம்பும் கோமாளிப் பயல்களை

என்ன செய்வது?

************************************************* 

திமுக செய்வதையெல்லாம் 

எதிர்க்க வேண்டியதில்லை!

--------------------------------------------

தாராளவாத சிந்தனையம் பின்நவீனத்துவ 

சிந்தனையும் உடைய குட்டி முதலாளித்துவம் 

திமுக அரசின் இந்த உத்தரவை எதிர்க்கும்.

அதன் மூலம் தன்னை முற்போக்காகக் 

காட்ட முனையும்!


இப்படிப்பட்ட குட்டி முதலாளித்துவர்களுக்கு 

இன்றைய பள்ளிகளில் உள்ள மாணவர்கள் நிலை,

அவர்களின் உளப்பாங்கு, ஒழுங்கீனமே 

ஒழுங்காக மாறியிருக்கும் நிலை ஆகியவை 

பற்றி ஒரு இழவும் தெரியாது.


தனியார் பள்ளிகளை ஒழுங்காக 

நடத்தும்போது அரசுப் பள்ளிகளில் மட்டும் 

ஏன் இந்த அவலநிலை என்று 

குட்டி முதலாளித்துவம் சிந்திக்காது.


கையில் சாதிக்கயிறு கட்டும் விவகாரத்தில்

அண்மையில் ஒரு மாணவன் கொலை 

செய்யப்பட்டு விட்டான். இரண்டு மாணவர்கள் 

கைது செய்யப் பட்டுள்ளார்கள். 


கண்டிக்க வேண்டிய இடத்தில் 

கண்டிக்க வேண்டும்.

தண்டிக்க வேண்டிய இடத்தில் 

தண்டிக்க வேண்டும்.


அரசுப் பள்ளிப் பிள்ளைகளைக் கெடுப்பவர்கள்

தாராளவாத மனப்போக்கு உடைய குட்டி 

முதலாளித்துவக் கபோதிகளே!


எந்த ஒரு CORRECTIVE MEASUREஐயும் 

தர்க்கமே  இல்லாமல் எதிர்க்கும் 

குட்டி முதலாளித்துவத்தை ஒதுக்காமல் 

தமிழ்ச் சமூகம் உருப்படாது.

------------------------------------------------  

          

        


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக