SAFETY 222
சோனியாவுக்கும் சுப்பிரமணியம் சுவாமிக்கும்
ராஜிவ் கொலைச் சதியில் பங்கு உண்டா?
ராஜிவ் படுகொலையில் யாருக்கெல்லாம்
பங்கு உண்டு? யாருக்கெல்லாம் பங்கு இல்லை?
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
ராஜிவ் படுகொலை செய்யப் பட்டபோது அவருக்கு
வயது 47தான். உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு
அவருக்கு 74 வயது ஆகி இருக்கும்.
ராஜிவ் படுகொலையில் ஜெயலலிதாவுக்குப்
பங்கு உண்டு என்று ஒரு அபத்தமான கருத்து
நிலவியது; இன்றும் நிலவுகிறது. மே 21 ஸ்ரீபெரும்புதூர்
கூட்டத்தில் ஏன் ஜெயா பங்கேற்கவில்லை என்று
கேள்வி கேட்கிறது குட்டி முதலாளித்துவம்.
மே 21 அன்று பொண்டாட்டியோடு படுக்காதவன்
எல்லாம் பொண்டாட்டியைக் கொல்லப் போகிறான்
என்பது மாதிரியான ஒரு அபத்தமான தர்க்கம் இது.
அதிமுக ஒரு கட்சி. காங்கிரசும் ஒரு கட்சி. இரண்டும்
கூட்டணி வைத்து இருந்தாலும், தனித்தனியாகவும்
கூட்டம் போடுவார்கள்; சேர்ந்தும் கூட்டம்
போடுவார்கள். இதெல்லாம் அந்தந்தக்
கட்சிகளின் உரிமை, சௌகரியம் முதலியவற்றைப்
பொறுத்தது. இதை வைத்துக் கொண்டு
ஜெயலலிதாவுக்கு ராஜிவ் கொலைச் சதியில்
பங்குண்டு என்பவன் மிகப்பெரிய மன நோயாளி.
அடுத்து கலைஞர். கலைஞர்தான் புலிகளோடு
சேர்ந்து கொண்டு ராஜீவைக் கொன்று விட்டார்
என்ற பிரச்சாரத்தை அதிமுக, காங்கிரஸ் இரு
கட்சிகளும் முழுவீச்சில் நடத்தின. திமுக அக்கினிப்
பிரவேசம் செய்து தன்னை நிரூபிக்க வேண்டும்
என்று பேசினார் வாழப்பாடி. மு க ஸ்டாலினுக்கு
கொலைச்சதி பற்றித் தெரியும் என்று பேசியவர்
வாழப்பாடி.
மே 21ல் ஸ்ரீபெரும்புதூரில் நடக்க இருந்த
கூட்டத்தை திமுக ரத்து செய்தது ஏன் என்ற கேள்வி
எல்லாத் தரப்பில் இருந்தும் கலைஞரை நோக்கி
வீசப்பட்டது. ஒரே நாளில் ஒரே ஊரில் திமுக,
காங்கிரஸ் இரு கட்சிகளின் கூட்டம் என்றால்
ஏற்படும் உராய்வைத் தவிர்க்கும் (to avoid friction)
நோக்கில் இயல்பாக கலைஞர் எடுத்த முடிவு
அவரைப் பெரும் சங்கடத்தில் தள்ளியது.
எனவே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க,
ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் சொல்லியதால்தான்
கூட்டத்தை ரத்து செய்தேன் என்று கலைஞர்
சாமர்த்தியமாக அறிவித்தார். ஆனால் ஆளுநர்
பீஷ்ம நாராயண் சிங்கோ தான் கலைஞரிடம்
அப்படிச் சொல்லவில்லை என்று கூறி கலைஞரை
மேலும் சங்கடத்தில் மாட்டி வைத்து விட்டார்.
உண்மையில் ராஜிவ் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டா? கொலை பற்றி அவருக்கு முன்பே
தெரியுமா?
ஆபிரஹாம் லிங்கன் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டு என்பது எவ்வளவு உண்மையோ
அந்த அளவுக்கு உண்மைதான் ராஜிவ் கொலையில்
கலைஞருக்குப் பங்கு உண்டு என்பதும்.
வாசகர்கள் கவனத்திற்கு:
ஆபிரஹாம் லிங்கன் கொலையுண்டது 1865ல்.
கலைஞர் பிறந்தது 1924ல். அதாவது லிங்கன்
கொலை நடந்து 58 ஆண்டு கழித்து கலைஞர்
பிறந்துள்ளார். கலைஞரின் தந்தை முத்துவேலரே
அப்போது பிறந்திருக்கவில்லை!
இருந்தாலும், ராஜிவ் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டு; ஜெயலலிதாவுக்குப் பங்கு உண்டு
என்று பிதற்றிக் கொண்டு திரியும் தற்குறிகள்
தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு.
அடுத்து டாக்டர் சுப்பிரமணியம் சுவாமிக்குப்
பங்கு உண்டா என்பது ஒரு கேள்வி. 28 ஆண்டுகளாக
உயிரோடு இருக்கும் கேள்வி. கேள்வி கேட்டு வாயை
மூடுவதற்கு முன்பே, உண்டு உண்டு என்று கோரஸாக
குட்டி முதலாளித்துவம் பதில் சொல்லும். தமிழ்நாட்டில்
பின் எப்படிப் பதில் வரும்!
சு சுவாமிக்கு எத்தகைய பங்கும் கிடையாது என்பதே
உண்மை. சந்தேகம் பலருக்கு இருக்கலாம்.
ஆனால் ஒருபோதும் சந்தேகமானது நிரூபணத்தின்
இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்று
ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
(The suspicion can not take the place of proof).
சந்திரா சாமிக்கு நெருக்கமானவர்கள் என்றால்
அது சந்திர சேகரும் நரசிம்மராவும்தான்.சு சுவாமி
நெருக்கமானவர் அல்ல. சந்திரா சாமியைப்
பொறுத்த மட்டில், சு சுவாமி ஒரு Guest; அவ்வளவுதான்.
வீட்டுக்கு வந்து ஒரு காப்பி சாப்பிட்டு விட்டுப்
போகலாம்; அவ்வளவுதான்.
எல்லா விஷயங்களையும் சந்திரா சாமியானவர்
சு சுவாமியிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்.
அவரிடம் இருந்து ஒன்றிரண்டு விஷயங்களைத்
தெரிந்து கொண்டு, அவர் சொல்லாத விஷயத்தையும்
யூகித்துச் சொல்லும் சு சுவாமி தன்னை மிகவும்
சக்தி வாய்ந்த மனிதராகக் காட்டிக் கொள்வார்.
உண்மையில் சு சுவாமி ஒரு வெத்து வெட்டு.
ராஜீவைக் கொல்லும் அளவுக்கு அவருக்கு சக்தி
இருக்குமானால், அதன் பிறகு அவர் அமைச்சராகி
இருப்பார். தொடர்ந்து அமைச்சராக இருந்து
கொண்டே இருப்பார்.
ஆனால் கடைசியாக அவர் அமைச்சராக இருந்தது
ஜூன் 1991ல். அதாவது சந்திரசேகர் பிரதமராக
இருந்தபோது சுவாமி அமைச்சராக இருந்தார்.
அதன் பிறகு இன்று வரை அவர் அமைச்சராக
முடியவில்லை.
அமைச்சரை விடுங்கள். எம்பி பதவி பற்றிப்
பார்ப்போம். இந்தியாவில் தேசிய அரசியலில்
உள்ள ஒரு அரசியல்வாதி எம்பியாக இருந்தால்
மட்டுமே மதிப்பு. அது மட்டுமல்ல, எம்பியாக
இருந்தால் மட்டுமே காரியம் சாதிக்க முடியும்.
இல்லாவிட்டால் மயிருக்குச் சமம்.
சு சுவாமி கடைசியாக எப்போது எம்பியாக
இருந்தார்? 1998-99ல் மதுரை எம்பியாக இருந்தார்.
அதன் பிறகு, ஒரு எம்பியாக ஆவதற்காக நாய்
படாத பாடு பட்டார். முடியவில்லை. 1999ல்
இருந்து 2016 வரை 17 ஆண்டுகள் சு சுவாமி
எம்பியாகக் கூட இல்லை.
2014ல் பாஜக ஆட்சி வந்ததும் மோடியிடம் எம்பி
பதவி கேட்டு காவடி தூக்கினார். மோடிக்கு
இவருக்கு ஒரு எம்பி பதவி அழ விருப்பமில்லை.
கடைசியில் வேறு வழியின்றி, 2016ல் கேவலம்
ஒரு நியமன எம்பி பதவியைக் கொடுத்தார்.
சினிமா நடிகர்கள் சிவாஜி கணேசன், நடிகை
,நர்கீஸ்,கிரிக்கெட்டின் டெண்டுல்கர்
போன்றவர்களுக்கு ஒரு கெளரவத்திற்காகக்
கொடுக்கும் ராஜ்யசபா நியமன எம்பி பதவியை
பெருத்த முயற்சிக்குப் பின்னர் சு சுவாமி அடைந்து
இருக்கிறார்.இதுதான் சுவாமியின் அந்தஸ்து.
நியமன எம்பியாக இருந்ததால், கடந்த ஜனாதிபதி
தேர்தலில் சுவாமி வாக்களிக்கவில்லை
(NOT eligible to vote).
ராஜிவ் கொலைச்சதியில் சுவாமிக்குப் பங்கு
இருக்குமானால், இந்திய அரசியலில் இவர்
புறக்கணிக்க முடியாத சக்தியாகி இருப்பார்.
ஆனால் இவரோ ஒரு எம்பி பதவிக்கு 17 வருஷம்
ஏங்கிக்கிடந்தார்.சிந்திக்கும் திறன் உள்ளவர்கள்
இதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆக ராஜிவ் கொலையில் சு சுவாமிக்குப் பங்கு
எதுவும் இல்லை என்பதைத் தர்க்க ரீதியாக
நிரூபித்து இருக்கிறேன்.
கலைஞர், ஜெயலலிதா, சு சுவாமி ஆகிய
மூவருக்கும் ராஜிவ் படுகொலையில் எந்தத்
தொடர்பும் இல்லை. இந்த உண்மை இங்கே
நிரூபிக்கப் பட்டு இருக்கிறது.
இது கட்டுரை அல்ல. இது தீர்ப்பு. 28 வருஷத்துக்கு
முன்னால் சொன்ன முட்டாள்தனமான கருத்தை
இன்றைக்கும் சொல்லிக் கொண்டு இருப்பது
என்னுடைய இந்தத் தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு
வரட்டும்.
இதையும் மீறி, எந்த முட்டாளாவது கலைஞருக்குப்
பங்கு, சுவாமிக்குப் பங்கு என்று பிதற்றிக்
கொண்டிருந்தால் ...............
வேண்டாம், நான் சாபம் விடக் கூடாது. என்னுடைய
சாபம் உடனே பலித்து விடும்.
----------------------------------------------------------------------------------------
தொடரும்
அடுத்து: சோனியா, வாழப்பாடி, மூப்பனார்,
குமரன் பத்மநாபன்.
*************************************************************
ராஜிவ் படுகொலை பற்றிய எமது கட்டுரைத்
தொடரில் முன்வைத்த வாதங்கள், தர்க்கங்களை
இதுவரை எவர் ஒருவரும் மறுக்கவில்லை. ஏனெனில்
மறுப்பதற்கு இடம் தராத மிகவும் காத்திரமான
வலுவான தர்க்கங்கள் அவை. அவை உண்மையை
எடுத்துக் கூறுவதோடு நில்லாமல், உண்மையை
நிரூபிக்கவும் செய்கின்றன.இதற்கு பதிலளிக்க
வக்கற்ற நிலையில் எவரேனும் அவதூறுகளையோ
வசையையோ முன்வைத்து விட்டுத்
தப்பிக்கலாம் என்று நினைத்தால் அது முடியாது.
அத்தகையவர்களின் முதுகெலும்புகள்
குறிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக