திங்கள், 16 மே, 2022

 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்!

2024 தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற 

கட்டுரையின் முன்னுரை (5 அல்லது 6)

------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------

மொத்த வாக்காளர்கள் = 91.19 கோடி 

வாக்குப் பதிவு = 67.40% 

பதிவான வாக்குகள் = 62 கோடி 


பாஜக பெற்ற வாக்குகள் = 37.36%

அதாவது 22.9 கோடி வாக்குகள். 

(23 கோடி என்று கொள்க)

பாஜக பெற்ற இடங்கள் = 303.

(மொத்த இடங்கள் = 543)


காங்கிரஸ் பெற்ற வாக்குகள் = 19.49%

அதாவது 11.94 கோடி வாக்குகள். 

காங்கிரஸ் பெற்ற இடங்கள் = 52.   


புரிந்து கொள்ள எளிமையாகவும் 

மனதில் பதிக்க ஏதுவாகவும் 

பின்வருமாறு புரிந்து கொள்ளுங்கள். 


1) பாஜக காங்கிரஸ் இரண்டும் சேர்ந்து 

பதிவான வாக்குகளான 62 கோடியில் 

35 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளன.

மிச்சமுள்ள 27 கோடி வாக்குகளை 

மாநிலக் கட்சிகள் பெற்றுள்ளன.


2) காங்கிரஸைப் போல் இரண்டு மடங்கு 

வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.

அதாவது காங்கிரஸ் 12 கோடிக்குச் சற்றுக் 

குறைவான வாக்குகளையும், பாஜக 

23 கோடி வாக்குகளையும் பெற்றுள்ளது.


3) வாக்கு சதவீதத்தைப் பொறுத்து,

காங்கிரஸ் 19 சதவீதமும் பாஜக 38 சதவீதமும் 

பெற்றுள்ளன. இரண்டு மடங்கு!


4) இடங்களைப் பொறுத்தமட்டில், காங்கிரஸ் 

52 இடங்களையும் பாஜக 303 இடங்களையும் 

பெற்றுள்ளன. பாஜக பெற்றுள்ளது கிட்டத்தட்ட 

காங்கிரசைப்போல் ஆறு மடங்கு இடங்கள்!


5) 2014 தேர்தல், 2019 தேர்தல் என்று 

தொடர்ச்சியாக இந்த இரண்டு தேர்தல்களிலும்

காங்கிரஸ் மூன்று இலக்க இடங்களை 

மக்களவையில் பெறவில்லை (2014: 44 இடங்கள்;

2019: 52 இடங்கள்)  


6) எனவே காங்கிரஸானது இந்திய நாடாளுமன்றத்தின் 

அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸதை 

தொடர்ந்து இரண்டு தேர்தல்களிலும் பெறவில்லை.

    


CPI, CPM கட்சிகளின் பரிதாப நிலை!

--------------------------------------------------------

இறுதியாக தேசியக் கட்சிகளான CPI, CPM

கடசிகள் வாக்கு சதவீதம் என்ன என்று 

பார்த்து விடுவது நல்லது.


2019 தேர்தலில் CPI கட்சி 2 இடங்களையும்

CPM கட்சி 3 இடங்களையும் பெற்றுள்ளன.    

CPI பெற்ற வாக்குகள் = 35.76 லட்சம் (0.58%)


CPM பெற்ற வாக்குகள் = 1 கோடியே 7 லட்சம்.

அதாவது 1.75%


CPI பெற்ற இரு இடங்களும் திமுக கூட்டணியில் 

இடம் பெற்று தமிழ்நாட்டில் கிடைத்த 

இடங்கள். மீதி 27 மாநிலங்களிலும் யூனியன் 

பிரதேசங்களிலும் சேர்த்து CPI பெற்றது 

பெரிய பூஜ்யம். அது போலவே CPM பெற்ற 

3 இடங்களில் 2 இடங்கள் தமிழ்நாட்டில் திமுக 

கூட்டணியால் கிடைத்த இடங்கள். மீதி ஒரு இடம் 

கேரளத்தில் கிடைத்தது.


தமிழ்நாடு தாண்டி CPI ஒரு பூஜ்யம்.

தமிழ்நாடு கேரளம் தாண்டி CPM ஒரு 

மிகப்பெரிய பூஜ்யம்.

இவ்விரு கட்சிகளும் தேசியக் கட்சி என்ற

அந்தஸ்தை இழக்கின்றன.     


இவை அனைத்தையும் மனதில் பதித்துக் 

கொள்ளுங்கள். அடுத்து நான் எழுதப்போகும் 

கட்டுரையைப் புரிந்து கொள்ள இந்தப் 

புள்ளி விவரங்கள் தேவை.

******************************************



புரட்சியாளர் வேல்முருகனின் மனைவி 

பாஜகவில் இணைந்தார்!

--------------------------------------------------------------

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்

வேல்முருகன் அவர்கள். இவர் பெரும் 

புரட்சியாளர் ஆவார்.


இவரின் மனைவி காயத்ரி.

தற்போது காயத்ரி பாஜகவில் சேர்ந்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு 

கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கினார்.


காயத்ரி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம்

அமையட்டும் என்று வாழ்த்துவோம். காயத்ரி 

அழகான பெயர். அழகான சமஸ்கிருதப் பெயர்.


போலி முற்போக்கு கபோதிகளே,

சம்ஸ்கிருத எதிர்ப்பு போலிக் கயவர்களே 

இதற்கெல்லாம் உங்கள் பதில் என்னடா?


ஏல, நாண்டுக்கிட்டு நில்லுங்கலே என்று 

கூறி செருப்பால் அடிக்கிறார் 

இசக்கிமுத்து அண்ணாச்சி!

**********************************************

தகவல் ஆதாரம்: சாமுராய் பத்திரிகை.     

---------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக