ராஜிவ் கொலையாளிகளின் கருணை மனு
டாக்டர் அப்துல் கலாமுக்கு அனுப்பப் பட்டதா?
அனுப்பப் படவில்லை என்பதே உண்மை!
------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
1) ராஜிவ் படுகொலை நடந்தது மே 1991ல்.
2) பூந்தமல்லி தடா நீதிமன்றம் 1998ல்
குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும்
மரண தண்டனை விதித்தது.
3) 1999ல் உச்ச நீதிமன்றம் 26 மரண தண்டனைகளில்
22 மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக
மாற்றியது. மீதி நான்கு பேருக்கும் மரண தண்டனையை
உறுதி செய்தது. (நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன்)
4) அடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும்
படலம். மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட
நான்கு பேரும் ஜனாதிபதிக்கு 1999ல் கருணை மனு
அனுப்பினர்.
5) அப்போது 1999ல் ஜனாதிபதியாக இருந்தவர்
கே ஆர் நாராயணன். அவரின் பார்வைக்கு
இவர்களின் கருணை மனு மத்திய உள்துறையால்
உரிய அறிவுரையுடன் அனுப்பப் படவில்லை.
6) அடுத்து 2002ல் அப்துல் கலாம் ஜனாதிபதியாக
வருகிறார். அன்றைய உள்துறை அமைச்சர்
சிவராஜ் பட்டீல் (காங்கிரஸ்) கருணை மனுவை
ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பவில்லை.
7) இவ்வாறு கே ஆர் நாராயணன், அப்துல் கலாம்
ஆகிய இரு ஜனாதிபதிகளின் பார்வைக்கும்
குற்றவாளிகளின் கருணை மனுக்கள் உரிய
கோப்புகளுடன் உரிய அறிவுரைகளுடன்
அனுப்பப் படவில்லை. எனவே கே ஆர்
நாராயணனுக்கும் அப்துல் கலாமுக்கும் கருணை
மனுக்கள் மீது முடிவெடுக்க வாய்ப்பு ஏற்படவில்லை.
8... அடுத்து பிரதிபா பட்டீல் ஜனாதிபதி ஆகிறார்
(2007-2012). அப்போதைய உஉள்துறை அமைச்சர்
ப சிதம்பரம் 2011ல் கருணை மனுக்களை
நிராகரிக்குமாறு கோப்பில் அறிவுறுத்தி ஜனாதிபதி
பிரதிபா படீலுக்கு அனுப்பி வைத்தார். அவர்
2011 ஆகஸ்டில் மூன்று கருணை மனுக்களை
நிராகரித்தார் ( முருகன், சாந்தன், பேரறிவாளன்).
9) முன்னதாக அக்டோபர் 1999ல் தமிழக ஆளுநருக்கு
மரண தண்டனை பெற்ற நால்வரும் கருணை
மனுக்களை அனுப்பினர். அன்றைய முதல்வர்
கலைஞரின் அறிவுரையை (advice by the council of ministers)
ஏற்று அன்றைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி
அவர்கள் நளினியின் கருணை மனுவை மட்டும்
ஏற்றுக் கொண்டு அவரின் மரண தண்டனையை
ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்ற மூவரின்
கருணை மனுக்களை நிராகரித்தார்.
10) பின்னர் உச்சநீதிமன்றம் 2014 பிப்ரவரியில்
வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகள் மூவரின்
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி
தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கியவர் தமிழரான
தலைமை நீதியரசர் சதாசிவம் அவர்கள்.
11) இதுதான் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக
மாறியதன் வரலாறு. ஜனாதிபதிகள் ஏன்
முடிவெடுக்கவில்லை என்பது இப்போது விளங்கும்.
***********************************************
பின்குறிப்பு::
கே ஆர் நாராயணனுக்கும் டாக்டர் அப்துல் கலாமுக்கும்
குற்றவாளிகளின் கருணை மனுக்கள் அனுப்பப்
பட்டிருந்தால், அவர்கள் கருணை வழங்கி இருப்பார்கள்.
அதாவது மரண தண்டனையை ரத்து செய்து அதை
ஆயுள் தண்டனையாக மாற்றி இருப்பார்கள்.
இதைத் தவிர்க்கவே, காங்கிரஸ் அரசு மேற்கூறிய
இருவருக்கும் கருணை மனுக்களை அனுப்பவில்லை.
----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக