வெள்ளி, 13 மே, 2022

இலங்கையின் அரசியல் சிக்கல்கள்!
புதிய பிரதமர்  ரணில் விக்கிரம சிங்கே தீர்ப்பாரா?
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------
1) ஜனாதிபதி, பிரதமர் என்னும் இரண்டு பதவிகளில் 
இலங்கையைப் பொறுத்தமட்டில், ஜனாதிபதி 
பதவியே அதிக அதிகாரம் கொண்டது. அங்கு 
ஜனாதிபதிதான் Chief Executive. இந்திய ஜனாதிபதி 
போன்றவர் அல்லர் இலங்கையின் ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி போன்றவர் என்று புரிந்து 
கொள்ளுங்கள்.

2) எனவே இலங்கைப் பிரதமர் என்பவர் அதிகாரம் 
குறைந்த பதவியில் இருப்பவர் என்ற உண்மை 
நம் அறிவில் உறைய வேண்டும். (அறிவினில் உறைதல்
கண்டீர் என்பார் பாவேந்தர்). எனவே இந்தியப் 
பிரதமர் பதவி போன்றதல்ல இலங்கைப் பிரதமர் பதவி.

3) இலங்கையின் ஜனாதிபதியாக தற்போது இருப்பவர் 
கோத்தபய ராஜபக்சே. இவர் அண்மையில் பிரதமர் 
பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடிப்போன 
மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரர்.

4) கோத்தபய ராஜபக்சே ஒரு ராணுவத் தளபதி.
லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்த ராஜபக்சே 
விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை 
அரசின் ஆயுதப் படைகளை வழிநடத்தியவர்,

5) கோத்தபய ராஜபக்சே SLPP எனப்படும் ஸ்ரீ லங்கா 
பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்தவர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே UNP எனப்படும் 
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்.
பிரதமரும் ஜனாதிபதியும் வெவ்வேறு கட்சிகளைச்
சேர்ந்தவர்கள். ரணில் பலமுறை இலங்கையின் 
பிரதமராக இருந்தவர். எதிர்க்கட்சித் தலைவராகவும்
இருந்தவர்.

7) ஜே ஆர் ஜெயவர்த்தனா யார் என்று தெரியுமா? 
முன்பு இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர்.
அவரின் மருமகன்தான் இந்த ரணில் விக்கிரமசிங்கே.

8) உங்களுக்கு பிரேமதாசா யாரென்று தெரியுமா?
இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர்தான் அவர்.
அவர் ஒரு வெடிகுண்டுச் சம்பத்தில் விடுதலைப் 
புலிகளால் கொல்லப்பட்டார். அவரின் மகன் 
சஜித் பிரேமதாசா  தீவிர அரசியலில் இருக்கிறார்.
அவர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார். ஆனால் 
கோத்தபய ராஜபக்சே அவரை ஏற்கவில்லை.

9) சஜித் பிரேமதாசா கடுமையான தமிழர் எதிர்ப்பாளர்.
இவருக்கு இலங்கையின் முஸ்லீம் மக்கள் 
ஆதரவு அளிக்கின்றனர். இலங்கையில் முஸ்லிம்கள் 
முற்றிலுமாக தமிழர்களுக்கு எதிராக நிற்கின்றனர்.

10) ரணில் விக்கிரமசிங்கே கற்றறிந்தவர். மிதவாதப் 
போக்கு உடையவர். இதன் காரணமாக மற்றவர்களை 
விட ஒப்பீட்டளவில் இவருக்கு ஒரு ஏற்புடைமை 
(ACCEPTABILITY) உண்டு. மேலும் இவர் இந்திய 
ஆதரவாளர். ராஜபக்சே சகோதரர்கள் இந்திய 
எதிர்ப்பாளர்கள். தமிழர்களைப் பொறுத்தமட்டில்,
இவர் தமிழர்களின் கொடிய எதிரியாக இருந்தவரும் 
அல்லர்; இருப்பவரும் அல்லர்.

11) இலங்கையின் அரசியல் சிக்கல்களுக்கு ரணிலிடம் 
தீர்வு எதுவும் கிடையாது. ஆனால் தற்போது அதள 
பாதாளத்தில் கிடைக்கும் இலங்கைப் பொருளாதாரத்தை 
ஓரளவேனும் தூக்கி நிறுத்திட இவரை விட்டால் 
இலங்கை ஆளும் வர்க்கத்திடம் வேறு பொருத்தமான 
ஆள் இல்லை.
 
12) இந்தியாவின் உதவி இல்லாமல் இலங்கை 
பிழைக்க இயலாது. இதுதான் யதார்த்தம்.
பார்ப்போம் ரணிலின் சாதுரியத்தை!
***************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக