சனி, 14 மே, 2022

வரலாறு காணாத பணவீக்கம்!
மோடி அரசு சமாளிக்குமா?
-------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
எட்டு ஆண்டுகளுக்கு முன், இதே மே மாதத்தில் 
(2014 மே) மோடி பிரதமர் ஆனார். இன்று வரை அவரே 
 நீடித்தும் வருகிறார்.

இந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து உள்ளது.
மார்ச் 2022ல் சில்லரைப் பணவீக்கமானது 
(retail inflation) 6.95% என்று அதிகரித்தது.
ஏப்ரல் மாதத்தில் (2022 ஏப்ரல்) இது மேலும்
அதிகரித்து 7.79% ஆக உயர்ந்தது.

மே 2022ல் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது 
என்று அஞ்சப் படுகிறது.

இந்தியாவின் தொழிலாளர் துறை அமைச்சகமானது  
(ministry of labour) நுகர்வோர் விலைவாசிக்குறியீட்டு 
எண் என்ற கணக்கீட்டைத் தயாரிக்கிறது. இது 
ஆங்கிலத்தில்  CPI = Consumer Price Index என்று அழைக்கப் 
படுகிறது. இந்த CPI என்னை வைத்துத்த்தான் 
மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கும் மற்றும் 
ஏனைய தொழிலாளர்களுக்கும் பஞ்சப்படி 
வழங்கப் படுகிறது.

ஆக CPI எகிறிக் கொண்டிருக்கிறது. எனவே 
பணவீக்கமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த இடத்தில் பணவீக்கம் என்றால் என்ன என்று 
தெரிந்து கொள்வது அவசியம்.

அரசியல் பேசுவோரில் பலர், குறிப்பாக போலி 
இடதுசாரிகள். போலி முற்போக்குகள் ஆகியோருக்கு 
பணவீக்கம் (INFLATION) என்றால் என்ன என்றே 
தெரியாது. தெரிந்தது போல் நடித்துக் கொண்டே 
இருப்பார்கள்.

Too much of money chasing too few of goods is called inflation.
இது ஒரு bookish definition ஆகும். விளக்கி எழுத 
விரும்பவில்லை. கருப்பு நாயைக் குளிப்பாட்டி
வெள்ளையாக்க முடியாது அல்லவா! அது போல 
போலி இடதுசாரி, போலி முற்போக்கு கபோதிகளை 
விஷய ஞானம் உள்ளவர்களாக ஆக்குவது இயலாது.
மேலும் அது என்னுடைய அஜெண்டாவிலும் இல்லை.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது. பணவீக்கம் ஏன் 
இந்த அளவு அதிகரித்து உள்ளது? பணவீக்கம் என்பது 
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் 
ஏற்பட்டுள்ள ஒரு நெருக்கடி. காரணம் கொரோனாவும் 
அதனால் விளைந்த உற்பத்தி முடக்கமும்.
          
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்தான் காரணம் 
பெட்ரோல் டீசலின் விலை உயர்வும் உணவுப் 
பொருட்களின் விலை உயர்வும் ஆகும். நுகர்வோர் 
விலைவாசிக் குறியீட்டு எண் விவரங்களை 
ஆர்வமுள்ள வாசகர்கள் தேடி எடுத்துப் படிக்கலாம்.

சரி, இந்தப் பணவீக்கத்தை மோடி அரசு சமாளிக்குமா?
சமாளிப்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 
என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறார்?
அவை விலைவாசியைக் குறைத்து விடுமா?

யோசித்து வையுங்கள். அடுத்த கட்டுரையில் 
சந்திப்போம்.
***********************************************
 
     
 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக