உபி மேலவைத் தேர்தல் முடிவுகள்!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
இந்தியாவில் மேலவை உள்ள மாநிலங்கள் ஆறில்
உபியும் ஒன்று. உபி மேலவையில் காலியாக இருந்த
36 இடங்களுக்கு ஏப்ரல் 9ல் தேர்தல் நடைபெற்றது.
அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
உபி சட்டமன்ற மேலவை மொத்த இடங்கள் = 100
காலியாக இருந்த இடங்கள் = 38
தேர்தல் நடந்த இடங்கள் = 36
முடிவு அறிவிக்கப்பட்டவை = 36
முடிவுகள் வருமாறு:-
பாஜக = 33
சுயேச்சை = 3
சமாஜ்வாதி = 0
காங்கிரஸ் கட்சியும், மாயாவதியின் பகுஜன் கட்சியும்
இத்தேர்தலில் போட்டியிடவில்லை. முடிவு பூஜ்யம்
என்று நன்கு தெரிந்த கட்சிகளான காங்கிரசும்
பகுஜனும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டன.
போட்டியிட்டு அவமானத்துக்கு உள்ளானது சமாஜ்வாதி.
தற்போது 100 பேர் கொண்ட உபி மேலவையில்
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இடங்களைப்
பெற்றுள்ளது பாஜக. 67 இடங்களைப் பெற்றுள்ளது
பாஜக. (BJP enjoys a two-third majority in the Legislative Council) .
மாயாவதி, அகிலேஷ், யோகி ஆதித்தியநாத்
ஆகிய மூவரும் MLCயாக இருந்துதான்
முதல்வர்களாகச் செயலாற்றினார். தற்போதுதான்
(2022) யோகி MLA ஆகி முதல்வராக இருக்கிறார்.
**************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக