ஆனந்த் தெல்தும்டே
அம்பேத்கார் பிறந்த நாளன்று (ஏப்ரல் 14)
கைது செய்யப் பட்டாரா?
குட்டி முதலாளியத் தற்குறிகள் கூறுவது உண்மையா?
(அடர் கந்தக அமிலக் கட்டுரை)
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
ஆனந்த் தெல்தும்டே அவர்கள் ஒரு அறிஞர். கல்லூரி
ஆசிரியராக இருந்தவர். டாக்டர் அம்பேத்காரின்
பேத்தியை மணந்தவர். இவர் பீமா கொரிகான்
வழக்கு என்று அறியப்படும் வழக்கில் மற்றச்
சிலருடன் கைதாகி மும்பை சிறையில் இருக்கிறார்.
பீமா கோரிகான் (Bhima Koregaon) என்பது மகாராஷ்டிரா
மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்.
2018 ஜனவரி 1ஆம் நாளன்று இவ்வூரில் நடைபெற்ற
ஒரு கூட்டம் வன்முறைக் கலவரத்தில் முடிந்தது.
பலர் காயமுற்ற இந்நிகழ்வில் இரண்டு பேர்
உயிரிழந்தனர். தலித்துகள் மராட்டியர்கள் என்று
இரு தரப்பினருக்கும் இடையே சண்டை மூட்டி
விட்ட குற்றச்சாட்டில் ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட
சிலர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
அப்பாவிப் பொதுமக்கள் இரண்டு பேரின்
உயிரைப் பறித்த பீமா கோரிகான் வன்முறை
2018 ஜனவரி 1ல் நிகழ்ந்தது. என்றாலும்
ஆனந்த் தெல்தும்டே போலீசாரிடம் சரண் அடைந்தது
2020 ஏப்ரல் 14ஆம் தேதியில்தான். நன்கு கவனியுங்கள்!
சம்பத்துவம் நிகழ்ந்தது 2018ல். தெல்தும்டே கைதானது
2020ல்.
இரண்டு வருடத்துக்கும் மேலாக, பல்வேறு
நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றம் உட்பட
ஆனந்த் தெல்தும்டேக்கு முன்ஜாமீன் வழங்கி இருந்தன.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல இரண்டு வருடத்துக்கும்
மேலாக கைதாகாமல் சட்டத்தின் பாதுகாப்பை
அனுபவித்துக் கொண்டிருந்தார் ஆனந்த் தெல்தும்டே.
ஆனந்த் தெல்தும்டேக்கு வழங்கப்பட்ட இரண்டு
ஆண்டு கால, சட்டத்தின் இயல்பு மீறிய சலுகைகள்
(abnormal) கின்னஸ் சாதனைக்கு உரியவை.
இவ்வளவுக்கும் ஆனந்த் தெல்தும்டே மீது சாதாரணச்
சட்டங்களின்படி வழக்குத் தொடரப்படவில்லை.
மாறாக கொடிய UAPA சட்டப்படி வழக்குத்
தொடரப்பட்டு இருந்தது. இருந்தபோதிலும்
இரண்டு ஆண்டு காலமாக அவரைத் தொட
முடியவில்லை இதைக் கண்ணுற்ற ப சிதம்பரம்
பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
UAPA சட்டமாக இருந்தும்கூட ஆனந்த் தெல்தும்டேயின்
மயிரைக்கூட அச்சட்டத்தால் பிடுங்க முடியவில்லை
என்றாகி விட்டதால், இதற்குக் காரணம் அமித் ஷாவின்
கையாலாகாத் தனமே என்று கருதிய ப சிதம்பரம்
தமது அதிருப்தியை பகிரங்கமாக வெளிக்காட்டத்
தயங்கவில்லை. He further exclaimed how this act could be
draconian!
UAPA போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களின் Father,
Godfather, Physical father, Biological father என்று எல்லா
விதமான fatherம் ப சிதம்பரம்தான். இந்திய
அரசியல்வாதிகளிலேயே IQ அதிகம் உடைய
(IQ = 120) ப சிதம்பரம் தமது அறிவின் வலிமையால்
FOOLPROOF என்று உருவாக்கிய பிரம்மாண்டமான
UAPA சட்டத்தை வெறும் உதவாக்கரைச் சட்டமாக
ஆக்கி விட்டாரே ஆனந்த் தெல்தும்டே என்று பெரிதும்
வருந்தினார் ப சிதம்பரம்.
இரண்டு ஆண்டு காலமாக ஒருவரைக் கைது செய்ய
இயலாத நிலைமை எதைக் காட்டுகிறது? சட்டத்தின்
முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் மோசடி என்று
காட்டுகிறது என்று கருதினார் சிதம்பரம். அவர் ரசித்துப்
படித்த ஜார்ஜ் ஆர்வெல்லின் Animal farm நாவலின்
பிரசித்தி பெற்ற அந்த வாக்கியத்தை (All men are equal
but some men are MORE EQUAL than others) மேற்கோள் காட்டி
வருத்தமுற்றார் ப சிதம்பரம்.
தமிழ்நாட்டில் பெருமதிப்புக்குரிய ஸ்டாலினின் ஆட்சியில்
போலீசுக்கு எந்த விதமான சங்கடமும் இல்லை.
நினைத்த எவரையும் நினைத்த நேரத்தில் கைது
செய்வது தமிழக போலீசுக்கு மிக எளிதாக உள்ளது.
போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு
இரண்டு ஆண்டு காலமாக யாராவது சுதந்திரமாக
ஸ்டாலின் முதல்வராக இருக்கும் தமிழ்நாட்டில்
திரிய முடியுமா?
சரி, ஆனந்த் தெல்தும்டேயை மோடியின் போலீஸ்
அம்பேத்கார் பிறந்த நாளன்று கைது செய்ததா?
உண்மை என்ன? பார்ப்போம்.
2020 மார்ச் 16 தேதியன்று உச்சநீதிமன்றம் ஆனந்த்
தெல்தும்டேவுக்கு கடைசியாக மூன்று வார
அவகாசம் வழங்கி போலீசிடம் சரண் அடையுமாறு
கூறியது. இரண்டு ஆண்டுக்கும் மேலாக பல்வேறு
சந்தர்ப்பங்களில் pre arrest protectionஐப் பெற்றிருந்தார்
தெல்தும்டே.
இறுதியாக உச்சநீதிமன்றம் கொடுத்த மூன்று வார
கால அவகாசத்துக்குள்ளும் தெல்தும்டே சரண்
அடையவில்லை. மீண்டும் உச்சநீதிமன்றத்தை
அணுகி மேலும் கால அவகாசம் கோரினார் தெல்தும்டே.
அரசுத்தரப்பில் தெல்தும்டேவுக்கு எதிரான
பல்வேறு சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்
பட்டிருந்தன. எனவே மீண்டும் மீண்டும் கால
அவகாசம் வழங்க உச்சநீதிமன்றத்தால் இயலாது.
இருப்பினும் இறுதியாக ஒரு வார கால அவகாசம்
வழங்கி, அந்த ஒரு வார காலத்துக்குள் மும்பையில்
போஸிடம் சரண் அடையும்படி உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டது.
ஏழு நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது உச்ச நீதி
மன்றம். இந்த நாட்களில் ஏதேனும் ஒரு நாளில்
தெல்தும்டே சரண் அடைய வேண்டும். அவர் அம்பேத்கார்
பிறந்த நாளான ஏப்ரல் 14ஐத் தேர்ந்தெடுத்து சரண்
அடைந்தார்.
ஏப்ரல் 14ல் அவரை மகாராஷ்டிரா போலீஸ் கைது
செய்யவில்லை. அவராக அந்தத் தேதியைத்
தேர்ந்தெடுத்து சரண் அடைந்தார். உள்நோக்கத்துடன்
அவர் ஏப்ரல் 14ஐத் தேர்ந்தெடுத்தார்.
குட்டி முதலாளித்துவ முட்டாள்களை தெல்தும்டே
ஏமாற்றலாம். ஆனால் அம்பேத்கார் பிறந்த நாளாகப்
பார்த்து அந்த ஏப்ரல் 14ல் அவரை மத்திய அரசு கைது
செய்தது என்ற இழிந்த பொய்யின் சாயம்
வெளுத்து விட்டது.
உலக வரலாற்றிலேயே இல்லாதபடி, இரண்டு ஆண்டுக்கும்
மேலாக கைது செய்யப் படுவதில் இருந்து பாதுகாப்புப்
பெற்ற தெல்தும்டே, தம்மை அம்பேத்கார் பிறந்த
நாளன்று அரசு கைது செய்தது என்று பொய் பேசுவது
சாக்கடைவை விட இழிவானது.
ஆனந்த் தெல்தும்டே யார்? அவர் மாவோயிஸ்ட்டா?
இல்லை! ஒருபோதும் இல்லை! அவர் வெறும்
லிபரல் பூர்ஷ்வா! நான் அடித்துக் கூறுகிறேன்,
ஆனந்த் தெல்தும்டே ஒரு லிபரல் பூர்ஷ்வா!
அவர் மாவோயிஸ்டும் அல்ல. நக்சல்பாரியும் அல்ல.
அவர் ஒரு மார்க்சிஸ்ட் கூட அல்ல. அவர் வெறும்
லிபரல் பூர்ஷ்வா!
ஆனந்த் தெல்தும்டேயை மாவோயிஸ்ட் என்று
கூறினால், குட்டி முதலாளித்துவ மாரிதாசை
மாவோயிஸ்ட் என்று கூற நேரிடும். அர்னாப்
கோஸ்வாமியை மாவோயிஸ்ட் என்று கூற நேரிடும்.
தமிழ்நாட்டில் திமுக அரசால் வெறித் தனமாக
ஒடுக்கப்பட்டு பல்வேறு வழக்குகளில் கைதானவர்
என்பதால் மாரிதாஸை மாவோயிஸ்ட் என்று
என்னால் கூற இயலாது. அதற்கு மார்க்சியம்
இடம் அளிக்காது. அது போலவே தெல்தும்டேவும்
மாவோயிஸ்டு அல்ல.
குட்டி முதலாளித்துவ முட்டாள்களே,
அர்னாப் கோஸ்வாமி கைதானதற்கோ
ஆனந்த் தெல்தும்டே கைதானதற்கோ நாம்
கண்ணீர் சிந்த வேண்டியதில்லை. அவர்கள்
பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
-----------------------------------------------------------------
பின்குறிப்பு
1) ஆனந்த் தெல்தும்டேயை மாவோயிஸ்ட் என்று
எந்த சங்கியாவது கூறினால் அவர் நல்ல மனநல
மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது.
2) நவம்பர் 2021ல் உத்தவ் தாக்கரேயின்
வெறிபிடித்த போலீசால் என்கவுண்டரில் சுட்டுக்
கொல்லப்பட்ட 26 மாவோயிஸ்டுகளில் மிலிந்த்
தெல்தும்டே என்பவரும் ஒருவர். இவர்
மாவோயிஸ்டுகளின் தலைமை கமாண்டர் என்று
போலீஸ் கூறுகிறது. இந்த மிலிந் தெல்தும்டே
யார் என்று தெரியுமா? இவர்தான் ஆனந்த்
தெல்தும்டேவின் தம்பி; கூடப்பிறந்த தம்பி.
இவர் மெய்யாகவே மாவோயிஸ்ட்! ஆனால் இவரின்
அண்ணன் ஆனந்த் தெல்தும்டே மாவோயிஸ்ட் அல்ல.
அவர் லிபரல் பூர்ஷ்வா.
**********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக