வெள்ளி, 8 ஏப்ரல், 2022

 அடையாள அரசியலானது எவ்வளவு பெரிய 

இழிவுக்கு இட்டுச் சென்று விட்டது?

---------------------------------------------------------------

ஈரோட்டில் தவிட்டு எண்ணெய் தயாரிக்கும் 

ஒரு ஆலை உள்ளது. இங்கு ஒரு விபத்து 

நடந்து ஒரு தொழிலாளி இறந்து போனார்.


இதைக் கண்டித்தும் உரிய நஷ்ட ஈடு கேட்டும் 

பிற தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராடினர்.

போராட்டத்தை ஒடுக்க ஆலை முதலாளி

கூப்பிட்டதன்பேரில் போலீஸ் வந்து தன் 

புத்தியைக் காட்டியது.


ஆலைத்தொழிலாளி போலீசுக்குப் பாடம் 

கற்பித்தான். சில போலீஸ் நாய்களின் மண்டை 

உடைந்தது.


கோடிக்கால் பூதமடா தொழிலாளி

கோபத்தின் ரூபமடா!

என்று ஜீவானந்தம் பாடியது மெய்ப்பட்டது.


போலிஸ் அடிபட்டால் விடுதலைச் 

சிறுத்தைகளுக்குப் பொறுக்குமா?

போலீசை ஆதரித்தும் ஆலை முதலாளியை

ஆதரித்தும் போராடிய தொழிலாளிகளைக் 

கண்டித்தும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது 

ஈரோடு கிழக்கு விடுதலைச் சிறுத்தைகள் 

கட்சி. அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து 

கருங்காலித்தனம் செய்துள்ளது முதலாளிகளிடம்   

பொறுக்கித் தின்னும் ஒரு இஸ்லாமிய அமைப்பு.


அடையாள அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாகச்

சென்று விட்டது என்பதற்கு விசிக மற்றும் 

இஸ்லாமிய பிழைப்புவாத அமைப்பு இரண்டும்

சேர்ந்து வெளியிட்ட சுவரொட்டியே சான்று.


சில கூமுட்டைகளும் கோழைகளும் புரட்சியாளர்

திருமாவளவனுக்குத் தெரியாமல் இந்தச் 

சுவரொட்டி அடிக்கப்பட்டு விட்டதாக 

முட்டுக்கு கொடுத்து கேவலப்பட்டுப் 

போகிறார்கள்.


அம்பேத்கார் முதல் திருமாவளவன் வரை 

அவர்கள் அனைவருமே வர்க்க அரசியலுக்கு 

எதிரானவர்கள். மார்க்சியத்துக்கு எதிரானவர்கள்.


மும்பையில் அன்று கம்யூனிஸ்டுகள் 

தலைமையில் ஆலைத் தொழிலாளர்கள் 

போராடியபோது, ஆலை முதலாளிகளுக்கு

ஆதரவாக நின்றவர் அம்பேத்கார்.


சாதி, மதம், இனம், மொழி ஆகிய 

அடையாளங்களின் அடிப்படையில் கட்சி

கட்டுவதும், அடையாள அரசியல் செய்வதும் 

தொழிலாளி வர்க்கத்தைப் பிளவு படுத்தும்.

ஒன்றுபட்டு விடாமல் இப்படி தொழிலாளிகளைப் 

பிளவு படுத்துவது முதலாளிகளின் நலனுக்கு 

அவசியமான ஒன்று.


அப்படி முதலாளிகளின் தேவையை 

நிறைவேற்றுவதற்கும், வர்க்க ரீதியாக 

ஒன்றுபட முடியாதபடி தொழிலாளியைப் 

பிளவு படுத்துவதற்கும் அடையாள அரசியல் 

தேவைப்படுகிறது. அடையாள அரசியல் 

என்பது ஆளும் வர்க்கத்தின் கையில் 

உள்ள ஆயுதம்.


அடையாள அரசியலைக் கையில் எடுத்துக் 

கொண்டு, முதலாளிகளுக்கு சேவகம் செய்யும்

பிழைப்புவாத அமைப்புத்தான் விசிக. 


எனவே விடுதலைச் சிறுத்தைகள் போன்ற 

அடையாள அரசியல் கட்சிகள் தம் இயல்பிலேயே 

பாட்டாளி வர்க்கத்துக்கும் மார்க்சியத்துக்கும் 

எதிரானவை. தாங்களும் மார்க்சிய 

அனுதாபிகள்தான் அன்று அவ்வப்போது 

வேடம் தரித்து தொழிலாளர்களை ஏமாற்றுவது 

திருமாவளவனுக்கு விசிகவுக்கும் வாடிக்கை.


இவர்களின் பொய் முகங்களை இவர்களே 

அம்பலப் படுத்துவதுதான் தற்போதைய 

ஈரோடு கிழக்கு விசிகவின் சுவரொட்டி.


ஆலை முதலாளி சூத்திரன் என்பதால் 

திராவிடக் கசடுகள் தொழிலாளிகள் 

பக்கம் நிற்காது. சூத்திர முதலாளியின் 

தொங்கு சதையாகவே திராவிடம் நிற்கும்.


ஈரோடு கிழக்கு தவிட்டு எண்ணெய் ஆலைத்

தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் குரல் 

கொடுப்போம். அவர்கள்பக்கம் உறுதியாக 

நிற்போம்.


ஆலை நிர்வாகமே,

இறந்துபோன தொழிலாளி குடும்பத்துக்கு 

ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கு.


தமிழக அரசே,

ஆலை முதலாளியைக் கைது செய்.

அத்து மீறிய போலீஸ் அதிகாரிகள் மீது 

சட்ட நடவடிக்கை மேற்கொள்ளு.


தமிழகத்தின் உழைக்கும் மக்களே,

அடையாள அரசியலை வெறுத்து ஒதுக்குங்கள்.

அடையாள அரசியல் கட்சிகளை 

ஆதரிக்காதீர்கள்! புறக்கணியுங்கள்!


மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை மட்டுமே 

தொழிலாளி வர்க்கத்தை விடுதலை செய்யும்.

ஆளும் வர்க்கத்தின் கைக்கூலித் தத்துவங்களான 

பெரியாரியம், அம்பேத்காரியம் ஆகிய 

தீய இசங்கள் மார்க்சியத்தில்  கலந்து விடாமல்

மார்க்சிய லெனினியத்தின் தூய்மையைப் 

பாதுகாப்போம்!   


வர்க்கமாக அணிதிரள்வோம்!

வர்க்க அரசியல் ஓங்கட்டும்!

அடையாள அரசியல் வீழட்டும்!

----------------------------------------------- 

அன்புக்குரிய தொழிலாளி வர்க்கமே,



எமது கோரிக்கைகள்!

---------------------------------


தேவையான வாக்குகளை எளிதில் 

பெற்று விடும் பாஜக. மாயாவதி 

ஆதரிக்கக் கூடும். தலித், பழங்குடி,

இஸ்லாமிய வேட்பாளரை பாஜக 

நிறுத்தும்போது மாயாவதி உள்ளிட்ட 

பலரின் கட்சிகள் ஆதரிக்க வேண்டிய 

நிர்ப்பந்தம் ஏற்படும்.


நவீன் பட்நாயக்கும் ஜெகன் மோகன் ரெட்டியும் 

ஆதரிக்கக் கூடும். வேட்பாளரை 

அறிவித்த மறு நொடியே ஆதரவு 

உறுதியாகி விடும்.  


பழங்குடி (Scheduled Tribe) இனத்தைச் 

சேர்ந்த திரௌபதி முர்மு என்னும் 

பெண் எங்கோ ஆளுநராக இருக்கிறார்.

அவர் துணை ஜனாதிபதி ஆகலாம் 

என்று என்னிடம் ஒரு CPM தோழர் 

கூறினார். நான் அதை மறுத்தேன்.

திரௌபதி முர்மு துணை ஜானதிபதி 

பதவிக்குச் சரிப்பட்டு வர மாட்டார்.

துணை ஜனாதிபதி என்றால் 

மாநிலங்களவையை நடத்த வேண்டும்.

திரௌபதி முர்முவால் அது இயலாது.


 மேலும் குஜராத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி 

(பழங்குடி இனம், ST) இருக்கிறார். அவரும் 

ஜனாதிபதி பதவிக்குப் பரிசீலிக்கப் 

படுகிறார். 


இது பரிசீலிக்கும் காலம்!

இறுதி செய்யும் காலம் அல்ல. 

   

                     

 

வட மாநிலம் தென் மாநிலம் என்று

பிரிவினை பேசி முதலாளிய எடுபிடி

பிளவு ஏற்படுத்துவான். அதை முறியடிப்போம்.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் 

(PROLETERIAN INTERNATIONALISM) என்பது உலகப் 

பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாடு. அதை 

உயர்த்திப் பிடிப்போம்! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக