செவ்வாய், 19 ஏப்ரல், 2022

 இளையராஜா விவகாரம்::
திமுக பின்வாங்குவது ஏன்?
--------------------------------------------
தமிழ்நாட்டில் வலுவாகக் காலூன்ற,
பொருட்படுத்தத்தக்க ஒரு சக்தியாகத் 
தன்னை வளர்த்துக் கொள்ள பாஜக 
பெரிதும் முயன்று வருகிறது. 

ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவசியம் 
இல்லை. சட்ட மன்றத்தில் கணிசமான 
இடங்களைப் பெற வேண்டும் என்பதும்
உடனடி அவசியம் இல்லை.

12 முதல் 15 சதவீத இடங்களைப் பெற்றால்
போதும் என்பதுதான் பாஜகவின் உடனடி 
அஜெண்டா. மூப்பனார் கட்சி நடத்திய
காலத்தில், அவர் 15 சதவீத வாக்குகளை 
வைத்திருந்தார். எனவே கருணாநிதியும் 
ஜெயலலிதாவும் போட்டி போட்டுக்கொண்டு 
அவருடன் கூட்டணி வைக்கத் தலைப்பட்டனர்.

விஜயகாந்த் கூட 10 சதவீத வாக்குகளை
வைத்திருந்ததால் ஜெயலலிதா அவருடன் 
கூட்டணி வைத்தார். அடுத்த தேர்தலில் 
கருணாநிதி அவருடன் கூட்டணி 
வைக்கத் தலையால் தண்ணி குடித்தார்.

ஒரு 12 சதவீத வாக்குகள் அல்லது அதிகபட்சம் 
15 சதவீத வாக்குகள் பாஜகவுக்கு இருந்தால் 
போதும். அக்கட்சியுடன் கூட்டணி வைக்க 
பிரதான கட்சிகள் போட்டியிடும்.15 சதவீத
வாக்கு பாஜகவுக்கு இருந்தால், திமுகவே 
அதனுடன் கூட்டணி வைக்க முனையும்.

ஆக பாஜகவின் உடனடி அஜெண்டா, அதாவது 
அடுத்து வரும் 2016 தேர்தலுக்கான அஜெண்டா 
இதுதான்; 15 சதவீதம் வாக்குகளைத் 
தேற்றுவதுதான்.எப்படித் தேற்றுவது?

நிலவுடைமைச் சமூகக் கூறுகளைக் கொண்ட 
தமிழ்நாட்டில் சாதிய ரீதியாகத்தான் ஆதரவு 
அடித்தளங்களை உருவாக்க இயலும்.
தாணுலிங்க நாடார் முதல் தமிழிசை வரை 
நாடார் சமூகத்துடன் நல்லுறவு கொண்டு 
அச்சமூகத்தின் வாக்குகளில்  ஒரு பகுதியைச் 
சேமித்துக் கொண்டுள்ளது பாஜக.

வட தமிழ்நாட்டில் திருச்சியை ஒட்டிய 
மாவட்டங்களில் திராவிடக் கட்சிகளால் 
இதுகாறும் புறக்கணிக்கப் பட்டு வந்த 
முத்தரையர் சமூகத்தின் அபிமானத்தைப் 
பெறும் நோக்குடன் பாஜக காய் நகர்த்தி 
வருகிறது.

பட்டியல் நீக்கக் கோரிக்கையைக் கொண்டுள்ள  
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 
அபிமானத்தைப் பெறுவதில் பாஜக 
குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி உள்ளது.

அருந்ததியர் சமூகத்தில் கணிசமாக 
inroads எடுத்துள்ளது பாஜக.அச்சமூகத்தின்
எல் முருகன் அவர்களை மத்தியப் பிரதேசம் 
கொண்டு சென்று எம்பி ஆக்கி,  பின் மத்திய 
இணை அமைச்சராகவும் ஆக்கி உள்ளது பாஜக.      

பறையர் சமூகத்தில் இளையராஜாவுக்கு நல்ல 
செல்வாக்கு உண்டு. அவர் பறையர் சமூகத்தின் 
தலைவர் அல்ல என்றபோதிலும் அச்சமூகத்தில் 
ஒவ்வொருவரும் அவர் மீது அபிமானம் 
கொண்டிருப்பதையும், அச்சமூகத்தின் பெருமிதத்தின் 
அடையாளமாக அவர் கருதப்படுவதையும்
பாஜக கணக்கில் கொண்டுள்ளது.

எனவே இளையராஜாவை ஆதரிப்பதன் 
மூலம் அச்சமூகத்தின் ஆதரவைப் பெற 
பாஜக முயல்கிறது என்பது காமன் சென்ஸ் 
உள்ளவர்களுக்குத் தெரியும்.

இச்சூழலில் இளையராஜா மீது திமுகவினரும் 
அதன் கூட்டணி எடுபிடிக் கட்சிகளும் மிகுந்த 
வன்மத்தோடு வெறிநாய் போலப் பாய்வது
திமுகவின் தலையில் வந்து விடியும். பறையர் 
சமூகத்தில் உள்ள ஏகப் பெருவாரியான
இளையராஜா அபிமானிகளை திமுகவினரின் 
வசவுகள் எதிர்முகாமுக்கு விரட்டி விடும்.
அங்கு காத்திருக்கும் பாஜக அழகாக 
அவர்களை அரவணைக்கும்.     

எக்காலத்திலுமே பறையர்களோ தலித்துகளோ 
திமுகவின் foldல் இருந்ததே இல்லை. காமராசர் 
சாகும் வரையிலும் அவர்கள் காங்கிரசுக்கு  
ஆதரவளித்தனர்.பின்னர் மேனன் கட்சி 
ஆரம்பித்ததும் அவர்கள் அதிமுகவுக்கு 
ஆதரவளித்தனர்.

ஜெயலலிதா வன்னியர்களை ஒடுக்கியும், 
காடுவெட்டி குருவைச் சிறையில் அடைத்தும்  
பறையர் சமூக ஆதரவை அதிமுகவுக்கு 
நங்கூரமிட்டு இருந்தார். ஜெயலலிதாவின் 
மறைவுக்குப் பின்னர் அச்சமூகம் திமுகவை 
ஆதரிக்கத் தொடங்கி விட்டது. தன்னுடைய 
foldக்கு வந்து சேர்ந்த பறையர் சமூக 
ஆதரவை இளையராஜா விவகாரத்தில் 
இழக்க ஸ்டாலின் விரும்ப மாட்டார்.

எனவேதான் திமுகவினர் யாரும் 
இளையராஜாவைத் திட்டக்கூடாது 
என்று உதயநிதி மூலம் அறிக்கை விட்டுள்ளார் 
ஸ்டாலின்.
***********************************************      
  
          
  

 

             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக