திங்கள், 20 பிப்ரவரி, 2023

 84,000 வாகன்களுக்கு இந்திய ரயில்வே 
ஆர்டர் கொடுத்துள்ளது!
பொருளுற்பத்தி குறித்த இந்தக் கட்டுரையை 
அடையாள அரசியல் கபோதிகள் படிக்கக் கூடாது!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
வாகன் (wagon ) = சரக்கு ரயிலின் ஒரு பெட்டி,
பயணிகள் ரயிலின் ஒரு கம்பார்ட்மெண்ட் போன்றது!
  
இந்தியாவின் ஒட்டு மொத்த சரக்குப் போக்குவரத்தில் 
ரயில்வேயின் பங்கு தற்போது 27 சதவீதம் ஆகும்.
இதை 45 சதவீதமாக உயர்த்த இந்திய ரயில்வே முடிவு 
செய்துள்ளது. இதற்காக 84,000 வாகன்களுக்கு 
இந்திய ரயில்வே ஆர்டர் செய்துள்ளது.

இந்திய ரயில்வேயின் வரலாற்றில் இவ்வாறு 
84,000 வாகன்களுக்கு ஆர்டர் கொடுப்பது இதுவே 
முதல் முறை ஆகும்.

இது மிகப்பெரிதும் வரவேற்கத்தக்க நடவடிக்கை!
இதனால் ரயில்வேயில் வேலைவாய்ப்புப் பெருகும்.
மேலும் தற்போது தனியார் வசம் உள்ள லாரிகள் 
டிரக்குகள் மூலம் நடைபெறும் சரக்குப் போக்குவரத்தில் 
கணிசமான பங்கு அரசின் ரயில்வே துறைக்கு 
மாறும். அந்த அளவுக்கு தனியாருக்குச் செல்லும் 
வருவாய் இனிமேல் அரசுக்குச் செல்லும்.

இந்தியாவின் உற்பத்தி சார்ந்த மிகப்பெரும் 
நடவடிக்கை இது. பொருளுற்பத்தியை நிறைவு 
செய்யும் இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கது.
இந்த அளவு பெரும் எண்ணிக்கையிலான வாகன்களை 
ஆர்டர் செய்யும் இந்திய ரயில்வேயின் அமைச்சர் 
அஸ்வினி வைஷ்ணவ் அவர்களைப் பாராட்டுகிறோம்.

அஷ்வினி வைஷ்ணவ் கான்பூர் ஐஐடியில் எம்டெக் 
பட்டம் பெற்றவர். ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய 
அளவில் 27வது ரேங்க் பெற்றுத் தேறி ஐஏஎஸ் 
அதிகாரியாகப் பணியாற்றியவர். மேலும் வணிக 
மேலாண்மைப் படிப்பை (MBA) அமெரிக்காவில் 
படித்தவர்.   

சரக்குப் போக்குவரத்தில் 45 சதவீதம் 
தான் அமைச்சராக இருக்கும் ரயில்வேத் துறையின் 
மூலம் நடக்க வேண்டும் என்ற எண்ணமும் 
அதற்காக பிரும்மாண்டமான அளவில் ஒரேபடியாக 
84,000 வாகன்களுக்கு ஆர்டர் கொடுத்த வேகமும்
அஷ்வினி வைஷ்ணவின் சாதனை அல்ல; அவரது 
படிப்பின் சாதனை ஆகும்! 

மு க அழகிரி போன்றவர்களை மத்திய 
அமைச்சராக்கிய தமிழர்களுக்கு அஷ்வினி 
வைஷ்ணவை அவரது படிப்பை மதிக்கத் 
தெரியாது. கைநாட்டுத் தற்குறி ராப்ரிதேவியை 
முதல்வராக்கிய சூத்திரத் திருட்டுக் கூட்டம் 
படிப்பை என்றாவது மதித்ததுண்டா?
வாரிசு அரசியல் என்னும் நவீன வர்ணாசிரமதத்தால் 
உயர்ந்த அதிகாரமுள்ள பதவிகளை அபகரித்துக் 
கொண்ட திருட்டுக் கூட்டம் என்றாவது கல்வியை 
மதிக்குமா?

காலம் இப்படியே இருந்து விடாது கயவர்களே!
காலம் மாறும்! அன்று இழிந்த வாரிசு அரசியலை 
அது கணக்குத் தீர்க்கும்!
************************************************
படிப்பை மதிக்காத ஒரு மூடனின் முதுகுத்தொலியை 
உரித்துக் கொண்டிருக்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி!
இடம்: வீரவநல்லூர் காந்தி சிலை முன்பு. 
  
 

               

வியாழன், 16 பிப்ரவரி, 2023

வல்லான் வகுத்ததே வாய்க்கால்!
அமெரிக்கக் கைக்கூலிகளின் எதிர்காலம்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு. ஆண்டு 2003.
ஈராக் என்ற நாடு பேரழிவு ஆயுதங்களை 
வைத்திருக்கிறது (weapons of mass destruction) என்று
குற்றம் சாட்டியது அமெரிக்கா. 

ஈராக்கில் அப்போது சதாம்  உசேன் ஜனாதிபதியாக 
இருந்தார். குற்றச்சாட்டுகளை மறுத்தார் சதாம் 
உசேன். அமெரிக்கா அதை ஏற்கவில்லை. 
அமெரிக்காவில் அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் 
ஜார்ஜ் டபிள்யூ புஷ் (2001-2009). எட்டாண்டு  காலம் 
இவர் ஜனாதிபதியாக இருந்தார். இவருடைய 
தந்தையார் இவருக்கு முன் 1989-1993ல் ஜனாதிபதியாக 
இருந்தார்.    

ஈராக் சொன்னதை ஏற்காமல் ஜார்ஜ் புஷ் ஈராக்கின் 
மீது ஆக்கிமிரமிப்புப் போர் தொடுத்தார். ஈராக்கைக் 
கைப்பற்றினார். ஜனாதிபதி சதாம் உசேனைச் சிறை 
செய்தார். பின்னர் அவரைத் தூக்கில் இட்டார்.

இறுதியில் பேரழிவு ஆயுதங்களை எவையும் 
ஈராக்கிடம் இருக்கவில்லை என்று தெரிந்தது.
அமெரிக்காவே அதை ஒத்துக்கொள்ள நேர்ந்தது.

ஈராக் மீது அபாண்டமாகப் பொய்ப்பழி சுமத்தி
ஈராக்கை ஆக்கிரமித்து, பல்லாயிரக்கணக்கான 
ஈராக்கியர்களைக் கொன்று, பலரைச் சிறையில் 
அடித்துச் சித்திரவதை செய்து, ஈராக்கின் 
ஜனாதிபதி சதாம் உசேனை அநியாயமாகத் 
தூக்கில் இட்ட  அமெரிக்காவுக்கு என்ன தண்டனை?

இந்த உலகில் நியாயம் எதுவும் கிடைக்காது.
அமெரிக்காவை எதிர்த்து யாராலும் எதுவும் 
செய்ய முடியாது. செய்ய முடியவில்லை என்பதை 
இந்த உலகம் கண்ணாரக் கண்டது.

உலகின் மிக மோசமான பயங்கரவாத நாடு 
அமெரிக்காவே! அமெரிக்காவின் இந்த ஆதிக்கத்தை 
எதிர்த்தும், அமெரிக்காவைப் பழி வாங்கவும் 
அலகையதா அமைப்பை தோன்றியது. ஒசாமா 
பின் லேடன் என்னும் இன்னொரு பயங்கரவாதி 
தோன்றினான்.

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு அல் கைதாவின் 
பயங்கரவாதம் தீர்வல்ல. இருவருமே உலக மக்களின் 
எதிரிகளே!

அமெரிக்க ஜனாதிபதியாக பாரக் ஒபாமா இருந்தபோது,
2011ல் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது 
அமெரிக்க கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு 
அவனுடைய பிரேதம் கடலில் வீசி எறியப்பட்டது.
எனினும் இன்றளவும் அமெரிக்காவின் பயங்கரவாதமும் 
ஒரு சில இஸ்லாமியக் குழுக்களின் பயங்கரவாதமும் 
உலகில் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியா ஈராக் அல்ல. மன்மோகன் சிங்கோ மோடியோ 
சதாம் உசேனும் அல்ல. இதை அமெரிக்கா நன்கறியும்.
அமெரிக்கா அணுஆயுதங்களை வைத்திருக்கிறது.
அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அணுகுண்டுகளை 
வீசி இந்தியாவின் 140 கோடி மக்களை அமெரிக்கா 
கொல்வதற்கு முன்னால், அமெரிக்காவின் 33 கோடி 
மக்களை இந்தியாவின் அணுகுண்டுகள் கொன்று 
போட்டு விடும். எனவே இந்தியாவுடன் போர் என்பது 
கனவிலும் சாத்தியமற்றது என்று அமெரிக்காவுக்குத் 
தெரியும்.

எனவே வேறு வழிகளைக் கையாண்டு இந்தியாவைப் 
பணிய வைக்க முயல்கிறது அமெரிக்கா. அதில் 
ஒரு வழிதான் ஹிண்டன் பர்க் என்னும் அமெரிக்கப் 
போக்கிரி  நிறுவனத்தின் இந்தியப் பெருமுதலாளி
கவுதம் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் 
அடங்கிய அறிக்கை.

கவுதம் அதானி தவறுகள் செய்திருந்தால், மோசடிகள் 
ஊழல்கள் புரிந்திருந்தால், அவரைத் தூக்கிலிட 
இந்திய மக்களுக்கும் அரசுக்கும் உரிமை உண்டு.
ஆனால் அமெரிக்கா இந்த விவகாரத்தில் மூக்கை 
நுழைக்க முடியாது. இந்தியாவின் உள்விவகாரத்தில்
அமெரிக்கா மூக்கை நுழைக்க அனுமதிக்க மாட்டோம்.

இந்தியக் குடிமக்களாக இருக்கும் அமெரிக்கக் 
கைக்கூலிகள் இந்தியாவில் அதிகம். அமெரிக்க 
விசுவாசிகளான ஊடகக் கைக்கூலிகள் இந்தியாவில் 
அதிகம். ஃ போரிடு பவுண்டேஷன் முதல் ஏகப்பட்ட 
என்ஜிஓக்கள் அமெரிக்காவின் அஜெண்டாவை 
நிறைவேற்ற இந்தியாவில் வேலை செய்து கொண்டு 
இருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு இதுதான் பலம்.

என்றாலும் காலம் இப்படியே இருந்து விடாது. அமெரிக்கக் 
கைக்கூலிகள் அம்பலப் பட்டுப் போவார்கள். அவர்களுக்கு 
சுடுகாட்டில் இடம் ரிசர்வ் செய்ய வேண்டியது வரும்.
It is a matter of time, அவ்வளவுதான்! 
********************************************    
     .     
இந்தியாவும் இந்தியாவும்   அடைத்துச் 
 .   டை 

  
    
 கேள்விகள்:
-------------------
1) தனியார் 5நிறுவனங்கள்  5G சேவை வழங்கி 
வருகின்றன. ஆனால் 5G ஏலத்தில் BSNL
பங்கேற்கவில்லையே ஏன்?

2) அதானிக்கு 5G அலைக்கற்றையை மோடி அரசு 
வழங்கி உள்ளது. ஆனால் BSNLக்கு 5G எட்டாக்கனியாக 
இருக்கிறதே! ஏன்?

3) BSNL மிகுந்த நஷ்டத்தில்  உள்ளது என்றும் 
BSNL தான் உருவாக்கிய 10,000 டவர்களை 
விற்பதாகம் செய்தி வருகிறதே. இருக்கிற சொத்துக்களை 
விற்றுத் தின்கிற அவல நிலையில் BSNL உள்ளதா? 

4) BSNL எப்படி நஷ்டம் அடைய ஆரம்பித்தது?
யார் காரணம்?

5) BSNL நஷ்டத்தில் இருந்து மீளுமா? BSNLன் 
சொத்துக்கள் போதிய அளவு இருக்கிறதா?

6) தனியார் நிறுவனங்கள் (ஜியோ ஏர்டெல்)
BSNLஐ வீழ்த்துமா?

7) BSNLஐ மத்திய அரசு புறக்கணிக்கிறதா?

8) BSNLன் எதிர்காலம் எப்படி இருக்கும்?
--------------------------------------------------------       

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

அதானி பங்கு வீழ்ச்சி! LIC தப்பிப் பிழைக்குமா?
------------------------------------------------------------- 
ZOOM MEETING
------------------------------------------
சுருக்கமான முன்னுரை:
------------------------------------
இந்தியாவின் பெருமுதலாளிகளில் ஒருவர் அதானி.
ஆசியாவின் முதல் பணக்காரர். உலக அளவில் 
3ஆம் இடத்தில் இருந்த பணக்காரர்.

இம்மாதம் ஜனவரி 25 அன்று தமது குழுமப் பங்குகளை 
ரூ 25,000 கோடிக்கு பங்கு விற்பனைக்கு அறிவிப்பைச் 
செய்து இருந்தார். சரியாக அதற்கு முந்திய நாளன்று
ஜனவரி 24ல், அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் 
என்ற கம்பனி அதானி குழுமம் மீது நிறையக் 
குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இதனால் அதானி குழுமப் 
பங்குகளை சரிந்தன.

ரூ  8,8 லட்சம் கோடி மதிப்புக்கு அதானியின் 
பங்குகள் சரிந்தன. அதானி உலகின் 3ஆவது 
பணக்காரர் என்ற இடத்தில் இருந்து 20 ஆவது 
பணக்காரர் என்ற அளவுக்கு இறங்கினார்.

அதானி குழுமத்தில் முதலீடு செய்த LIC மற்றும் 
ஸ்டேட் வங்கியும் இதனால் பாதிப்பு அடையுமா?
மக்களின் பணத்திற்கு ஆபத்தா என்றெல்லாம் 
கேள்விகள் எழுந்துள்ளன. எனவே இந்திய அரசு என்ன 
நடவடிக்கை எடுத்துள்ளது? இவை பற்றி இன்றி 
பார்ப்போம். தோழர் இளங்கோ பேசுகிறார்.
கேள்விகளுக்கும் விடை அளிப்பார்.

தோழர் இளங்கோ மத்திய அரசிலும் பின்னர் 
மத்திய பொதுத்துறையிலும் 30 ஆண்டுகளுக்கு 
மேல் பணியாற்றியவர். மத்திய அரசு மற்றும் 
மத்திய பொதுத்துறை தொழிற்சங்கத்தில், அதுவும் 
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் 
நீண்ட காலம் பணியாற்றியவர். நிர்வாகத்துடனான 
பேச்சுவார்த்தை கவுன்சிலில் மாவட்ட, மாநில அளவில் 
இடம் பெற்றவர். எஸ்மா சட்டத்தை உடைத்தெறிந்த 
சங்கத் பாரம்பரியம் உடையவர். தொழிற்சங்கப் 
போராட்டங்களில் பங்கேற்றமைக்காக 124A சட்டப் 
பிரிவின் கீழ் சிறைப்பட்டவர். இப்போது அவரிடம் பேசுவோம்.
உரையாடல் பாணியில் இந்நிகழ்வு இருக்கும்.
-------------------------------------------------------------------------
       

வியாழன், 2 பிப்ரவரி, 2023

 வரம்பற்ற குரங்குகள் தேற்றம்!
-------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன். குரங்கு என்பது 
தொடக்க நிலை; மனிதன் என்பது வளர்ந்த நிலை!
எனவே பல்வேறு அம்சங்களில் மனிதனும் குரங்கும் 
ஒன்றுபோல் நடந்து கொள்வதில் வியப்பில்லை. இங்கும் 
இந்தக் கட்டுரை முழுவதும் குரங்கு என்பது மனிதக் 
குரங்கைக் குறிக்காமல் சாதாரணக் குரங்கையே 
குறிக்கிறது என்பதைக் கவனம் கொள்க.

சரி, குரங்குகள் டைப் அடிக்குமா? அடிக்கும்! உங்களைப்போல் 
ASDFGF :LKJHJ என்று முறைப்படியான விரல் இயக்கத்துடன்
(proper fingering) டைப் அடிக்காவிட்டாலும், அவை தாறுமாறாக 
டைப் அடிக்கத்தான் செய்யும்.    

வரம்பற்ற குரங்குகள்!
----------------------------------
நிறையக் குரங்குகள் உங்கள் ஊருக்கு வருகின்றன என்று 
வைத்துக் கொள்ளுங்கள். நிறைய என்றால் எவ்வளவு?
வரம்பற்றது (infinite) என்று கருதுங்கள். அக்குரங்குகள் 
அனைத்துக்கும் டைப்ரைட்டர்களை வழங்குவோம்.
எவ்வளவு டைப்ரைட்டர்கள்? அவையும் வரம்பற்றவை 
என்று கொள்ளுங்கள். 

வரம்பற்ற குரங்குகள் அனைத்தும் தங்கள் வசம் வரம்பற்ற 
டைப்ரைட்டர்களைக் கொண்டுள்ளன. இப்போது அவை 
டைப் அடிக்கத் தொடங்குகின்றன. நேரம் காலம் பற்றிக் 
கவலைப்படாமல் தொடர்ந்து அவை டைப் அடித்துக் கொண்டே 
இருக்கின்றன. எவ்வளவு நேரம் அவை டைப் அடிக்கும்? 
வரம்பற்ற நேரத்துக்கு அவை டைப் அடிப்பதாகக் கொள்ளுங்கள்.

ஆக,வரம்பற்ற குரங்குகள் வரம்பற்ற டைப்ரைட்டர்களில் 
வரம்பற்ற நேரம் டைப் அடிக்கின்றன. இப்போது ஒரு அதிசயம் 
நிகழும். இக்குரங்குகள் எவ்வளவுதான் காமா சோமா 
என்று டைப் அடித்துக் குவித்திருந்தாலும், அந்த ஒழுங்கின்மைக்கு 
நடுவே ஒரு புத்தகத்தை ஒழுங்காகவும் சரியாகவும் டைப் அடித்துக் 
கொடுத்து விடும். சேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற 
ஹாம்லெட் (Hamlet) நாடகத்தை அக்குரங்குகள் சரியாக 
டைப் அடித்துக் கொடுத்து விடுகின்றன என்று எடுத்துக் 
கொள்ளுங்கள். வரிசை மாறாமலும், அடி பிறழாமலும், 
பிழை இல்லாமலும் பக்க ஒழுங்கு மாறாமலும் 100 சதவீதம் 
சரியாக அவை ஹாம்லெட் நாடகத்தை அடித்துக் கொடுத்து 
விடுகின்றன. இதுதான் வரம்பற்ற குரங்குகளின் தேற்றம் 
(Infinite monkeys theorem).

சேக்ஸ்பியரின் ஹாம்லெட்!
-------------------------------------------
இங்கு குரங்குகள் சரியாக டைப் அடித்துக் கொடுத்து 
விடுகின்றன என்ற  வாக்கியத்துக்கு அன்றாட 
வாழ்க்கையில் வழங்கப்படும் பொருள் பொருந்தாது. 
ஒரு குரங்கு கூட உணர்வுபூர்வமாக என்ன அடிக்கிறோம் 
என்று உணர்ந்து டைப் அடிப்பதில்லை. ஐந்தறிவு 
மட்டுமே உடைய குரங்குகளின் அறிவின் வரம்புக்குள் 
வருவதல்ல இவ்வாறு உணர்ந்து டைப் அடிப்பது. 

எனவே முற்றிலும் தற்போக்காக (at random) குரங்குகள் 
அடித்துத் தள்ளும் வரம்பற்ற பிரதிகளில் ஏதேனும் ஒரு 
பிரதி ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் பிரதியோடு (text)
ஒத்துப் போகும் என்பதே முற்கூறிய வாக்கியத்தின் பொருளாகும்.   
   
இது சாத்தியமா? சாத்தியம்தான் என்று அடித்துச் சொல்கிறது 
வரம்பற்ற குரங்குகளின் தேற்றம். ஹாம்லெட் நாடகம் ஒரு 
உதாரணத்திற்காகச் சொல்லப் படுகிறது. குரங்குகளால்
ஹாம்லெட் மட்டுமின்றி வெனிஸ் வணிகன் (The merchant of Venice) நாடகத்தையோ அல்லது சேக்ஸ்பியரின் வேறு எந்த 
நாடகத்தையோ முழுமையாகவும் சரியாகவும் டைப் அடித்துக்
கொடுக்க இயலும். கதையில் வருகிற குரங்குகள் இங்கிலாந்து 
நாட்டுக் குரங்குகள் என்பதால் அவை ஆங்கில டைப்ரைட்டர்களைக் 
கொண்டு ஆங்கில இலக்கியங்களை  டைப் அடிக்கின்றன.
அக்குரங்குகளிடம் தமிழ் டைப்ரைட்டர்களைக் கொடுத்தால் 
அவை சிலப்பதிகாரத்தை மிகச் சரியாகவும் நேர்த்தியாகவும் 
டைப் அடித்துக் கொடுத்து விடும். டைப் அடிக்கும் குரங்குகளுக்கு 
டைப் செய்யப்படும் மொழி தெரிய வேண்டும் என்று 
அவசியம் இல்லை.

இத்தேற்றம் இதிலுள்ள நகைச்சுவையைத் தாண்டி நிகழ்தகவு 
(probability) பற்றிப் பேசுகிறது. வரம்பற்ற குரங்குகள், வரம்பற்ற 
டைப்ரைட்டர்களில் வரம்பற்ற நேரம் டைப் அடித்தால் 
அதன் பின்விளைவும் வரம்பற்றதாகவே இருக்கும்.
எனவே வரம்பற்ற பிரதிகள் (texts) அடித்துக் குவிக்கப் 
படும். அப்படிப்பட்ட மலை போன்ற பிரதிகளின் 
குவியலில் ஏதேனும் ஒரு பிரதி ஹாம்லெட்டாக இருக்கத்தான்  
செய்யும்.     

ஒழுங்கின்மையில் இருந்து ஒழுங்கு பிறக்கிறது. குழப்பத்தில் 
இருந்து தெளிவு (from chaos to order) காமா சோமா 
என்றும் கன்னா பின்னா என்றும் அடித்துக் குவிக்கப்பட்ட 
பிரதிகளில் ஒரு ஒற்றைப் பிரதி ஒழுங்கான பிரதியாக 
இருப்பது ஒரு உறுதியான நிகழ்வு (sure event) என்று 
நமது ஒளிரும் உள்ளுணர்வு (intuition) கூறுகிறது. 

தேற்றத்தின் நிரூபணம்!
-------------------------------------- 
இத்தேற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளதா என்றால் இல்லை என்பதே 
உண்மை. எனினும் இது மீக்கணினிகளின் (super computers) 
வருகைக்கு முந்திய நிலை. இன்றைய நிலையில் 
மீக்கணினிகளின் மூலம் இத்தேற்றத்துக்கு நிரூபணம் 
தர இயலும். இல்லாவிடினும்  எதிர்காலத்தில் குவாண்டம் 
கணினிகள் (quantum computers) வந்து விடும்.
அவற்றின் துணை கொண்டு இத்தேற்றம் சரி என்றோ 
தவறு என்றோ எளிதில் நிரூபிக்க இயலும். 

இத்தேற்றத்தை நிருபிக்க விளையாட்டுப் போக்கில் 
ஒரு முயற்சி 2011ல் மேற்கொள்ளப் பட்டது. அமெரிக்க 
மென்பொருள் நிரல் பொறியாளர் (programmer)
ஜெஸ்ஸி ஆண்டர்சன் என்பவர் அமேசான் நிறுவனத்தின் 
மேகக் கணிமை (cloud computing) மற்றும் ஹாடூப் (Hadoop)   
எனப்படும் தரவுச் சேமிப்பகம் ஆகியவற்றின் துணை 
கொண்டு தமது சொந்தக் கணினியில் பரிசோதனைகள் 
மேற்கொண்டார். 

வரம்பற்ற குரங்குகளுக்குப் பதிலாக இவர் ஒரு மில்லியன் 
குரங்குகளைப் பயன்படுத்தினார். குரங்குகள் என்றால் 
மெய்யான குரங்குகள் என்று கருதிவிட வேண்டாம். 
இவர் பயன்படுத்தியவை  மெய்நிகர் குரங்குகள் ஆகும். 
அதாவது மில்லியன் சிறிய நிரல்களை (million small programmes)  
இவர் குரங்குகளாக உருவகித்தார். இந்த நிரல்கள் மூலம் 
9 எழுத்துக்களைக் கொண்ட தொடரியை (9 character sequence)    
உருவாக்கி அது சேக்ஸ்பியரின் பிரதியைக் கொண்ட 
இழைகளுடன் (strings) ஒத்துப் போகிறதா என்று 
பரிசோதனைகளைச் செய்து பார்த்தார். தேற்றத்தை 
இவர் நிரூபிக்கவில்லை என்றபோதிலும் தேற்றத்தின் 
நிரூபணத்திற்கான ஒரு பாதையை இவர் காட்டியுள்ளார்.   

தேற்றத்தின் வரலாறு!
-----------------------------------
இத்தேற்றத்தின் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் 
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்  இது பற்றிய 
குறிப்புகளை அறிய முடிகிறது. பிரெஞ்சுக் கணித நிபுணர் 
எமிலி போரெல் (Emile Borel 1871-1956) என்பவரே முதன் முதலில் 
இத்தேற்றத்தைப் பயன்படுத்தினார் என்பது வரலாற்றில் 
காணக் கிடக்கிறது. அடுத்ததாக ஆர்தர் எட்டிங்டன் 
(Arthur Eddington 1882-1944) என்னும் பிரிட்டிஷ் இயற்பியலாளர்
இத்தேற்றத்தைப் பயன்படுத்தி உள்ளார். எட்டிங்டன்தான் 
பெருநிறை உள்ள பொருட்களின் அருகில் செல்லும் ஒளி 
வளைகிறது என்ற ஐன்ஸ்டைனின் கொள்கையை 
நிரூபித்தவர் என்று நாமறிவோம். 

இவ்விரு அறிவியலாளர்களும் வரம்பற்ற குரங்குகள் தேற்றத்தைப் பயன்படுத்தியவர்கள் மட்டுமே. அதை உருவாக்கியவர்
யார் என்ற கேள்விக்கு வரலாற்றில் விடையில்லை. இருபதாம் 
நூற்றாண்டுக்கு முன்னரே இத்தேற்றம் உருவாகி 
இருக்கக்கூடும்.    

மூலத் தேற்றமும் மாறிய தேற்றமும்!
-------------------------------------------------------
இக்கட்டுரையில் நான் பயன்படுத்தி இருப்பது மூலத் தேற்றத்தின் 
மாற்றமடைந்த பிரதியையே. "வரம்பற்ற குரங்குத் தேற்றம்"
(Infinite monkey theorem) என்பதே மூலத் தேற்றம் ஆகும். மூலத் 
தேற்றத்தில் ஒரு குரங்குதான். ஒரு குரங்குதான் என்பதால் 
அதற்கு ஒரே ஒரு டைப்ரைட்டர் போதும். வரம்பற்ற 
டைப்ரைட்டர்கள் தேவையில்லை. அந்த ஒற்றைக் குரங்கு 
வரம்பற்ற நேரம் டைப் அடித்தால், சேக்ஸ்பியரின் 
ஹாம்லெட் நாடகத்தைச் சரியாக அடித்துக் கொடுத்து 
விடும் என்பதுதான் தேற்றம்.
 

காலப்போக்கில் இத்தேற்றத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன.
ஒற்றைக் குரங்கிற்குப் பதிலாக வரம்பற்ற குரங்குகள் 
கொண்டு வரப்பட்டன. வரம்பற்ற குரங்குகள் 
என்பதால் வரம்பற்ற டைப் ரைட்டர்கள் இயல்பாகவே 
தேவைப்படும். எனவே தேற்றம் "வரம்பற்ற குரங்குகள் 
தேற்றம்" (Infinite monkeys theorem) என்று மாற்றப்பட்டது. 
மூலத் தேற்றத்திலும் மாறிய தேற்றத்திலும் உள்ள ஒருமை 
பன்மை வேறுபாட்டை (குரங்கு, குரங்குகள்) கருத்தில் 
கொள்ளவும். மாறிய தேற்றத்தில், குரங்குகள், டைப்ரைட்டர்கள்,
டைப் அடிக்கும் நேரம் என இம்மூன்றுமே வரம்பற்றவை.
மூலத தேற்றத்தில் டைப் அடிக்கும் நேரம் மட்டுமே 
வரம்பற்றது.  

மூலத்தேற்றத்தை விட, வரம்பற்ற குரங்குகளைக் கொண்ட 
மாற்றமடைந்த தேற்றமே (variant) மிகவும் கவர்ச்சிகரமாக 
இருக்கிறது. எனவே அதுவே பலராலும் பின்பற்றப்பட்டு 
வருகிறது. ஆர்தர் எட்டிங்டன் தமது நூலில் "an army of monkeys"
(குரங்குப்படை) என்றே குறிப்பிடுகிறார். (பார்க்க: The nature of the 
physical world).  வரம்பற்ற குரங்குகள் என்பதையே அவர் 
குரங்குகளின் படை (army) என்று குறிப்பிடுகிறார்.

பயன்படும் குரங்குகள்! 
-----------------------------------
கணிதத்திலும் இயற்பியலிலும் குரங்குகள் இல்லாமல் 
இல்லை. குரங்குகளைக் கொண்டு நிறையக் கணக்குகளை  
கணித அறிஞர்கள் அமைத்துள்ளனர். உலக அளவில் 
கணிதத்தில் குரங்குகளைப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்குச் 
சிறப்பிடம் உண்டு. 

இந்தியக் கணித மேதை இரண்டாம் பாஸ்கராச்சாரியார் 
12ஆம் நூற்றாண்டில் எழுதிய லீலாவதி என்னும் கணித 
நூலில் உள்ள ஒரு குரங்குக் கணக்கை இப்போது
பார்ப்போம்.

ஒரு குரங்குக் கூட்டத்தில் இருந்த குரங்குகளில் 
எட்டில் ஒரு பாகத்தின்(1/8)  வர்க்கம் காட்டில் விளையாடிக் 
கொண்டிருக்கின்றன. 12 குரங்குகள் குன்றின் மேலேறி 
விளையாடுகின்றன. அப்படியானால் கூட்டத்தில் 
இருந்த மொத்தக் குரங்குகள் எத்தனை?

இதற்கான விடையை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.
இக்கணக்கிற்கு ஒற்றைத் தீர்வு (unique solution) இல்லை.
குரங்குகளின் எண்ணிக்கை 48 அல்லது 12 என்பதே விடை.
முறையான இருபடிச் சமன்பாட்டை (Quadratic equation)
அமைத்து, அதைத் தீர்த்தால் விடை கிடைக்கும்.    

வரம்பற்ற குரங்குகள் தேற்றம் இன்றளவும் அறிவியலின் 
பல்வேறு துறைகளில் பயன்பட்டு வருகிறது.  நமது 
மரபணுக்களில் எழுதப்பட்டுள்ள குறியீடுகளை 
(DNA sequence) வாசிப்பதற்கான உத்திகளை வகுப்பதில் 
இத்தேற்றம் வழிகாட்டுகிறது. இயற்பியலில் புள்ளியியல் 
சார்ந்த இயந்திரவியலில் (statistical mechanics) இத்தேற்றம் 
உதவும்.

கலைச்சொல் ஆக்கமும் இத்தேற்றமும்!  
-------------------------------------------------------------
தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்கப்பட 
வேண்டும். அப்பணியில் நமக்கு உதவுவதற்கு 
இத்தேற்றத்தைப் பயன்படுத்துவோம். தமிழில் 247 
எழுத்துக்கள் உள்ளன. 4 எழுத்துக்கள் கொண்ட 
சொற்களை முற்கூறிய 247 எழுத்துக்களில் இருந்து 
உருவாக்க முயல்வோம். எவ்வளவு சொற்கள் கிடைக்கும்?
அகராதிப்பொருள் உடைய சொற்கள், பொருள் இல்லாத
சொற்கள் என்று நிறையச் சொற்களை உருவாக்குவோம்.   
முற்றிலும் தற்போக்காகவும் தாறுமாறாகவும் பொருள் பற்றிக் 
கவலை இல்லாமல் சொற்களை உருவாக்குவோம். கிடைக்கும் 
பொருளற்ற சொற்களுக்குப் புதிய பொருளைச் சூட்டுவோம். 

தமிழில் 12 உயிரெழுத்துக்கள் உள்ளன. 3 எழுத்துக்களைக் 
கொண்ட சொற்களை 12 உயிரெழுத்துக்களில் இருந்து 
அமைக்க வேண்டும். எத்தனை சொற்கள் கிடைக்கும்?
கணிதக் குறியீட்டின்படி, இது nCr ஆகும். அதாவது 12C3 ஆகும்.
கணித மொழியில் இதன் பொருள் Number of combinations taken 
r at a time என்பதாகும். இதன் விடை 220 ஆகும். அதாவது 
220 மூன்றெழுத்துச் சொற்களை அமைக்கலாம். Permutations 
எனப்படும் வரிசையுறு சேர்க்கைப்படியும் சொற்களை 
உருவாக்கலாம். பொருள் உள்ள சொற்களை ஏற்போம்.
பொருளற்ற சொற்களுக்கு பொருள் வழங்குவோம்.
இதற்கெல்லாம் வரம்பற்ற குரங்குகள் தேற்றம் நமக்கு 
வழிகாட்டும்.
**********************************  
  
 





.     




         

        
.   
 PRE ESSAY
-------------------

அண்மையில் "வரம்பற்ற குரங்குகள் தேற்றம்' என்ற தலைப்பில் 

ஓர் அறிவியல் கட்டுரை எழுதினேன். அதற்கு மிகவும் 

குறைவான அளவு ஆதரவு மட்டுமே கிடைத்தது.

அத்தேற்றத்தின் ஒரிஜினல் வெர்ஷனில் ஒரே ஒரு 

குரங்குதான் இருக்கும். அது வரம்பற்ற நேரத்துக்கு 

(infinite time) டைப் அடிக்கும். காலப்போக்கில் இத்தேற்றத்துக்கு 

இன்னொரு variant வந்தது. அதன்படி, ஒற்றைக்குரங்கு ..

அல்ல, வரம்பற்ற குரங்குகள் (infinite monkeys) என்று ஆனது.

வரம்பற்ற குரங்குகள் வரம்பற்ற டைப் ரைட்டர்களுடன்,

வரம்பற்ற நேரம் டைப் அடித்தால் சேக்ஸ்பியரின் 

ஹாம்லெட்டை ஒழுங்காக அவை டைப் அடித்துக் 

கொடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதே இத்தேற்றம்.

இது நிகழ்தகவு (probability சார்ந்தது.


குரங்குத் தேற்றத்தின் ஒரிஜினல் வெர்ஷனை 

(Infinite monkey theorem) நான் எடுக்கவில்லை. அதன் variantஐயே 

நான் எடுத்துக் கொண்டேன். அதன்படி அத்தேற்றம் 

வரம்பற்ற குரங்குகளின் தேற்றம் (Infinite monkeys theorem) 

என்றானது. ஒரிஜினலுக்கும் அதன் variantக்கும் 

இடையிலான ஒருமை பன்மையைக் கவனிக்கவும்.


ஒரிஜினலை விட்டு விட்டு variantஐ எடுக்கக் காரணம் 

குரங்குகள் வரம்பற்றவையாக இருக்க வேண்டும் என்று 

நான் உறுதிபடக் கருதியதுதான். ஆர்தர் எட்டிங்டன் தமது 

நூலில் குரங்குகள் என்று பன்மையையே குறிப்பிடுகிறார்.

An army of monkeys என்று அவர் எழுதுகிறார். Infinity என்று

அவர் கூறாவிட்டாலும் an army என்று கூறுவதன் மூலம் 

ஒன்றுக்கு மேற்பட்ட பன்மைக் குரங்குகளையே 

குறிப்பிடுகிறார். 


வரம்பற்ற குரங்குகள் என்று இருந்தால்தான், குழப்பம் 

மிகவும் அதிகமாக இருக்கும். அதாவது chaos அதிகமாக 

இருக்கும். அந்த அதீத நிலையில் இருந்து ஒழுங்கு 

(order) பிறக்குமா? அதில் இருந்து பிறந்தால்தான் அதிசயம்.

அப்போதுதான் நிகழ்தகவுக் கோட்பாடும் புதிய 

உயரத்தை எட்டும். ஒற்றைக் குரங்கு என்றால், வரம்பற்ற 

(infinite) நேரத்துக்கு அது டைப் அடிக்கும்போது காரல் 

மார்க்சின் மூலதனம் முழுவதையுமே ஒழுங்காக 

டாய் அடித்து விடும் வாய்ப்பு அதிகமே. இது intuition 

மூலம் எனக்குத் தெரிகிறது. நிகழ்தகவு நன்கு கற்ற 

எவர் ஒருவருக்கும் அவரின் intuition இதே முடிவையே தரும்.


ஆனால் வரம்பற்ற குரங்குகள் என்னும்போது, திடமான 

முடிவுக்கு உடனடியாக வந்து விட முடியவில்லை. ஒரு 

non zero probability இருக்கக் கூடும் என்று தெரிகிறது. நிற்க.


வரம்பற்ற குரங்குகள் தேற்றம் எனக்கு 40 வயதின் 

பின்னர்தான் தெரிய வந்தது. ஆனால் அதன் பயன்பாட்டை  

Thermodynamics and statistical mechanics பாடத்தை நடத்தும்போது 

என் 18ஆவது வயதில் நான் தெரிந்து கொண்டேன். 


இயற்பியல் வகுப்பு அது. வகுப்பு எடுத்தவர் பேராசிரியர். 

நாங்கள் படித்த காலத்தில்  புரபஸர் என்றால் பயம்; 

HoD என்றால் பயம். புரஃபஸருக்கும் HoDக்கும் பயந்துதான் 

நாங்கள் எல்லாம் படித்தோம். Science group என்றால் 

இப்படித்தான். ஆனால் Arts groupல் நிலைமை தலைகீழ். 

அங்கு மாணவனுக்கு பேராசிரியர் பயப்படுவார்.


சரி, அறிவியல் கட்டுரைகளைப் படியுங்கள்; விவாதியுங்கள்.

கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்தை எழுதுங்கள்.


வரம்பற்ற குரங்குகள் தேற்றம் பற்றியெல்லாம் என் 

மூலமாக அல்லாமல் வேறு யார் மூலமாகவும் நீங்கள் 

அறிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் 

வாழ்ந்தாலும் இவற்றையெல்லாம் என்னைத் தவிர வேறு 

யாரும் உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதில்லை. 

இதை ஏற்கிறீர்களா? 


உங்களின் ஆதரவு இருந்தால் தினமும் ஒரு கட்டுரை 

எழுதலாம். ஆதரவு இல்லை என்று நான் உணர்ந்தால் 

கட்டுரைகளின் எண்ணிக்கை குறையும். அவ்வளவுதான்.

*************************************************************        

 வெகுவாகக் 

                           ரெக்கார்டில் bonafide certificate வாங்க வேண்டுமே!