வியாழன், 16 பிப்ரவரி, 2023

வல்லான் வகுத்ததே வாய்க்கால்!
அமெரிக்கக் கைக்கூலிகளின் எதிர்காலம்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு. ஆண்டு 2003.
ஈராக் என்ற நாடு பேரழிவு ஆயுதங்களை 
வைத்திருக்கிறது (weapons of mass destruction) என்று
குற்றம் சாட்டியது அமெரிக்கா. 

ஈராக்கில் அப்போது சதாம்  உசேன் ஜனாதிபதியாக 
இருந்தார். குற்றச்சாட்டுகளை மறுத்தார் சதாம் 
உசேன். அமெரிக்கா அதை ஏற்கவில்லை. 
அமெரிக்காவில் அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் 
ஜார்ஜ் டபிள்யூ புஷ் (2001-2009). எட்டாண்டு  காலம் 
இவர் ஜனாதிபதியாக இருந்தார். இவருடைய 
தந்தையார் இவருக்கு முன் 1989-1993ல் ஜனாதிபதியாக 
இருந்தார்.    

ஈராக் சொன்னதை ஏற்காமல் ஜார்ஜ் புஷ் ஈராக்கின் 
மீது ஆக்கிமிரமிப்புப் போர் தொடுத்தார். ஈராக்கைக் 
கைப்பற்றினார். ஜனாதிபதி சதாம் உசேனைச் சிறை 
செய்தார். பின்னர் அவரைத் தூக்கில் இட்டார்.

இறுதியில் பேரழிவு ஆயுதங்களை எவையும் 
ஈராக்கிடம் இருக்கவில்லை என்று தெரிந்தது.
அமெரிக்காவே அதை ஒத்துக்கொள்ள நேர்ந்தது.

ஈராக் மீது அபாண்டமாகப் பொய்ப்பழி சுமத்தி
ஈராக்கை ஆக்கிரமித்து, பல்லாயிரக்கணக்கான 
ஈராக்கியர்களைக் கொன்று, பலரைச் சிறையில் 
அடித்துச் சித்திரவதை செய்து, ஈராக்கின் 
ஜனாதிபதி சதாம் உசேனை அநியாயமாகத் 
தூக்கில் இட்ட  அமெரிக்காவுக்கு என்ன தண்டனை?

இந்த உலகில் நியாயம் எதுவும் கிடைக்காது.
அமெரிக்காவை எதிர்த்து யாராலும் எதுவும் 
செய்ய முடியாது. செய்ய முடியவில்லை என்பதை 
இந்த உலகம் கண்ணாரக் கண்டது.

உலகின் மிக மோசமான பயங்கரவாத நாடு 
அமெரிக்காவே! அமெரிக்காவின் இந்த ஆதிக்கத்தை 
எதிர்த்தும், அமெரிக்காவைப் பழி வாங்கவும் 
அலகையதா அமைப்பை தோன்றியது. ஒசாமா 
பின் லேடன் என்னும் இன்னொரு பயங்கரவாதி 
தோன்றினான்.

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு அல் கைதாவின் 
பயங்கரவாதம் தீர்வல்ல. இருவருமே உலக மக்களின் 
எதிரிகளே!

அமெரிக்க ஜனாதிபதியாக பாரக் ஒபாமா இருந்தபோது,
2011ல் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது 
அமெரிக்க கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு 
அவனுடைய பிரேதம் கடலில் வீசி எறியப்பட்டது.
எனினும் இன்றளவும் அமெரிக்காவின் பயங்கரவாதமும் 
ஒரு சில இஸ்லாமியக் குழுக்களின் பயங்கரவாதமும் 
உலகில் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியா ஈராக் அல்ல. மன்மோகன் சிங்கோ மோடியோ 
சதாம் உசேனும் அல்ல. இதை அமெரிக்கா நன்கறியும்.
அமெரிக்கா அணுஆயுதங்களை வைத்திருக்கிறது.
அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அணுகுண்டுகளை 
வீசி இந்தியாவின் 140 கோடி மக்களை அமெரிக்கா 
கொல்வதற்கு முன்னால், அமெரிக்காவின் 33 கோடி 
மக்களை இந்தியாவின் அணுகுண்டுகள் கொன்று 
போட்டு விடும். எனவே இந்தியாவுடன் போர் என்பது 
கனவிலும் சாத்தியமற்றது என்று அமெரிக்காவுக்குத் 
தெரியும்.

எனவே வேறு வழிகளைக் கையாண்டு இந்தியாவைப் 
பணிய வைக்க முயல்கிறது அமெரிக்கா. அதில் 
ஒரு வழிதான் ஹிண்டன் பர்க் என்னும் அமெரிக்கப் 
போக்கிரி  நிறுவனத்தின் இந்தியப் பெருமுதலாளி
கவுதம் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் 
அடங்கிய அறிக்கை.

கவுதம் அதானி தவறுகள் செய்திருந்தால், மோசடிகள் 
ஊழல்கள் புரிந்திருந்தால், அவரைத் தூக்கிலிட 
இந்திய மக்களுக்கும் அரசுக்கும் உரிமை உண்டு.
ஆனால் அமெரிக்கா இந்த விவகாரத்தில் மூக்கை 
நுழைக்க முடியாது. இந்தியாவின் உள்விவகாரத்தில்
அமெரிக்கா மூக்கை நுழைக்க அனுமதிக்க மாட்டோம்.

இந்தியக் குடிமக்களாக இருக்கும் அமெரிக்கக் 
கைக்கூலிகள் இந்தியாவில் அதிகம். அமெரிக்க 
விசுவாசிகளான ஊடகக் கைக்கூலிகள் இந்தியாவில் 
அதிகம். ஃ போரிடு பவுண்டேஷன் முதல் ஏகப்பட்ட 
என்ஜிஓக்கள் அமெரிக்காவின் அஜெண்டாவை 
நிறைவேற்ற இந்தியாவில் வேலை செய்து கொண்டு 
இருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு இதுதான் பலம்.

என்றாலும் காலம் இப்படியே இருந்து விடாது. அமெரிக்கக் 
கைக்கூலிகள் அம்பலப் பட்டுப் போவார்கள். அவர்களுக்கு 
சுடுகாட்டில் இடம் ரிசர்வ் செய்ய வேண்டியது வரும்.
It is a matter of time, அவ்வளவுதான்! 
********************************************    
     .     
இந்தியாவும் இந்தியாவும்   அடைத்துச் 
 .   டை 

  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக