ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

ஆம், மொழிக்கு அவ்வளவு சக்தி இருக்கத்தான் 
செய்கிறது போலும்! ரசூல் கம்சதோவ் என்னும் 
அவர் அவார்மொழிக் கவிஞர். அவரின் 
தாயமொழியான அவார் சோவியத் ரஷ்யாவில் 
மிகக் குறைவான எண்ணிக்கயில் உள்ள மக்கள் 
பேசும் சிறிய மொழியாகும்.

சிறிய மொழி, மிக்க  குறைவான மக்கள் பேசும் 
மொழி என்றபோதிலும் அவார் மொழி கவிஞரின் 
தாயமொழி ஆகும்.

உலகத்தில் தாய்மொழியும் தாய்நாடும் 
வெளி காலத் தொடரிணையம் (space time continuum) 
போல் ஒன்றிணைந்த.வை./

Breathes there the man with soul so dead
Who never to hmself hath said 
"This is my own;" my native land
என்றான்  ஒரு ஆங்கிலக் கவிஞன்.

ரசூல் கம்சட்டோ  கூறுகிறார்!
படுக்கையில் கிடந்து உயிருக்குப்  போராடிக் 
கொண்டு இருந்த நேரத்தில்,  அவார் 
மொழியைப் பேசிக்கொண்டு 
இரண்டு பேர்கள்  அந்த வழியாகச் 
சென்றபோது, அவர்களின் அவார் மொழிப 
பேச்சைக் கேட்டதுமே உயிருக்குப் போராடிக்  
கொண்மராசு கம்சட்டடோவ் டிருந்த நோயாளிக்கு உயிர்வந்து விட்டது.
  

   

கிழக்கு வெளுத்ததம்மா! கீழ்வானம் சிவந்ததம்மா!
BSNL நிறுவனம் லாபம் ஈட்டத் தொடங்கியதம்மா!  
BSNL has started earning profit! 
--------------------------------------------------------------------------
 நியூட்டன் அறிவியல் மன்றம் 
===========================================
அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 
(1999-2004) 01.10.2000ல் BSNL நிறுவனம் தோற்றுவிக்கப் 
பட்டது. தற்போது BSNLக்கு வயது 23.

தோன்றியது முதலே BSNL நிறுவனம் லாபம் ஈட்டி 
வந்தது. ஒரு நாளின் லாபம் 8 கோடி ரூபாய் என்ற 
நிலையில் இருந்த லாபம் தெடர்ந்து அதிகரித்தது.
2004-05 நிதியாண்டில் BSNL ரூ 10,000 கோடி லாபம்
ஈட்டியது.

2004ல் அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 10,000 கோடி 
லாபம் என்பது இன்றைய மதிப்பில் குறைந்தது 
ரூ 30,000 கோடி இருக்கும்.

இவ்வாறு தொடர்ந்து லாபம் ஈட்டிக்கொண்டே வந்த 
BSNL நிறுவனம் முதன் முதலாக புண்ணியவான் ஆ ராசா 
தொலைதொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் 
(மே 2007-நவம்பர் 2010) நஷ்டத்தைச் சந்தித்தது.

2009-10 நிதியாண்டில் BSNL ரூ 1800 கோடி நஷ்டத்தைச் 
சந்தித்தது. BSNLன் வரலாற்றில் ஏற்பட்ட முதல் 
நஷ்டம் இது. இதை ஏற்படுத்தியவர் ஆ ராசா. இந்த 
நஷ்டத்திற்கு அவரே பொறுப்பு. 

இவருக்கு முன் ராம் விலாஸ் பாஸ்வான், பிரமோத் 
மகாஜன், அருண் ஷோரி, தயாநிதி மாறன் ஆகியோர் 
தொலைதொடர்புத் துறையின் அமைச்சர்களாக 
இருந்தபோது BSNL நஷ்டம் அடையவில்லை. 2000-01
முதல் இன்று வரையிலான BSNLன் லாப நஷ்ட 
விவரங்கள் பொதுவெளியில் கிடைக்கின்றன.
யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.  

ஆ ராசா ஏற்படுத்திய நஷ்டம் பல ஆண்டுகளாகத் 
தொடர்ந்து நீடித்தது. அவருக்குப் பின் கபில் சிபல்,
ரவி சங்கர் பிரசாத், மனோஜ் சின்ஹா ஆகியோர் 
அமைச்சர்களாக இருந்தனர். BSNLன் நஷ்டத்தைக் 
குறைக்க முயன்றனர். அவர்களால் நஷ்டத்தைக் 
குறைக்க முடிந்ததே தவிர, நஷ்டத்தை அடியோடு 
ஒழித்து விட்டு லாபத்தை உண்டாக்க முடியவில்லை.
காரணம் ஆ ராசா ஏற்படுத்திய சேதாரம் அவ்வளவு 
தீவிரமானது.

பின்னர் ஜூலை 2021ல் அஷ்வினி வைஷ்ணவ் 
இத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தமது முன்னோர்களைத் தொடர்ந்து ஐவரும் BSNLன் 
நஷ்டத்தை ரோஹித்து லாபத்தை ஏற்படுத்த 
முனைந்தார். அதில் அவர் தற்போது வெற்றி 
கண்டுள்ளார்.  ஆம் BSNL லாபம் ஈட்டத் தொடங்கி 
விட்டது.   

நடப்பு நிதியாண்டில் BSNL  நிறுவனம் ரூ 1500 கோடி 
லாபம் ஈட்டி உளளது. இத்தகவலை துறையின் அமைச்சர்
அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். Global Business Summit
2024 என்னும் வணிக உச்சி மாநாட்டில் பேசும்போது 
அமைச்சர் வைஷ்ணவ இதைத் தெரிவித்தார்.

மேற்கூறிய ரூ 1500 கோடி லாபம் என்பது நிகர லாபம் 
அல்ல. வரி, தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு கூறுகளைக் 
கணக்கிட்டு கழித்த பிறகே நிற லாபத்தைச் சொல்ல 
இயலும். .அதற்குச் சிறிது காலம் ஆகும். 
இந்த வருமானம் EBITDA level லாபம் ஆகும். வணிக 
மேலாண்மை மற்றும் நிர்வாக மேலாண்மையின் 
அடிப்படைகளைத் தெரிந்தவர்கள் EBITDA என்பதாம் 
பொருளை அறிவார்கள். 
(EBITDA = Earnings Before Interest, Tax, Depreciation 
and Amortization)  

ஆக ஆ ராசா 2009ல் ஏற்படுத்திய நஷ்டத்தில் இருந்து 
BSNLக்கு 2024ல் விடுதலை கிடைத்துள்ளது. ஆ ராசா 
ஏற்படுத்திய பேரழிவுக்குப் பின்னால் மீண்டெழுந்து 
முன்பு போல் லாபம் ஈட்டத் தொடங்கி 
விட்டது BSNL. பள்ளத்தில் விழுந்த யானை எழுந்து 
வந்து விட்டது. அது கம்பீரமாக நடக்கத் தொடங்கி விட்டது.
*****************************************************
பின்குறிப்பு:
முதல் இரண்டு பின்னூட்டங்களில் தரப்பட்டுள்ள 
ஆங்கிலச் செய்தித்தாள்களின் செய்திக் 
கட்டுரைகளைப் படியுங்கள். எமது முகநூல் 
பதிவுக்கு அவை ஆதாரம் ஆகும்.
 


 .  
     
   

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

 பாரத ரத்னா விருது பெற்ற பிரதமர்கள்!
-----------------------------------------------------------
1) ஜவகர்லால் நேரு 
2) லால் பகதூர் சாஸ்திரி 
3) இந்திரா  காந்தி
4) குல்சாரி லால் நந்தா 
5) மொரார்ஜி தேசாய் 
6) சரண் சிங் 
7) ராஜிவ் காந்தி 
8) பி வி நரசிம்ம ராவ்
9) அடல் பிகாரி வாஜ்பாய்

இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப் படாதவர்கள்!
-------------------------------------------------------------------------------
1) வி பி சிங் 
2) சந்திரசேகர் 
3) தேவ கெளடா
4) ஐ கே குஜ்ரால் 

இந்நால்வருக்கும் ஒருபோதும் பாரத ரத்னா 
வழங்கப்படாது.

வி பி சிங் அமெரிக்க ஆதரவாளர் என்றும் 
ராஜிவ் காந்தியைப் பதவியில் இருந்து அகற்றி.
அவரின் படுகொலைக்கு காரணமாக இருந்தவர் 
என்றும் காங்கிரஸ் கருதுகிறது: சோனியா 
காந்தி கருதுகிறார். எனவே பாஜக ஆட்சியாக 
இருந்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் சரி 
மேற்கூறிய நால்வருக்கும்  எத்தகைய விருதும் வழங்கப் 
பட மாட்டாது.

5) டாக்டர் மன்மோகன் சிங்.

இவருக்கு உறுதியாக பாரத ரத்னா வழங்கப்படும்.
பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சியாக
இருந்தாலும் சரி, டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு 
posthumous awardஆக பாரத ரத்னா வழங்கப்படும்.
எந்த அரசும் சீக்கியர்களை விட்டு விடாது!  

 
     

சனி, 3 பிப்ரவரி, 2024

 கௌசல்யா பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு,

"அரசாங்கப் பதவியில் உள்ளபோது அரசு விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்து தெரிவிக்க முடியாது. 1983ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அதாவது, ஒருவர் அரசுப் பதவிக்கு வருவதற்கு முன்பாக எவ்விதக் கருத்தையும் கொண்டிருக்கலாம்.
ஆனால், அரசுப் பதவிக்கு வந்த பிறகு, அரசுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருக்க முடியாது. ஆனால், முன்பு கொண்டிருந்த கருத்திற்காக இப்போது பணி வழங்க மறுக்க முடியாது என்பதுதான் அந்தத் தீர்ப்பு. அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகளின் முதல் விதியே, A government servent will have obsulute integrety, devotion to duty, loyalty to service என்பதுதான்.
Loyalty to service என்பது தேசத்திற்கு விசுவாசம் என்பதாகத்தான் புரிந்துகொள்ளப்படும். தவிர, அரசு ஊழியர்களுக்கான முக்கியமான விதி, எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கக்கூடாது என்பது. அப்படியே பேட்டி அளிக்க வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும். அதில் பணி தொடர்பாகவோ அரசுக்கு எதிராகவோ பேசக்கூடாது. கட்டுரை, புத்தகம் போன்றவற்றை முன் அனுமதி பெற்றே எழுத வேண்டும். இந்த விவகாரத்தில் இந்த விதி மீறப்பட்டிருக்கிறது,"
என்று கூறியுள்ளார்.
Share