ஞாயிறு, 23 நவம்பர், 2014

" புதிய மார்க்சியம் முன்முயற்சி "
( NEO MARXISM INITIATIVE )
2015இல் உலக அரங்கில் புதிய அரசியல் அமைப்பு  உதயம்!
-------------------------------------------------------------------------------- 
சமூகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.
தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
இயங்குகிற எதுவும் மாற்றத்துக்கு உள்ளாகும்.
சமூகம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதால் 
சமூக விடுதலைக்கான தத்துவமும் மாற்றத்துக்கு உள்ளாகும்.

எனவே  சமூக விடுதலைக்கான மார்க்சியத் தத்துவமும்
மாற்றத்துக்கு உள்ளாவது இயற்கை.

மார்க்சியத்தின் தத்துவார்த்தப் பகுதியான,
இயக்கவியல் பொருள்முதல்வாதம் (ஆங்கிலத்தில் 
DIELECTICAL MATERIALISM ) என்பதில்,
பொருள்முதல்வாதம் என்பது காலத்தை 
வென்று நிற்கிறது.

ஆனால், இயக்கவியல் (அல்லது இயங்கியல், 
DIELECTICS ) என்பது அறிவியல் வழியாக 
ஆராயும்  இடத்து, முற்றிலும் தவறானது என்று 
நிரூபிக்கப் பட்டு விட்டது. 

இயக்கவியல் என்பது அறிவியலுக்கு எதிரானது!
பிற்போக்கானது! அடிப்படையில் தவறானது!
(இயக்கவியல் தவறானது என்று நிரூபித்து இருக்கும் 
எங்கள் படைப்புகளைப் படிக்கவும்.)         
இயக்கவியல் என்கிற தவறான ஆய்வு நெறியைக் 
கையாண்டதால்தான் மார்க்சியம் தோல்வி அடைய நேர்ந்தது.

வெல்லற்கரிய தத்துவம் என்று அறியப்பட்ட 
மார்க்சியத் தத்துவத்தை முடக்கிப் போட்டு விட்டது 
இயக்கவியல்.

எனவே இயக்கவியலை அகற்றிவிட்டு, அதன் இடத்தில் 
அறிவியலை வைப்பதன் மூலம் மார்க்சியத்தை 
வெல்லற்கரிய தத்துவமாக மாற்ற முடியும்.

மார்க்சியத்துக்குப் பின் ஆயிரம் தத்துவங்கள் 
( பின் நவீனத்துவம் போன்றவை ) வந்து விட்டன.
எனினும், அவை எவற்றாலும் மார்க்சியத்தை 
அகற்ற முடியவில்லை. மார்க்சியத்துக்கு 
மாற்றாக ( ALTERNATIVE ) ஆக முடியவில்லை.

பல்வேறு குறைகள் , போதாமைகள் இருப்பினும் 
இன்றளவும் மார்க்சியம் ஒன்றுதான் சமூக 
விடுதலைக்கான ஒரே தத்துவமாக மிளிர்கிறது.
எனவே அத்தகைய மார்க்சியத்தை, அதனினின்று  
இயக்கவியல் போன்ற பிற்போக்கு அம்சங்களைத் 
தூக்கி எறிவதன் மூலம் , சரி செய்ய முடியும்.
மாசு நீக்கித் தூய்மை ஆக்க முடியும்.   

இதன் மூலம் கோடானுகோடி உழைக்கும் 
மக்களின் கரங்களிலும் கருத்தினிலும் 
மார்சியம் ஒரு போர்வாளாகச் சுழலும்.
சமூக விடுதலை வசப்படும். 
இதை நோக்கிய நீண்ட பயணத்தில் 
" புதிய மார்க்சியம் முன்முயற்சி " 
தன முதல் அடியை எடுத்து வைக்கிறது.

2015இல் புதிய மார்க்சியம் முன்முயற்சி 
உலக அரங்கின் புதிய அரசியல் அமைப்பாக 
மலரும்.

சேர வாரும் செகத்தீரே!
விடுதலையை வென்றெடுப்போம்!
மார்க்சியத்தை வெல்லற்கரிய தத்துவமாக 
ஆக்கிக் காட்டுவோம்.

தோழமையுடன்,
 பி இளங்கோ சுப்பிரமணியன்,
அமைப்பாளர்,
புதிய மார்க்சியம் முன்முயற்சி 
சென்னை.
பி.கு: தேவையான அனைத்து விவரங்களும் 
            அடுத்த அறிக்கையில் 

********************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக