திங்கள், 8 டிசம்பர், 2014

பகவத் கீதையை ஆதரிக்கிறேன்!
-----------------------------------------------------  
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------ 
பகவத் கீதை தேசிய நூலாக அறிவிக்கப்பட 
இருக்கிறது.இந்தச் செய்தி கேட்டவுடன் 
நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

ஏனெனில், வாத்சாயனர் எழுதிய 
காமசூத்திரத்தையோ  (KAMASUDRA)  
அல்லது கொக்கோக முனிவர் எழுதிய
கொக்கோக சாஸ்திரத்தையோ  தேசிய நூலாக 
அறிவித்து விட்டால் என்ன செய்வது 
என்று அஞ்சிக் கொண்டு இருந்தேன்.
நல்ல வேளை! நான் அஞ்சியது போல் 
எதுவும் நடக்கவில்லை. 

எனவே, நான் கேட்கிறேன்,  
பகவத் கீதையை ஆதரிப்பதில் 
என்ன தப்பு?

கொக்கோக சாஸ்திரம் தேசிய நூலாகி 
விட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்று 
சிந்தித்துப் பாருங்கள். 2030ஆம் ஆண்டுக்குள் 
நாட்டின் மக்கள்தொகை 200 கோடியை 
எட்டிவிடும் 60 பேர் செல்லக்கூடிய பேருந்தில் 
1000 பேர்  செல்ல நேரிடும். வாழ்க்கை வாழத் 
தகுதி அற்றதாகி விடும். 

ஆனால், பகவத் கீதை தேசிய நூலாகி 
விடுமானால், என்ன நடக்கும். நல்லது 
நடக்கும். பகவத்கீதை வன்முறையைப் 
போதிக்கும் நூல்.அதைப் படித்து விட்டு, 
நாட்டு மக்கள் ஒருவருக்கு 
ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு 
செத்துப் போவார்கள். மக்கள்தொகை குறையும்.
மக்கள்தொகை குறைந்தால் நாட்டுக்கு, 
ஏன், உலகத்துக்கே நல்லது தானே!

எனவே, பகவத் கீதையை ஆதரிப்போம்.
*********************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக