பகவத் கீதை ஒரு மத நூல் அல்ல!
-----------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
--------------------------------------------------------------
1) பகவத் கீதை என்பது இந்து மதத்தின் நூல் அல்ல.
வேறு எந்த மதத்தின் நூலும் அல்ல.
கீதை எழுதப்பட்ட காலத்தில் இந்து மதம்
என்ற ஒன்று இல்லவே இல்லை.
இனக்குழுச் சமூகங்கள் மட்டுமே அன்று இருந்தன.
அவை இயற்கை வழிபாட்டைக் கொண்டு இருந்தன.
சூரியனை வணங்குவது, சந்திரனை வணங்குவது,
நெருப்பை வணங்குவது, மழையை வணங்குவது
முன்னோர்களை வணங்குவது போன்ற
வழிபாட்டு முறைகள் மட்டுமே அன்று இருந்தன.
2) மேலும், மதம் என்பதன் இலக்கணப்படி,
இந்து மதம் ஒரு மதமே இல்லை. மதம் என்றால்,
அதை ஒருவர் ஸ்தாபித்து இருக்க வேண்டும்.
இந்து மதத்தை எவரும் ஸ்தாபிக்கவே இல்லை.
மதம் என்றால், அதற்கென்று ஒரு புனிதநூல்
இருக்க வேண்டும். இந்து மதத்துக்கு எந்த ஒரு
புனித நூலும் கிடையாது. பகவத் கீதை இந்து மதத்தின்
புனிதநூல் என்று சில மூடர்கள் உரிமை
கூறுவதனாலேயே, அது இந்து மதத்தின்
புனித நூல் ஆகி விடாது.
3) கீதையின் சாரம் என்பது வருணாசிரமம்.
நால்வகை வருணத்தை நியாயப் படுத்துவதே கீதை.
4) "சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் " என்று
கீதையில் பகவான் கூறுகிறார். இதன் பொருள்,
"நால் வகை வருணத்தையும் உண்டாக்கியவன் நானே"
என்பது இதன் பொருள்.
5) வருண ஒழுக்கம் நிலை பெற வேண்டும்,
அந்தந்த வர்ணத்தினர் அந்தந்த ஒழுக்கங்களைக்
கடைப்பிடிக்க வேண்டும் என்பதே கீதையின் சாரம்.
6) கீதையில் குறிக்கப் படும் "வருணம்" என்பது
இன்றைய சாதியைக் குறிக்கும் என்பதில்
யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
7) மானுட சமூகம் பல்வேறு கட்டங்களைக்
கடந்து வந்திருக்கிறது. தற்கால உலக சமூகத்தில்
மக்களைப் பிளவு படுத்துகிற சக்தியாக மதம்
இருக்கிறது. ஆனால் கீதையின் காலத்தில்
இந்திய சமூகத்தில் மதம் என்ற ஒன்று
இல்லவே இல்லை.
கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம், பௌத்தம்,
சமணம், இந்துயிசம் ( HINDUISM ) ஆகிய
அனைத்து மதங்களுமே கீதையின் காலத்தில் இல்லை.
8) எனவே கீதையை ஒரு மதநூல் என்று
குறிப்பிடுவதன் மூலம், அதன் தீங்கான
அழிவுகரமான சாதிய உள்ளடக்கத்தை
மூடி மறைக்கும் முயற்சிகள்தாம் நடைபெற்று
வருகின்றன.
9) கீதையின் சாரம் வருணம். அதாவது சாதி!
மதம் அல்ல.
10) கீதை ஒரு மதநூல் என்று கூறுவதன் மூலம்
அதன் சாதியப் புண்ணுக்குப் புனுகு தடவும்
முயற்சிகள் தவறானவை.
11) எவன் ஒருவன் சாதியை எதிர்க்க
முன்வருகிறானோ, அவனால் மட்டுமே
கீதையை எதிர்க்க முடியும். எதிர்த்து
முறியடிக்க முடியும். கீதையை எதிர்ப்பது என்பது
சாதியை எதிர்ப்பது.
12) "இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு.
கீதை இந்து மதத்தின் நூல்". எனவேதான்
கீதையை எதிர்க்கிறேன் என்பவன் சாதிக்கு
வக்காலத்து வாங்கும் தந்திரக்காரனே.
130 எனவே, சாதி ஒழிப்பின் வாயிலாக
கீதையை முறியடிப்போம்.
*****************************************************

//
பதிலளிநீக்கு6) கீதையில் குறிக்கப் படும் "வருணம்" என்பது
இன்றைய சாதியைக் குறிக்கும் என்பதில்
யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.//
இது அபத்தமான கருத்து..
ஜாதி என்பது பிறப்பை சார்ந்தது. மக்களால் உண்டாக்கப்பட்டது. மாற்றப்படக் கூடியது.
வர்ணம் என்பது ஒருவரின் குணம், செயல், தொழில் சார்ந்தது. இது பகவானால் உண்டக்கப்பட்டது. மற்ற முடியாதது.