வெள்ளி, 19 டிசம்பர், 2014

அமிதஷா வருகையும் அதிரடி மாற்றமும்!
---------------------------------------------------------------------  
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------- 
பாஜக தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
மறைமலைநகரில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் 
பேச இருக்கிறார். தமிழ் மண்ணில்  பல மாயங்களை 
அவர் நிகழ்த்திக் காட்டுவார். திராவிட இயல் சித்தாந்தத்தை 
அவர் வீழ்த்தி விடுவார். தமிழ் மண்ணில்  பாஜக சித்தாந்தத்தை 
அவர் வேரூன்றச் செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் 
பாஜக அன்பர்கள் பகல் கனவு கண்டு வருகின்றனர். 

திமுகவை, அதிமுகவை, மதிமுகவை தேர்தல் அரசியலில் 
பாஜகவால் வீழ்த்த முடியாது என்பது ஒரு ஒளிவீசும் உண்மை.
அதிகபட்சம் பாஜகவால் சில சிராய்ப்புகளை மட்டுமே 
ஏற்படுத்த முடியும்.

மார்க்சியத்தால் வீழ்த்த  முடியாத,
சாரு  மஜும்தாரின் நக்சல்பாரி இயக்கத்தால் வீழ்த்த முடியாத, 
மாவோயிசத்தால் வீழ்த்த முடியாத,
திராவிடயியல் சித்தாந்தத்தை 
பிற்போக்கான பாஜக சித்தாந்தம் வீழ்த்திவிடும் 
என்று நினைப்பது மடமை. பேதைமையுள் எல்லாம் பேதைமை. 

"If wishes were horses, then beggers would ride"  என்று ஒரு 
ஆங்கிலப் பழமொழி உண்டு. "ஆசைகள் குதிரைகள் 
ஆனால், அப்புறம் பிச்சைக்காரன் கூட குதிரைச் சவாரி 
செய்வான்" என்று இதற்குப் பொருள். பாஜகவுக்கு 
இது மிகச் சரியாகப் பொருந்துகிறது.

ஜூலியஸ் சீசர் சென்ற இடங்களில் எல்லாம் வென்றான்.
" I CAME, I SAW, I CONQUERED " ( வந்தேன், கண்டேன், வென்றேன் )
என்று பெருமிதத்துடன் கூறினான். ஆனால், அமித் ஷா 
ஜூலியஸ் சீசர் அல்லர்.

கி.பி 3014இல் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க 
வாழ்த்துகிறேன்.
*****************************************************************   
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக