கலைஞரும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும்!
-----------------------------------------------------------------------------
1) இந்தக் குறுங்கட்டுரையில் இரண்டு விஷயங்கள்
பேசப்படுகின்றன.
2) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது
காங்கிரஸ் முடிவுகள் மற்றும் பல ஆண்டுகளுக்கு
முன்பு நடைபெற்ற திருச்சி தி.மு.க மாநாட்டில்
நிறைவேற்றப்பட்ட முழக்கங்கள்.
3) இருபதாவது காங்கிரசில் "பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம்" என்ற காரல் மார்க்சின் கோட்பாட்டுக்குச்
சமாதி கட்டப் பட்டது. "அமைதி வழியில் சோஷலிசம்"
(peaceful transtition to socialism ) என்ற புதிய கொள்கை
முடிவு எடுக்கப் பட்டது.
4) திருச்சி திமுக மாநாட்டில் பல்வேறு முழக்கங்கள்
அறிவிக்கப் பட்டன. " அண்ணா வழியில் அயராது உழைப்போம்",
"மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" போன்றவை.
அவற்றுள் முக்கியமானது:
--------------------------------------
"வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்" என்ற முழக்கம்.
5) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் "அமைதி வழியில்
சோஷலிசம்" என்ற முழக்கமும், திமுகவின் "வன்முறை
தவிர்த்து வறுமையை வெல்வோம்" என்ற முழக்கமும்
சமம் ஆனவை. இரண்டும் ஒரே கருத்தைத்தான்
கூறுகின்றன.
6) சோஷலிசம் என்பது வறுமையை வெல்வது.
அமைதி வழி என்பது வன்முறை தவிர்த்த வழி.
எனவே இரண்டும் ஒன்றே!
7) மார்க்சியத்தையும் உள்ளடக்கியதாக திராவிடயியல்
சித்தாந்த்தம் இருப்பதால்தான், மார்க்சியத்தால்
அதை வெல்ல முடிய வில்லை.
******************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக