மோடி அரசின் UPS திட்டமும்
பழைய பென்ஷன் திட்டமும்; ஒரு ஒப்பீடு!
---------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் BSNL.
-------------------------------------------------------------------
சுதந்திர இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்காக
ஒரு பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது
CCS Pension Rules 1972 என்னும் சட்ட திட்டப்படி அமைந்தது.
இது பழைய பென்ஷன் திட்டம் (Old Pension Scheme)
என்று அழைக்கப் படுகிறது. பழைய திட்டம் என்பது
அதன் அதிகாரபூர்வ பெயர் அல்ல. ஊடகத்தினராலும்
மக்களாலும் வழங்கப் படுகிற பெயர் மட்டுமே.
வயதில் மூத்த தகுதி வாய்ந்த மத்திய அரசு ஊழியர்கள்
அனைவரும் இத்திட்டத்தின் கீழ்தான் பென்ஷன்
பெறுகின்றனர். போன மில்லேனியத்தில் பணிஓய்வு
பெற்ற ஊழியர்கள் பெறுவது பழைய பென்ஷன்
திட்டத்திலேயே. பழைய பென்ஷன் என்பது ஏகப்
பொருத்தமான பெயரே.
(இக்கட்டுரை ஆசிரியரும் பழைய பென்ஷன்
பெறுபவரே! முப்பதாண்டு கால தமது தொழிற்சங்கப்
பணியினூடே இந்தியாவின் பென்ஷன் திட்டங்கள்
குறித்த அகல்விரிவானதும் ஆழமானதுமான
(comprehensive and deep) அறிவைப் பெற்றவர்
இக்கட்டுரை ஆசிரியர்).
பழைய பென்ஷன் திட்டம் 31.12.2003ல் முடித்து வைக்கப்
பட்டது. ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களைத்
தவிர புதிதாக எவரும் இத்திட்டத்தில் உறுப்பினராக
முடியாது. இத்திட்டம் முடிவுக்கு வந்த மறுநாள்
முதல், அதாவது ஜனவரி 1, 2004 முதல் NPS எனப்படும்
தேசிய பென்ஷன் திட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு
வந்தது. இத்திட்டத்தைக் கொண்டு வந்தவர்
அன்றைய பிரதமர் வாஜ்பாய் (1999-2004) ஆவார்.
இத்திட்டம் கொண்டு வரப்பட்ட ஜனவரி 2004ஐத்
தொடர்ந்து அதே ஆண்டில் (மே 2004) காங்கிரசின்
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராகப் பதவி ஏற்றார்.
வாஜ்பாயின் NPS திட்டத்தை மன்மோகன்சிங்
நிராகரிக்கவில்லை; அதை அப்படியே கடைப்பிடித்தார்.
இன்று கூச்சலிடும் கம்யூனிஸ்ட்டுகள் அன்று NPS திட்டத்தை
எதிர்க்கவில்லை. NPS திட்டத்தை ரத்து செய்து விட்டு
பழைய பென்ஷன் திட்டத்திற்குத் திரும்ப வேண்டும்
என்று CPI, CPM கட்சிகள் மன்மோகன்சிங்கிற்கு
எவ்வித நெருக்குதலும் கொடுக்கவில்லை! நெருக்குதலை
விடுங்கள்; ஒரு கோரிக்கைகூட வைக்கவில்லை.
இக்காலக்கட்டத்தில் (UPA-I 2004-2009) மன்மோகன் அரசுக்கு
கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தார்கள்.
தொழிலாளி விரோத NPS திட்டத்தை எதிர்க்காத
இவர்களை போலி கம்யூனிஸ்ட்கள் என்று
மக்கள் சரியாகவே அழைக்கிறார்கள்.
பழைய பென்ஷன் திட்டத்தில் (OPS) இல்லாத என்னென்ன
நன்மைகள் மோடி அரசின் UPS திட்டத்தில் உள்ளன?
--------------------------------------------------------------------------------
1) OPSல் குடும்ப பென்ஷன் 30 சதவீதம் வழங்கப்படும்;
அதாவது ஊழியரின் Last pay drawnல் 30 சதவீதம்.
மோடி அரசின் UPSல் குடும்ப பென்ஷன் 60 சதவீதம்
ஆகும். அதாவது ஓய்வூதியதாரர் இறக்கும் நாளன்று
எவ்வளவு பென்ஷன் வாங்கினாரோ அதில் 60 சதவீதம்
அவரின் மனைவிக்கு குடும்ப பென்ஷனாக
வழங்கப் படும்.
2) OPSல் பணிக்கொடை (gratuity) மட்டுமே பணிஒய்வு
பெற்றவருக்கு கிடைக்கும் பெருந்தொகை ஆகும்.
மோடி அரசின் UPS திட்டத்தில் பணிக்கொடை
மட்டுமின்றி, பென்ஷன்தாரருக்கு ஒரு பெருந்தொகை
(lump sum grant) பணிஓய்வு பெறும்போது வழங்கப்
படுகிறது. இது இந்திய பென்ஷன் வரலாற்றில்
முன்கண்டிராத ஒன்றாகும்.
---------------------------------------------------------------
பின்குறிப்பு;
UPS திட்டம் contributory scheme ஆகும். இன்றைய நிலையில்
இது காலத்தின் கட்டாயமாக ஆகி உள்ளது எப்படி என்பதை
அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
*****************************************************
.