மோடி அரசின் UPS என்னும் புதிய பென்ஷன் திட்டம்!(
UPS = Unified Pensionn Scheme )
முழுமையான விளக்கம்!
------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் தொழிற்சங்கத் தலைவர், BSNL.
---------------------------------------------------------------------------------
1) இந்தியாவின் மத்திய மாநில அரசு ஊழியர்களின்
பென்சன் பிரச்சினைகளுக்குத் தீர்வாக மோடி அரசு
UPS எனப்படும் ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை
அறிமுகம் செய்துள்ளது.
2) இத்திட்டம் (UPS) அடுத்த ஆண்டு ஏப்ரல் 1, 2025 முதல்
அமலுக்கு வரும்.
3) இத்திட்டத்தில் சேர, ஒரு அரசு ஊழியர் 10 ஆண்டு
சேவை நிறைவு செய்திருக்க வேண்டும். பத்தாண்டிற்குக்
குறைவான சேவை உடையோர் இத்திட்டத்தில்
சேர இயலாது.
4) முழுமையான பென்சன் (full pension) பெறுவதற்கு ஓர்
அரசு ஊழியர் 25 ஆண்டு சேவை நிறைவு செய்திருக்க
வேண்டும். 1970, 80களில் full pension பெறுவதற்கு
33 ஆண்டு சேவை நிறைவு செய்திருக்க வேண்டும்
என்ற நிலையை 5ஆவது சம்பளக் கமிஷன்
அமலாக்கத்தின்போது நாம் கடந்து வந்ததை
தோழர்களுக்கு நினைவு படுத்துகிறேன்.
5) UPS திட்டம் ஊழியரின் பங்களிப்பைப் பெறும்
திட்டம் ஆகும் (contributory scheme. ஊழியரின் அடிப்படைச்
சம்பளத்தில் 10 சதவீதத்தை பென்ஷனுக்காகச் செலுத்த
வேண்டும். அரசு 14 சதவீதம் செலுத்தும். இது 18.5 சதவீதமாக
அரசால் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.
6) இத்திட்டத்தில் ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன.
அ) மாதாந்திர பென்ஷன் தொகை உறுதி செய்யப்
படுகிறது. Quantum of pension in Rupees is ensured. தற்போது
நடப்பில் உள்ள தேசிய பென்ஷன் திட்டத்தில் (NPS)
மாதாந்திர பென்ஷனின் தொகை உறுதி செய்யப்
படவில்லை. இந்த மாதம் ஒருவருடைய பென்ஷன்
ரூ 10,000 என்றால், அடுத்த மாதம் அது ரூ 8000
என்பதாக இருக்கும். இதைப்போல அல்லாமல்
மோடி அரசின் UPS திட்டத்தில் பென்ஷன் தொகை
உறுதி செய்யப் படுகிறது.
ஆ) குறைந்தபட்ச பென்ஷன் தொகை மாதம் ரூ 10,000
என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இ) ஒரு பென்ஷன்தாரர் இறந்து விட்டால், அவரின்
மனைவிக்கு அல்லது வாரிசுக்கு பென்ஷன் வழங்கப்படும்.
இது குடும்ப பென்ஷன் (Family Pension) ஆகும்.
பென்ஷன்தாரர் எவ்வளவு பென்ஷன் வாங்கினாரோ
அதில் 60 சதவீதம் குடும்ப பென்ஷனாக வழங்கப்படும்.
ரூ 20,000 மாத்திரை பென்ஷன் வாங்கிய பென்ஷன்தாரர்
இறந்து விட்டால், அவரின் மனைவிக்கு மாதந்தோறும்
ரூ 12,000 குடும்ப பென்ஷனாக வழங்கப்படும்.
ஈ) UPS திட்டப்படி பெறும் பென்ஷனுக்கு பஞ்சப்படி உண்டு.
(Dearness Allowance is applicable). பணியில் இருக்கும்
அரசு ஊழியர் எவ்வளவு பஞ்சப்படி பெறுகிறாரோ,
அதே கணக்கீட்டின்படி பென்ஷன்தாரரும் பஞ்சப்படி
பெறுவார்.
ரூ 20,000 Basic Pay உடைய, பணியில் இருக்கும் ஒரு
அரசு ஊழியர் ரூ 30,000 பஞ்சப்படி வாங்கினால்,
ரூ 20,000 Basic Pension உடைய ஒரு பென்ஷன்தாரரும்
அதே ரூ 30,000ஐ பஞ்சப்படியாகப் பெறுவார்.
விலைவாசிக் குறியீட்டு எண்ணான AICPI
(All India Consumer Price Index) என்பது பணியில்
இருப்பவருக்கும் பென்ஷன்தாரருக்கும் பொதுவானதுதானே!
(உ) இத்திட்டத்தின் ஐந்தாவது அம்சம் மிகவும்
அதிரடியானது. இந்தியாவின் பென்ஷன் வரலாற்றில்
இதுவரை இல்லாதது (unprecedented). பணிஓய்வின்போது,
ஒய்வு பெறும் அரசு ஊழியருக்கு (பென்ஷன்தாரருக்கு)
ஒரு பெருந்தொகையை மோடி அரசின் UPS திட்டம்
வழங்குகிறது. (A lump sum grant). ஏற்கனவே பணிக்கொடை
எனப்படும் DCRGஐ (Death cum Retirement Gratuity)
பென்ஷன்தாரர் பெறுகிறார். அதுபோக
இப்பெரும்தொகையையும் அவர் பெறுவார்.
ஊ) பெருந்தொகையாக எவ்வளவு தரப்படும் என்று
பார்ப்போம். இந்தக் கணக்கீட்டுக்கு அரசு ஊழியரின்
மாதச்சம்பளம் (monthly emoluments) கணக்கில் கொள்ளப்
படுகிறது. இங்கு மாதச்சம்பளம் என்பது Pay plus DA
மட்டுமே. HRA, CCA போன்றவற்றைச் சேர்க்கக் கூடாது.
மாதச்சம்பளத்தில் அதாவது Pay plus DAவில் 10 சதவீதம்
கணக்கிடப்படும். ஊழியரின் Basic Pay ரூ 20,000
என்றும் DA ரூ 30,000 என்றும் கொண்டால் இவ்விரண்டின்
மொத்தம் ரூ 50,000 ஆகும். இதில் 10 சதவீதம் என்பது
ரூ 5000 ஆகும். இந்த 10 சதவீதம் என்பது ஆறு மாத
காலத்திற்கானது. ஒரு ஊழியரின் சேவைக்காலத்தில்
எத்தனை ஆறுமாதம் உள்ளதோ, அத்தனை முறை
10 சதவீதம் வழங்கப்படும்.
உதாரணமாக ஒரு ஊழியர் 30 ஆண்டு சேவை முடித்து
உள்ளார் என்று கொள்வோம். இங்கு 30 ஆண்டு என்பது
60 ஆறுமாதங்களைக் கொண்டது. முதல் ஆறுமாதத்திற்கு
ரூ 5000 என்றால், 60 ஆறுமாதங்களுக்கு ரூ 60 x 5000 = 3,00,000.
ஆக பெருந்தொகையாக ஊழியருக்கு ரூ 3 லட்சம்
கிடைக்கும்.
7) ஆக UPS திட்டம் ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்டது.
a) quantum of pension assured.
b) minimum pension ensured
c) Family Pension guaranteed.
d) Linked with price index and hence DA
e) Lump sum grant.
8) பென்ஷனின் அளவு!
----------------------------------
ஒரு ஊழியர் கடைசியாக எவ்வளவு சம்பளம்
வாங்குகிறாரோ (last pay drawn) அதில் பாதி, அதாவது
50 சதவீதம் அவருக்கு பென்ஷனாக வழங்கப்படும்.
இங்கு last pay drawn என்பது ஊழியர் பணிபுரிந்த கடைசி
ஆண்டின் சராசரி ஆகும். இங்கு Pay என்பது Basic Payஐ
மட்டுமே குறிக்கும்.
உதாரணமாக ஒரு ஊழியர் கடைசியாக வாங்கிய
சம்பளம், அதாவது அவரின் Basic Pay ரூ 20,000
என்றால், அவருடைய பென்ஷன் ரூ 10,000 ஆகும்.
இந்த ரூ 10,000 Basic Pension எனப்படும். இதன் மீது
பஞ்சப்படி கணக்கிடப்பட்டு சேர்க்கப்படும்.
9) UPS திட்டத்தில் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்
பயன் பெற இயலும். இதில் மாநில அரசு
ஊழியர்களும் சேரலாம்.
10) இந்தியாவில் தற்போது மூன்று பென்ஷன் திட்டங்கள்
உள்ளன. அ) மோடி அரசின் UPS திட்டம். ஆ) 2004ல்
கொண்டு வரப்பட்ட தேசிய பென்ஷன் திட்டம் (NPS)
இ) 1950, 60 முதல் இன்றும் தொடரும் கடந்த
மில்லேனியத்தைச் சேர்ந்த பழைய பென்ஷன் திட்டம்.
இந்தியாவின் அரசு ஊழியர்களின் பென்ஷன்
பிரச்சினைகள் அனைத்துக்குமான தீர்வாக மோடி அரசு
UPS திட்டத்தை முன்வைத்துள்ளது. 90 சத்வீதத்திற்கும்
மேற்பட்ட பென்ஷன் பிரச்சனைகளை UPS திட்டம்
தீர்த்து வைக்கும் என்பதை அனைவரும் உணரலாம்.
**********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக